திருத்தணி முருகன் கோயில் மலைப்பாதை சீரமைப்பு பணி இரண்டாவது முறையாக ஆய்வு நடத்த வந்த அமைச்சர் காந்தி

எப்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வேலைகள் முடிந்து இந்த பாதை திறந்து விடப்படும் என்று செய்தியாளர்கள் கேள்விக்கு? எனக்கு தெரியாது எப்போது திறந்து விடுவார்கள் என்று வேலை செய்து கொண்டிருக்கிறோம் என்று பக்தர்கள் சிரமத்தை கேள்வியாக கேட்டால் அமைச்சர் பதில் வேறு விதமாக இருந்ததால் எப்போது இந்த பாதை திறக்கப்படும் என்று அமைச்சருக்கே தெரியாதா? என்று கேள்வி வேறு விதமாக மாறுகிறது மொத்தத்தில் டிசம்பர் 20ஆம் தேதி பாதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும் என்று கூறிவிட்டு இப்போது […]

திருச்செந்தூர் கோயிலில் சிக்கி இருக்கும் பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப வசதியாக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

மதுரை, திருச்சி மற்றும் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் மூலமாக அவர்கள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். சிறப்பு பேருந்துகள் இன்று காலை முதல் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்!

திருநள்ளாறு சனீஸ்வரன்: Thirunallar Saneeswaran Temple History in Tamil

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரஸ்வாமி கோவில் வரலாறு நிடதநாட்டு மன்னன் நளன் சேதி நாட்டு இளவரசி தமயந்தியை திருமணம் செய்தான். இப்பெண்ணை தேவர்கள் மணக்க விரும்பினர். ஆனால், நளனை அவள் திருமணம் செய்ததால் பொறாமை கொண்டு, சனீஸ்வரனை நாடினர். சனீஸ்வரன் நளனின் தூய்மையான மனநிலையை அவர்களுக்கு உணர்த்த, அவனை ஏழரை ஆண்டுகள் பிடித்து துன்பப்படுத்தினார். மனைவி, மக்களையும், உடுத்தும் துணியைக் கூட இழந்து அவஸ்தைப்பட்ட மன்னன் நளன் எதற்கும் கலங்கவில்லை. ஒரு கட்டத்தில் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரரை நளன் வணங்கினான். […]

கருமாரியம்மன் ஆலயத்தில் ஐயப்ப பூஜை, அன்னதானம்

குரோம்பேட்டை பத்மநாபா நகர் ஸ்ரீ கருமாரியம்மன் பக்தஜன சபை சார்பில் ஐயப்ப சாமி 50ம் ஆண்டு விளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி ஐயப்பனுக்கு 51 வகை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை நடந்தது. குரோம்பேட்டை பிரபல கட்டுமான நிறுவனமான சங்கர் கன்ஸ்ட்ரக்சன் சார்பில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சங்கர் கன்ஸ்ட்ரக்சன் நிர்வாக இயக்குனர் கே.எச்.சங்கரநாராயணன் துணைவியார் திருமதி நித்யா சங்கர நாராயணன் அன்னதானத்தை துவக்கி வைத்தார். அருகில் சி.ஆர்.மதுரை வீரன், சந்திரசேகர் உள்ளனர். […]

சொர்க்க வாசல் திறக்காத கோயில்

வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள், தனது கோயிலில் சொர்க்க வாசலை கடப்பது வழக்கம். ஆனால், திருச்சி உறையூர் கமலவல்லி தாயார் கோயிலில், மாசி ஏகாதசியன்றுதான் தாயார் சொர்க்க வாசல் கடக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இங்கு வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறப்பதில்லை.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

நடராஜர் சன்னதிக்கு எதிர்ப்புறம் உள்ள பிரம்மாண்டமான உற்சவர் கொடி மரத்தில் உற்சவர் கொடியை உற்சவ ஆச்சாரியார் மீனாட்சி நாத தீட்சதர் ஏற்றி வைத்தார். 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் முக்கிய திருவிழாவான தேர்த்திருவிழா இம்மாதம் 26 ஆம் தேதியும் ஆருத்ரா தரிசன விழா 27ஆம் தேதி நடைபெறுகிறது.

திருத்தணி கோவிலுக்கு மலைப்பாதையில் செல்ல அனுமதியில்லை – கோவில் நிர்வாகம் தகவல்

இன்று முதல் வரும் 20-ஆம் தேதி வரை கோவிலுக்கு செல்ல பக்தர்கள் படிவழியினை மட்டுமே பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. திருத்தணி, மண்சரிவு காரணமாக திருத்தணி முருகன் கோவிலுக்கு மலைப்பாதையில் பக்தர்கள் நடந்து செல்ல அனுமதியில்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுக்குச் செல்லும் மலைப்பாதையின் தடுப்புச் சுவர் மிக்ஜம் புயல் காரணமாக மலைச்சரிவு ஏற்பட்டுள்ளதால் அதனை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் பக்தர்கள் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு […]

சபரிமலையில் குவியும் பக்தர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் போலீஸ்

சபரிமலையில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. போதிய அளவில் போலீஸ் இல்லாததால், சரிவர சாமி தரிசனம் செய்ய முடியவில்லை என பக்தர்கள் புகார். முதியவர்கள் மற்றும் குழந்தைகள் சன்னிதானம் வரை செல்ல முடியாமல் திரும்பும் நிலையில் ஏற்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழு நியமனம் ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அறங்காவலர் நியமனத்தில எந்தவித விதிமுறை மீறலும் இல்லை. அறங்காவலர் குழுவில் 3 பெண்களை இடம்பெற செய்தது நீதிமன்றத்திற்கு மிகவும் திருப்தி அளிக்கிறது – நீதிபதிகள் கருத்து