ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வளாகத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை – எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்ற வியாபாரியால் பரபரப்பு

ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் பிரசாதம் விற்க வேண்டும், அதனை மீறி கோவில் வளாகத்தில் பிரசாதங்கள் விற்கக் கூடாது என அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி இன்று ஆக்கிரமிப்பை அகற்றும் போது எதிர்ப்பு தெரிவித்து ராமர் என்பவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

சபரிமலை அய்யப்பன் கோவிலில் 16ம் தேதி நடை திறப்பு!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு ஆண்டு மண்டல மகரவிளக்கு சீசனை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் அட்டவணை வௌயிடப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற 16ம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். 17ம் தேதி முதல் டிசம்பர் 27ம் தேதி வரை 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும். 27ம் தேதி இரவு நடை அடைக்கப்படும். மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் மாதம் 30ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். 31ம் […]

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் குடமுழுக்கு விழா

தமிழில் வேத மந்திரங்கள் ஒலிக்க ஆஞ்சநேயருக்கு நன்னீராட்டு – ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் அமைச்சர் மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்பு

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் வரலாறு

ராமரின் மனைவியான சீதையை இலங்கையில் இருந்து காப்பாற்ற ஆஞ்சநேயா உதவுகிறார், அங்கு அவர் இலங்கை அரக்க மன்னன் ராவணனால் சிறைபிடிக்கப்பட்டார். ஆஞ்சநேயர் ராமரின் சிறந்த பக்தர் மற்றும் அவரது வலிமை மற்றும் வலிமைக்கு பெயர் பெற்றவர். இன்று, அவர் இந்த குணங்களின் உருவகமாக பார்க்கிறார், மேலும் தைரியத்தையும் நம்பிக்கையையும் பெற விரும்புவோர் அனுமனை வணங்குவது அத்தகைய குணங்களைப் பெற உதவும் என்று நம்புகிறார்கள். ஹனுமான் சாலிசா என்பது ஹனுமானிடம் பிரார்த்தனை செய்யும் ஒரு பாடல் மற்றும் பல்வேறு […]

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக விழா நாளை (நவ.1-ம் தேதி) கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி முதல் கால யாக சாலை பூஜை நேற்று நடைபெற்றது. நாமக்கல் நகரின் மையப் பகுதியில், ஸ்ரீ நரசிம்ம சுவாமி மற்றும் நாமகிரித் தாயார் கோயில் எதிரில் ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கடந்த 1996-ம் ஆண்டு கோயில் கும்பாபிஷேகம் […]

நாகவழிபாடு செய்யும் முறைகள்

புற்று இருக்கும் இடத்தைச் சுற்றி முதலில் சாணத்தால் மெழுகிக் கோலமிட வேண்டும். தினமும் காலையும், மாலையும் விளக்கேற்றிப் பால் வைத்து வழிபடுவது மிகவும் நல்லது. சூடம் ஏற்றி வழிபாடு செய்து புற்றுக்குப் பால் ஊற்றினால் நல்லது நடக்கும்.புற்று முழுவதும் மஞ்சளைப் பூசி, அங்கங்கே குங்குமப் பொட்டு வைப்பது தமிழ்நாட்டில் சில இடங்களில் வழக்கமாக உள்ளது. சில பெண்கள் புற்றுக்கு முன்பாகப் பொங்கல் இட்டு படைப்பதுண்டு தங்களது வேண்டுதல்கள் நிறைவேறப் பிரார்த்தித்து மஞ்சள் நிற எலுமிச்சையை புற்றின் மீது […]

1500 ஆண்டு பழமையான வேலூர் ஜலகண்டேஸ்வரர் திருக்கோவில்

வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இருக்கும் கிணற்றில் உள்ள தண்ணீரானது, கங்கை நதிக்கு இணையாக கூறப்படுகிறது. ஈஸ்வரலிங்கம் லேசான கூம்பு வடிவத்தில் காணப்படுகிறது. ஜலகண்டேஸ்வரர் வீற்றிருக்கும் வேலூர் என்ற ஊரானது வேலங்காடு என்ற புராண பெயரைக் கொண்டது. இந்த கோவில் சுமார் 1,500 ஆண்டுகள் பழமையான கோயிலாக கருதப்படுகிறது. இத்தலத்தில் உள்ள லிங்கம் சப்தரிஷிகளில் ஒருவரான அத்திரி என்பவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.இந்த சிவலிங்கத்திற்கு கீழே தண்ணீர் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இங்கு அருள்பாலிக்கும் சிவபெருமானுக்கு ஜலகண்டேஸ்வரர் என்ற பெயர் […]

குரோம்பேட்டை சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா

குரோம்பேட்டையில் உள்ள சிவன் கோவில்களில் ஐப்பசி மாத அன்னாபிஷேகத்தை முன்னிட்டு புருஷோத்தம நகர் விஜய கணபதி லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தில் காசி விஸ்வநாதர் அன்னாபிஷேக அலங்காரத்திலும், காந்திஜி நகர் துர்க்கை அம்மன் ஆலயத்தில் அமிர்தகடேஸ்வரர் அன்னாபிஷேக காட்சியிலும், ராதா நகர் ஸ்ரீ ராமசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் காசி விஸ்வநாதர் அன்னாபிஷேக காட்சியிலும், பத்மநாப நகர் கருமாரியம்மன் ஆலயத்தில் சுந்தரேஸ்வரர் ஸ்ரீ ரங்கநாதர் அன்னாபிஷேக அலங்காரத்திலும் கருமாரியம்மன் பவுர்ணமி அபிஷோகம் அலங்காரம் செய்து பக்தர்களுக்கு காட்சியளித்த போது […]

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் 30 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மகா கும்பாபிஷேகம்

30 ஆண்டுகளுக்கு பிறகு இன்று சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடக்கிறது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு ஆகியோர் பங்கேற்கிறார்கள்.சேலம்கோட்டை மாரியம்மன் சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராஜகோபுரத்திற்கு கடந்த 1993-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பிறகு கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. கோவிலில் பழுதான மண்டப கட்டிடங்கள் சீரமைக்கும் திருப்பணிகள் நடந்தன. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 2-ந் தேதி கோவில் வளாகத்தில் முகூர்த்தகால் நடப்பட்டு […]