தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் குடோன்களிலும் சுமைப்பணி தொழிலாளர்கள் இறக்கு கூலி உயர்வு கேட்டு போராட்டம் தொடர்கிறது

தமிழக அரசே, டாஸ்மாக் நிர்வாகமே உடன் தலையிடு! சுமைப் பணி தொழிலாளர் சம்மேளனம் வலியுறுத்தல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் நிறுவனத்திற்கு சொந்தமான 43 கிடங்குகளில் 2500க்கும் மேற்பட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் பணி செய்து வருகிறார்கள். மதுபான ஆலைகளில் இருந்து லாரிகளில் வரும் மதுபானபெட்டிகளை கிடங்குகளில் இறக்கி அடுக்கும் பணிக்கான கூலியினை மதுபான ஆலை நிர்வாகங்கள் இரண்டாண்டிற்கு ஒருமுறை உயர்த்தி வழங்குவது நடைமுறையில் இருந்துவருகிறது. இந்நிலையில் கடந்தமுறைஉயர்வு வழங்கப்பட்டு மூன்றாண்டுகள் முடிந்துவிட்டது. கடந்த ஓராண்டாக தொழிற்சங்கம் கூலி உயர்வை […]
மதுபான கொள்கை ஊழல் புகார்

அமலாக்கத்துறை முன் கெஜ்ரிவால் இன்று ஆஜர். அமலாக்கத்துறை முன் இன்று ஆஜராகும் கெஜ்ரிவால் கைது? ஆம் ஆத்மி அச்சம்?
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்கள் தரமானதாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனக் கூறி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

தரமற்ற மதுபானங்களை குடிப்பவர்கள் விரைவாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து விடுகின்றனர். இதனால் அவர்களது குடும்பங்கள் நடுத் தெருவில் நிற்கிறது. இதனை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என மனுதாரர் மனுவில் கோரி இருந்தார்.
தாம்பரம் :மதுக்கடையை மூடக்கோரி பாஜக ஆர்ப்பாட்டம்

தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை, சீனிவாசா நகர் பகுதியில் மேம்பாலத்தின் கீழ் அரசு மதுபான கடை (கடை எண் : 4161) இயங்கி வருகிறது. இதன் அருகே தேவாலயம், கோவில்கள், பெருங்களத்தூர் ரயில் நிலையம், பள்ளி, அத்தியாவசிய தேவைக்கான கடைகள் என பல உள்ளது.மேலும் அவ்வழியாக பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அலுவலகம் செல்லும் இளைஞர்கள், பெண்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினமும் ரயில் நிலையம் சென்று ரயில்கள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இவ்வாறு […]
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களின் ஆயத்தீர்வையை உயர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது

அதற்கான மசோதா, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தின் வருவாயை பெருக்கும் நோக்கத்தில், ஐ.எப்.எம்.எல். மீது விதிக்கப்படக்கூடிய ஆயத்தீர்வையை உயர்த்தும் சட்ட மசோதாவை சட்டசபையில் அமைச்சர் முத்துசாமி நேற்று அறிமுகம் செய்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது: மாநில வருவாயை பெருக்கும் நோக்கத்தில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள் மீது விதிக்ககூடிய ஆயத்தீர்வையின் அதிகபட்ச தொகையை, சாதாரண வகைகளுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ. 250-ல் இருந்து ரூ. 500-க்கும்; நடுத்தர வகைகளுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ. 300லிருந்து ரூ. 600க்கும்; […]
டாஸ்மாக் ஊழியர்கள் ஆயிரக்கணக்கனோர் சென்னையில் கைது

பணி நிரந்தரம் கோரியும், அரசு நிறுவன ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் கோரியும்,சட்டமன்ற முற்றுகை தமிழக அரசே! காவல் துறையே!! மாநில சிறப்புத்தலைவர்தோழர் கு.பாரதி உள்பட கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனே விடுதலை செய்!இடது தொழிற்சங்க மய்யம் – LTUC
தமிழகம் முழுவதும் 2 நாள் டாஸ்மாக் கடைகள் அடைப்பு

வருகிற செப்டம்பர் 28ம் தேதி இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகையான மிலாடி நபி கொண்டாடப்படுகிறது. இதேபோல் காந்தி ஜெயந்தி அக்டோபர் 2ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த இரண்டு நாட்களும் அரசு பொதுவிடுமுறை அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் இந்நாட்களில் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி மதுபானம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
படப்பை அருகே டாஸ்மாக் மது ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து மூன்று பேர் காயம்

காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் உள்ள டாஸ்மாக் குடோனில் இருந்து ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வினியோகம் செய்ய ஈசர் வேனில் அட்டை பெட்டியில் மதுபெட்டிகள், பீர்பாட்டிகளை அனுப்பியுள்ளனர். வேனை ஓட்டுனர் பாஸ்கர் என்பவர் ஓட்டிய நிலையில் இரண்டு கூலி தொழிலாளர்களும் அமைந்துள்ளனர். இந்த நிலையில் வண்டலூரை நோக்கி படப்பை அருகே வஞ்சுவாஞ்சேரியில் வேன் வரும்போது நிலைத்தடுமாறி சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. ஓட்டுனர் பாஸ்கர் உள்ளிட்ட மூவருக்கும் லேசான சிராய்ப்பு காயம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் […]
பார்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி செயல்படும் பார்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு இது தொடர்பாக கலால் துறை, காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கும் படி மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது – அரசு தரப்பில் பதில்.
நீதிமன்ற உத்தரவு கிடைத்ததும் டாஸ்மாக்கில் மது விற்பனை நேரம் குறைப்பு: முத்துசாமி தகவல்