கோவில் நிதியை அப்படியே வைத்திருப்பதால் என்ன பயன்?

அதை பக்தர்களின் மேம்பாட்டிற்காக செலவிடுவது குற்றமாகாது. எனவே, சட்டத்திற்கு உட்பட்டு அறங்காவலர் குழு ஒப்புதலோடு, அந்த நிதியை கலாச்சார மையத்திற்கு பயன்படுத்த இருக்கின்றனர்” என்று மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிதியில், 29 கோடி ரூபாய் செலவில் கலாச்சார மையம் அமைக்கப்போவதாக கூறப்படும் விவகாரத்தில் ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு அவர்கள் கூறியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கோவில்களின் நிதியை அந்தந்த கோவில்களின் மேம்பாட்டிற்காக தான் செலவிட வேண்டும் என்பது விதி. கோவில்களின் மேம்பாட்டிற்காக தான் பக்தர்கள் […]

அஸ்தினாபுரம் புற்று ஸ்ரீதேவி கருமாரியம்மன் ஆலயம்

அஸ்தினாபுரம் வினோபாஜி நகரில் அமைந்திருக்கும் புற்று ஸ்ரீதேவி கருமாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரியை முன்னிட்டு அம்பாள் வராகி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த போது எடுத்த படம்.

குரோம்பேட்டை புருஷோத்தமன் நகர் விஜய கணபதி லட்சுமி நாராயண பெருமாள் ஆலயம்

குரோம்பேட்டை புருஷோத்தமன் நகர் விஜய கணபதி லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தில் நவராத்திரியை முன்னிட்டு நேற்று அம்பாள் அன்னபூரணி அலங்காரத்திலும் பெருமாள் சீனிவாசன் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சியளித்த போது எடுத்த படம்.

மருதமலை சிறப்புகள்

மருதமலை 837 படிகளுடன் அமைந்த மலைக் கோவில்.இங்கு வரதராஜப் பெருமாளுக்கு சன்னதி இருக்கிறது.பாம்பாட்டிச் சித்தர் சன்னதி செல்லும் வழியில் சப்த கன்னியர் சன்னதி உள்ளது. ஆடிப் பெருக்கின் போது இங்கு விசேஷ வழிபாடு நடக்கிறது.பாம்பாட்டிச் சித்தர் சன்னதியிலுள்ள பாறையில் நாக வடிவம் இருக்கிறது. இந்த நாகத்தின் வடிவிலேயே பாம்பாட்டிச் சித்தருக்கு முருகன் காட்சி தந்தார்.மருத மலையில் முருகனின் அருள்பெற்ற பாம்பாட்டிச் சித்தர், முருகனுக்கு புதிய சிலை வடித்தார். இந்த சிலையே மூலஸ்தானத்தில் இருக்கிறது.விநாயகர், முருகனை வேண்டி மரத்தில் […]

சென்னகேசவர் கோவிலில் அதிசய தூண்

சென்னகேசவப் பெருமாள், பெண் உருவில் இத்தலத்தில் காட்சியளிக்கிறார். இந்த ஆலயத்தில் 42 அடி உயரம் கொண்ட தூண் நிறுவப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ளது, பேளூர் என்ற இடம். இது ஹோய்சாலப் பேரரசின் ஆட்சி காலத்தில் தலைநகராக இருந்த ஊர் ஆகும். இங்கு சென்னகேசவர் கோவில் இருக்கிறது. இந்த ஆலயம் முன் காலத்தில் ‘விஜயநாராயணர் கோவில்’ என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. திருமாலை முக்கிய கடவுளாகக் கொண்டிருக்கும் இந்த ஆலயம், வைணவர்களின் வழிபாட்டு யாத்திரையில் சிறப்பிடம் பெறுகிறது. […]

இலவச தரிசனம்.. “சட்டத்தில் இடமில்லை..” – சமயபுரம் கோயிலில் வெடித்த சர்ச்சை

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையரை கண்டித்து, பொதுமக்கள், கடை உரிமையாளர்கள் கருப்பு ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உள்ளூர் மக்கள் மற்றும் கடை உரிமையாளர்களும் கட்டணமில்லாமல் அனுமதிக்க முடியாது என கோயில் நிர்வாகம் கூறியுள்ளதாக குற்றம் சாட்டினர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய இணை ஆணையர் கல்யாணி, இலவசமாக சாமி தரிசனம் செய்ய சட்டத்தில் இடமில்லை என கூறியுள்ளார். இதனால், நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் கூறியதால், தீர்வு […]

பழனி முருகன் கோயிலில் செல்போனுக்கு தடை!

பழனி முருகன் கோயிலில் இன்று முதல் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்களது செல்போன் மற்றும் கேமராக்களை பாதுகாப்பாக மலையடிவாரத்தில் ஒப்படைத்துச் செல்ல வசதியாக, கோயில் நிர்வாகம் சார்பில் கைப்பேசி வைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 5 கட்டணம் செலுத்தி, ரசீதை பெற்றுக் கொண்டு பக்தர்கள் செல்போனை இங்கு வைத்துச் செல்லாலாம். பின் மீண்டும் தரிசனம் முடித்த பின், ரசீதை கொடுத்து செல்போனை பெற்றுச் செல்லலாம்.

திருப்பதியில் 7வது நாள் பிரமோற்சவம்;

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 7வது நாள் பிரமோற்சவ விழாவில் தங்க சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரமோற்சவத்தின் 7வது நாளான நேற்று 7 குதிரையில் சூரியனுக்கு ரத சாரதியாக அருணன் இருக்க கிரகங்களுக்கு அதிபதியான சூரிய பிரபையில் தசாவதாரம் பெருமாளாக எழுந்தருளி மலையப்ப சுவாமி […]

குரோம்பேட்டை ராதா நகர் ஸ்ரீ ராம சுப்பிரமணிய சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது

குரோம்பேட்டை ராதா நகர் அனுமார் கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ராமசுப்பிரமணிய சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. காலை 10 மணி அளவில் வேத விற்பனர்களும் பட்டாச்சாரியார்களும் விமான கோபுரங்களுக்கு கலச புனித நீர் ஊற்றப்பட்டு ஆலயத்தில் அமைந்திருக்கும் பரிவார மூர்த்தி களுக்கும் புனித கலச நீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்து தீபாதாரனை செய்தனர். இந்நிகழ்வில் சுற்று வட்டாரத்திலிருந்து திறனான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் பல்லாவரம் […]