ஸ்ரீரங்கம் கோயிலில் நடந்த மோதல் தொடர்பாக ஆந்திர பக்தர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனர்

கோயில் தற்காலிக பணியாளர்கள் புகாரில் சென்னா ராவ், சந்தாராவ் சந்தா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோயில் பணியாளர்கள் பாரத், விக்னேஷ், செல்வகுமார் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் வழியில் தமிழகத்தைச் சோ்ந்த சிறுமி, மயங்கி விழுந்து சனிக்கிழமை உயிரிழந்தாா்

தமிழகத்தைச் சோ்ந்த சிறுமி பத்மஸ்ரீ தனது உறவினா்களுடன் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சனிக்கிழமை சென்று கொண்டிருந்தாா். கோயிலுக்குச் செல்லும் வழியில் அப்பாச்சிமேடு பகுதியில் அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக சிறுமி கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். சிறுமிக்கு ஏற்கெனவே மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருந்ததாக அவரது குடும்பத்தினா் தெரிவித்தனா். இதையடுத்து சிறுமியின் உடல் பம்பா அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது.

கோயிலில் கொள்ளையடித்தவரை அடித்து கொலை செய்ததாக ஏழு போ் மீது வழக்கு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த ஊணாம்பாளையத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி(43). இவருக்கு சொந்தமான வீட்டின் அருகிலேயே குலதெய்வக் கோயிலான பெருமாள் கோயில் உள்ளது. அதில் பெருமாள், சிவன், லட்சுமி, சிலைகளை வைத்து பூஜை செய்து வந்தனா். கடந்த 20ஆம் தேதி மூன்று சிலைகளும், பூஜை பொருட்களும் திருடு போய்விட்டன. இந்தத் திருட்டில் ஈடுபட்டவா் சின்ன கணக்கம்பட்டியை சோ்ந்த சொட்ட சேகா்(70) என தெரிய வந்தது. அவரிடம் விசாரித்தபோது அவா் திருடியதை ஒப்புக்கொண்டாா். திருடப்பட்ட பொருட்களை புளியாண்டப்பட்டியில் உள்ள உறவினரின் […]

திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு விழாவில் முதலமைச்சர் மனைவி துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!

திருவொற்றியூர். நவ. 30 திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் திருக்கோயில், 2,000 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலின், மூலவர் ஆதிபுரீஸ்வரர். இவர் ஆண்டு முழுவதும், தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி கவசம் அணிவித்தபடி காட்சியளிப்பார். ஆண்டுக்கொரு முறை கார்த்திகை தீபத்தை யொட்டிய மூன்று நாட்கள் மட்டும், கவசம் திறக்கப்பட்டு, ஆதிபுரீஸ்வரருக்கு புணுகு சாம்பி ராணி தைலாபிஷேகம் நடக்கும். அதன்படி, இவ்வாண்டு விஷேச பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகத்திற்கு பின், கவசம் திறக்கப்பட்டு, மூலவர் ஆதிபுரீஸ் வரருக்கு, புணுகு […]

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்ச தீபம் விளக்கு ஒளியில் ஜொலித்த பொற்றாமரைக்குளம்

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு நேற்று லட்ச தீபம் ஏற்றப்பட்டது. இதில் பொற்றாமரைக்குளம் உள்பட கோயில் வளாகம் முழுவதும் விளக்கு ஒளியில் ஜொலித்தது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா நவ. 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலையில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், பஞ்சமூர்த்திகளுடன் ஆடி வீதிகளில் எழுந்தருளினர். திருக்கார்த்திகையின் ஆறாம் நாளான்று கோயில் பொற்றாமரைக்குளம், அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, உள்பிரகாரங்கள் […]

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை மகா தீபம் ஏற்றபட்டது

2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் 5 அடி உயரமும், 300 கிலோ எடையும் கொண்ட கொப்பறையில், 4,500 கிலோ நெய்யை நிரப்பி 1100 மீட்டர் காடா துணியை திரியாக அமைத்து மகா தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு பக்தி பரவசத்துடன் ஆரவாரம் செய்தனர்