ஆசிரியர் தின விழாவையொட்டி குரோம்பேட்டை மக்கள் விழிப்புணர்வு சங்கம் ஸ்ரீ அய்யாசாமி ஐயர் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று அங்குள்ள ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கி கௌரவித்தனர்

10, 12-ம் வகுப்பில் அய்யாசாமி பள்ளி 100% தேர்ச்சி விகிதம் பெற்று சாதனை பெற்றதை பாராட்டி விருதும் வழங்கப்பட்டது. பிறகு ரீடிங்டன் லிமிடெட் கம்பெனி பள்ளிக்கு 20 டேபிள்களும் 60 சேர்களும் இலவசமாக வழங்கப்பட்டது. அந்த கம்பெனியின் நிர்வாகி வெங்கடாச்சாரி இந்த உதவியை செய்தார். மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் சந்தானத்தின் தலைமையிலும் தாளாளர் மனோகரன் முன்னிலையிலும் நடந்தது. மேலும் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி விகிதம் பெற்றதற்கு விருது வழங்கினர்.

ஆசிரியர் தினத்தையொட்டி மக்கள் விழிப்புணர்வு சங்கம்

ஆசிரியர் தினத்தையொட்டி மக்கள் விழிப்புணர்வு சங்கம் குரோம்பேட்டை நேரு நகரில் உள்ள ஐயா சாமி ஐயர் பள்ளியில் 35 ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கினர். இந்த விழாவிற்கு சமூகசேவகர் வி.சந்தானம் தலைமை தாங்கினார். சி.ஆர்.நரசிம்மன், மூத்த குடிமக்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.மீனாட்சி சுந்தரம், போலீஸ் கிருஷ்ணமூர்த்தி வாழ்த்தி பேசினர். சமூக ஆர்வலர் ரங்காச்சாரி பள்ளிக்குத் தேவையான எல்.இ.டி.பல்புகள் பள்ளியின் தாளாளர் மனோகரிடம் வழங்கினார். மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நீலாங்கரையில் விஜய் மக்கள் இயக்க ஆசிரியர் தின விழா

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நீலாங்கரை மாநகராட்சி பள்ளியில் ஆசிரியர் தின கொண்டாட்டம், ஆசிரியர்களுக்கு சால்வை போட்டு மரியாதை செய்த நிலையில் அவர்கள் கேக் வெட்டி மாணவர்களுக்கு வழங்கி ஆசிரியர் தினத்தை கொண்டாடினார்கள், இதில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பங்கேற்றனர்…

தாய் தந்தைக்கு அடுத்து 3ஆவது இடத்தில் வைத்து வணங்கத்தக்கவர்கள் ஆசிரியப் பெருமக்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தாய் தந்தைக்கு அடுத்து 3ஆவது இடத்தில் வைத்து வணங்கத்தக்கவர்கள் ஆசிரியப் பெருமக்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘மாணவச் செல்வங்களின் வாழ்க்கைப் பயணத்தில் வாழ்நாள் எல்லாம் வழிகாட்டும் கலங்கரை விளக்கே ஆசிரியர்கள்; தன்னை உருக்கி அறிவூட்டும் ஆசிரியப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

‘பாரதம்’ என குறிப்பிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆசிரியர் தின வாழ்த்து!

வலிமையான திறமையான பாரதத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த ஆசிரியர்களுக்கு நன்றி ஆசிரியர் தின வாழ்த்து. இந்தியா எனும் சொல்லை தவிர்த்த ஆளுநர் ரவி.