காணிக்கை உண்டியலில் போடும் சுற்றறிக்கை வாபஸ்

கோயிலில் அர்ச்சகர் தட்டில் விழும் காணிக்கையை உண்டியலில் போடும் உத்தரவு வாபஸ் மதுரையில் பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த 7ம் தேதி செயல் அலுவலர் பிறப்பித்த உத்தரவு திரும்பப்பெறப்பட்டது கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் உத்தரவை வாபஸ் பெற்றது கோவில் நிர்வாகம் கோயில் தக்காரிடம் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக உத்தரவு பிறப்பித்ததால் மதுரை மண்டல இணை ஆணையர் நடவடிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பக்தர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, தேவஸ்தான நிர்வாகம் மீது ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிருப்தி!

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கு இழப்பீடு வழங்குவது பற்றி அறிவிக்க உள்ளார்!

சபரிமலை கோயில் நடை அடைப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவம்பர் 16ம் தேதி துவங்கிய மண்டல காலம் நிறைவு. இன்று இரவு 1 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும். மகர விளக்கு கால பூஜைகளுக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும் – கோயில் நிர்வாகம்.

சபரிமலையில் ஐயப்ப விக்கிரகத்தில் நேற்று மாலை தங்க அங்கி அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது.

இன்று பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த நவம்பர் 16ம் தேதி தொடங்கிய 41 நாள் நீண்ட மண்டல காலம் இன்றுடன் நிறைவடைகிறது. பிரசித்தி பெற்ற மண்டல பூஜை இன்று நடைபெறுகிறது. மண்டல பூஜையை முன்னிட்டு நேற்று மாலை ஐயப்ப விக்கிரகத்தில் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. முன்னதாக நேற்று மதியம் பம்பையை அடைந்த இந்த தங்க அங்கி பம்பை கணபதி கோயிலில் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது. பின்னர் ஊர்வலமாக […]

பத்மநாப நகர் கருமாரியம்மன் ஆலயத்தில் ஐயப்ப சுவாமி 51 ஆம் ஆண்டு மலர் பூஜை

குரோம்பேட்டை பத்மநாபன் நகரில் அமைந்திருக்கும் ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு 51 ஆம் ஆண்டு மலர் பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. காலையில் மகா கணபதி ஹோமம், 51 வகை சிறப்பு அபிஷேகம்,சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்று மதியம் ஒரு மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மதியம் 1.15 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. அன்னதான உபயதாரர் சங்கர் கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர்கள் நித்யா சங்கரநாராயணன் மற்றும் சங்கரநாராயணன் தொடங்கி வைத்து பக்தர்களுக்கு அன்னதானத்தை வழங்கினர். […]

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவ.-15ம் தேதி திறப்பு

சபரிமலையில் மகரவிளக்கு பூஜை 2025 ஜனவரி 14ம் தேதி நடைபெறும். 2024ம் ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 15ம் தேதி திறக்கப்பட்டு டிசம்பர் 26ம் தேதி நடை சாத்தப்படும். மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதி திறக்கப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி கோயில் நடை அடைக்கப்படும்.

நவ.07ல் தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை

திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு நவம்பர் 7ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவ. 7ல் நடைபெறவுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவிப்பு.

திருப்பதி தங்க கொடி மரம் சேதம்

திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்க இருந்த நிலையில் தங்கக்கொடி மரம் சேதம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கக் கொடி மரத்தில் ஏற்பட்ட சேதத்தை சரி செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.கொடியேற்றத்திற்கான கயிறை மரத்தின் உச்சியில் பொறுத்த முயற்சித்தபோது வளையம் உடைந்துள்ளது. தங்கக் கொடி மரத்தில் ஏற்பட்ட சேதத்தை சரி செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இதில், பொறியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.