மது விற்பனை நேரத்தை குறைப்பதை அமல்படுத்தாதது குறித்து, மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மது வாங்குபவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நடைமுறையை அரசு அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8 மணி வரை குறைத்து அரசு அறிவிக்கவேண்டும் என்றும், இதை மத்திய அரசு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. ஆனால், இந்த உத்தரவை எட்டு மாத காலமாக அமல்படுத்தாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த, நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், டி. பரதசக்கரவர்த்தி […]
மதுபானங்களின் விலை இன்று முதல் உயர்வு

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதுபானம், பீர், ஒயின் விலையை உயர்த்தியது டாஸ்மாக் நிர்வாகம். குவாட்டருக்கு ரூ.10 முதல் முழு பாட்டிலுக்கு ரூ.320 வரை உயர்வு. மதுபானங்களின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு
பாட்டிலுக்கு 10 ரூபாய் எக்ஸ்ட்ரா வாங்குறாங்க.. காசு என்ன சும்மாவா வருது’ புலம்பிய வாலிபரை தாக்கிய போலீஸ்

செங்கல்பட்டில் மதுபானக்கடையில் மது வாங்க வந்தவர்களை காவலர் ஒருவர் தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்துள்ள அன்னபுரம் பகுதியில் ஊர் திருவிழாவை முன்னிட்டு டாஸ்மாக் கடை முன்பு கூடிய குடிமகன்கள் மது பாட்டிலை அதிகப்படியாக வாங்கிச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் கூட்டம் கூடியதால் போலீசார் பாதுகாப்பிற்காக அங்கு வந்திருந்தனர். அப்பொழுது குடிமகன் ஒருவர் ‘என்னங்க ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் எக்ஸ்ட்ரா வாங்குறாங்க.. காசு என்ன சும்மாவா […]