வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம்
நாடு முழுவதும் வருமான வரி தாக்கல் செய்ய காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது ஆனாலும் கடைசி நேரத்தில் தாக்கல் செய்வதில் சிரமம் ஏற்பட்டதால் மேலும் ஒரு நாள் கூடுதலாக அதாவது இன்று இரவு வரை அவகாசம் தரப்பட்டுள்ளது நேற்று வரை 7.3 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு பணம் அனுப்பினால் 5% வரி ட்ரம்ப் அறிவிப்பு
அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினர், தங்களது சொந்த நாடுகளுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று புதிய மசோதாவில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்காரணமாக கிரீன் கார்டு மற்றும் எச்1பி, எச்2ஏ, எச்2பி விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்றும் சுமார் 4.78 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
இமாச்சலப் பிரதேசத்தில் கழிப்பறைக்கு வரி

இமாச்சலப் பிரதேசத்தில் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள கழிப்பறைகளின் எண்ணிக்கை படி ஒவ்வொன்றுக்கும் ரூபாய் 25 வீதம் மாதம் தோறும் அரசு வரி வசூலிக்கப்படுவதாக புகார் அளித்துள்ளது.திடக்கழிவு மேலாண்மை வரி என இது வசூலிக்கப்படுகிறது.இதற்கு அங்குள்ள எதிர்க்கட்சியான பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மியூச்சுவல் ஃபண்ட் ( MUTUAL FUNDS ) வரி விதிப்பில் மாற்றம்

நீண்ட கால முதலீட்டு லாபத்திற்கான வரி 10% ல் இருந்து 12.5% ஆக உயர்வு; குறுகியகால முதலீட்டு லாபத்திற்கான வரி 15%ல் இருந்து 20% ஆக உயர்வு
பட்ஜெட் 2024 வரி குறைப்பு

செல்போன்கள், உதிரி பாகங்கள், செல்போன் சார்ஜர்களுக்கு சுங்க வரி 15 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் ஸ்மார்ட் போன்களின் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு 6 சதவீதம் மற்றும் பிளாட்டினம் நகைகளுக்கு 6.4 சதவீதம் சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது. இறால் மற்றும் மீன் தீவனங்களுக்கு சுங்க வரி 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அமோசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தகத்திற்க வரி குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வருமான வரி கணக்கு […]
சொத்து வரி – மத்திய அரசு அலுவலகத்திற்கு நோட்டீஸ்
“நிலுவையில் உள்ள ரூ.10.3 கோடி, நடப்பாண்டில் செலுத்த வேண்டிய 2.2 கோடியை சேர்த்து மொத்தம் ரூ.12.5 கோடி வரி செலுத்த வேண்டும்” குறிப்பிட்ட அவகாசத்திற்குள் வரி செலுத்தவில்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – மாநகராட்சி எச்சரிக்கை
மாநிலங்களுக்கான வரி பகிர்வு தொகை விடுவிப்பு
மாநிலங்களுக்கு வரி பகிர்வாக ₨72,961 கோடியை விடுவித்தது மத்திய அரசு புத்தாண்டு மற்றும் பண்டிகை காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கூடுதல் தவணையை முன்கூட்டியே விடுவித்துள்ளது தமிழ்நாட்டிற்கான வரி பகிர்வாக ₨2,976 கோடியை விடுவித்தது மத்திய அரசு..
சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்: வாகனங்களுக்கான வரி 2% உயர்வு

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து மோட்டார் வாகனங்களுக்கான வரி, வாழ்நாள் வரி உயர்வு தொடர்பான மசோதா, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை தொடர்பான மசோதாவை அமைச்சர் சிவசங்கர் நேற்று அறிமுகம் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: போக்குவரத்து துறையில் 2012-ம் ஆண்டுக்கு பிறகு வரிகள் உயர்த்தப்படவில்லை. எனவே,வரி விதிப்பு முறைகளில் திருத்தம்செய்ய அரசு முடிவு எடுத்துள்ளது. இதன்படி, அனைத்து வகை வாகனங்களுக்கும் புதிய வரி நிர்ணயிக்கப்படுகிறது. வாடகை பயணிகள் போக்குவரத்து வாகனங்களில், சுற்றுலா மற்றும் ஒப்பந்த வாகனங்களுக்கு […]
தமிழ்நாட்டிலிருந்து ரூ.9,600.63 கோடி ஜிஎஸ்டி வசூல்

ஜூன் மாத ஜிஎஸ்டி வரியாக ரூ.1,61,497 கோடி வசூல் செய்யப்பட்டதாக ஒன்றிய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை விட 12% அதிகமாகும். இதன் மூலம் 4வது முறையாக மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1.60 லட்சம் கோடியை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ்நாட்டிலிருந்து ஜிஎஸ்டி வரியாக ரூ.9,600.63 கோடி வசூல் செய்யப்பட்டதாக ஒன்றிய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.