தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது?: ஐகோர்ட் கிளை கேள்வி

தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது? என்று ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பி உள்ளது. நெல்லை மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. நெல்லை தாமிரபரணி ஆற்றை முறையாக பராமரிக்கக் கோரிய வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை இவ்வாறு ஆணையிட்டுள்ளது.

தாமிரபரணி ஆற்றில் பல ஆண்டுகளாக கழிவு நீர் கலக்கிறதே தடுக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? – நீதிபதிகள்

தாமிரபரணி ஆற்றில் பல ஆண்டுகளாக கழிவு நீர் கலக்கிறதே தடுக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். தாமிரபரணியில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கவும், ஆற்றை தூய்மையாக பராமரிக்கவும் உத்தரவிட கோரிய வழக்கில் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளுக்கு மன சாட்சியே இல்லையா? உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்

“தாமிரபரணியில் கூடுதல் நீர் திறக்க வாய்ப்பு”

தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் அதிக கனமழை பெய்து வருகிறது – சராசரியாக 28 செ.மீ. மழை பெய்துள்ளது. மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, காவல்துறை இணைந்து பேரிடர் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தாமிரபரணி ஆற்றில் 45 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம், இன்னும் கூடுதலாக திறக்க வாய்ப்பு பாபநாசம் அணைக்கு 40,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு, நம்பியாறு அணையில் இருந்து […]