சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் உள்ள அனைத்து மீன்களும் செத்து மிதக்கின்றன

இதனால் அந்த பகுதி மிகவும் துர்நாற்றம் அடைந்து பக்தர்கள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளார்கள்

மதுரை கள்ளழகர் கோயில் ராஜகோபுரம் கும்பாபிஷேகம் கோலாகலம்

யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் ராஜகோபுர கலசங்களில் ஊற்றப்பட்டது ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், அனைவரும் விழாவை காண தடுப்புகள் அமைத்து ஏற்பாடு 120 அடி உயரம் கொண்ட ராஜகோபுரத்தில் ரூ.2 கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன கடுக்காய், சுண்ணாம்பு, பனங்கற்கண்டு ஆகிய பொருட்களை கொண்டு புனரமைப்பு

குரோம்பேட்டை நேரு நகர் குமரன் குன்றம் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டி பெருவிழா

கடந்த 6 நாட்களாக விமர்சையாக நடைபெற்று வந்தது. சூரசம்கார நிகழ்ச்சி நேற்று மாலை 5 மணி அளவில் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

குரோம்பேட்டையில் கந்ந சஷ்டி பெருவிழா

குரோம்பேட்டை புருஷோத்தமநகர் ஸ்ரீ விஜய கணபதி லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தில் கந்த சஷ்டி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. காலையில் விசாகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று தீபாதாரணை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (19.11.23 ஞாயிறு) மாலை ஆறு மணிக்கு மேல் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத விசாகப் பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற இருக்கிறது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஆலய நிர்வாகம் […]

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது.

நடப்பாண்டில் கார்த்திகை மாதம் நாளை தொடங்க உள்ள நிலையில், இன்று மாலை 5 மணிக்கு சபரிமலையில் நடை திறக்கப்படுகிறது. நாளை முதல் நாள்தோறும் அதிகாலை 3.15 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்யப்படும். 41 நாட்கள் நாள்தோறும் பூஜைகள் நடத்தப்பட்டு, டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறும். டிசம்பர் 30ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட்டு ஜனவரி 15ஆம் தேதி வரை மகரவிளக்கு பூஜை நடைபெறும். அன்று மாலை […]

மண்டலாபிஷேக நிறைவு விழா

குரோம்பேட்டை ராதா நகர் ஹனுமார் கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ராம சுப்ரமண்ய ஸ்வாமி ஆலய மகா கும்பாபிஷேகம் 17.09.2023 அன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. அதை முன்னிட்டு நேற்று (04-.11.2023) மண்டலாபிஷேக நிறைவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்லாவர சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். இந்நிகழ்ச்சியில் எஸ்ஆர்எஸ்எஸ் சபா நிர்வாகிகள் தலைவர் வி.கோதண்டபாணி, உப.தலைவர் பாவாயி பில்டர்ஸ் கே.மாரிமுத்து, செயலாளர் எஸ்.மீனாட்சி சுந்தரம் துணை செயலாளர் கே.எஸ்.சௌமியநாராயணன், பொருளாளர் ஆர்.ஜே.முருகன், துணைப் […]

சங்கடங்கள் தீர்க்கும் சங்கு வளையல்

பெண்கள் பொதுவாகவே மகாலக்ஷ்மியின் அம்சம் என்று சொல்லப்படுபவர்கள்தான். பெண்களுக்கு இருக்கக்கூடிய சக்தியை மேலும் வலுப்படுத்த, பெண்கள் தங்களுடைய இரு கைகளில் இந்த வளையலை போட்டுக் கொண்டாலே போதும்.கண்ணாடி வளையல்கள், தங்க வளையல்கள், பஞ்சலோக வளையல்கள், பித்தளை வளையல்கள் என்று பலவகையான உலோகங்களில் செய்யப்பட்ட வளையல் இருக்கத்தான் செய்கின்றது.இவைகளையும் தாண்டி இன்றைய சூழ்நிலையில் பிளாஸ்டிக், ஃபைபர், மெட்டல், என்று பல ரகங்களில் வளையல்கள் வந்துவிட்டது. இருப்பினும் பெண்களுடைய கைகளுக்கு அழகு சேர்ப்பதோடு, லட்சுமி கடாட்சத்தையும் கொடுக்கக்கூடிய ஒரு வளையலை […]

அஷ்டதிக்கு பாலகர்கள் யார்?வழிபடுவதால் பலன்கள் என்ன…?

கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு ஆகியவற்றையே எண் திசைகள் என்கிறோம். இந்த எண்திசைகளுக்குரிய அதிபதிகளாக முறையே இந்திரன், அக்னி தேவன், எமன், நிருதி, வருண தேவன், வாயு தேவன், குபேரன், ஈசானன் விளங்குகின்றனர்.அஷ்டதிக்கு பாலகர்கள் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் கண்காணிக்கின்றனர். இவர்கள் உயிர்களின் செயல்களுக்கு சாட்சியாக இருப்பதாகவும் நம்பப்படுகிறது. இவர்களை வணங்கினால் எல்லா வளங்களும் கிடைப்பதாக ஐதீகம்.அஷ்டம் என்ற சொல்லுக்கு ‘எட்டு’ என்று பொருள். எட்டு திசைகளுக்கு உரிய காவலர்களையே, […]