சபரிமலை தங்கம் திருட்டு தமிழகத்தில் அமலாக்க பிரிவு சோதனை
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருடப்பட்டதன் மூலம் கிடைத்த சட்டவிரோத வருமானத்தை பணமோசடி செய்திருக்கலாம் என்ற அடிப்படையில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மொத்தம் 21 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பெண்ணுடன் உல்லாசம்:கர்நாடகா டிஜிபி சஸ்பெண்ட்
கர்நாடக மாநில போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவ், தனது அலுவலகத்தில் பணியில் இருந்தபோது பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. இது சர்ச்சையான நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது கர்நாடக மாநில அரசு. பெண்ணுடன் அவர் இருக்கும் சுமார் மூன்று வீடியோக்கள் ஒரே கிளிப்பாக வெளியானது. இது சமூக வலைதளத்தில் அதிகளவில் பகிரப்பட்டது. ஏற்கெனவே, டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளான நடிகை ரன்யா ராவ், தங்கம் கடத்திய […]
தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1.11 லட்சத்தை கடந்தது.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்து ரூ.1,11,200க்கு விற்பனை. தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்த நிலையில் மாலையில் மீண்டும் ரூ.2,320 அதிகரித்தது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.340க்கு விற்பனை செய்யப்படுகிறது
மோடி கூட்டத்தில் தினகரன் பங்கேற்பு
23ஆம் தேதி, பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் NDA பொதுக்கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அன்று அதிகாரப்பூர்வமாக இணைகிறார். அந்த கூட்டத்திற்கு அமமுக தொண்டர்களை அழைத்து வருமாறு மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவு.
தமிழக காங்கிரசுக்கு புதிய மாவட்ட தலைவர்கள்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் மொத்தம் 71 மாவட்டங்களுக்கு தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் .டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைமையில் தமிழக காங்கிரசார் நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 30 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.
வருகிற பிப்ரவரி 17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கூறினர். பெயர் சேர்ப்பதற்கு மேலும் காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. பெயர் சேர்க்க வரும் 30ம் தேதி வரை அவகாசம் அளித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சபரிமலை மீண்டும் திறப்பு எப்போது?
சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று இரவு 11 மணி வரையே பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவர். நாளை காலை பந்தளராஜ வம்ச பிரதிநிதியின் சிறப்பு வழிபாட்டுக்குப் பிறகு காலை 6.30 மணிக்கு நடைசாத்தப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு மகரஜோதி வழிபாடுகள் அனைத்தும் நிறைவு பெறுகின்றன. பின்பு, கும்பம் மாத (மாசி) வழிபாட்டுக்காக பிப்.12-ம் தேதி மாலை கோயில் நடை திறக்கப்படும்.
தாம்பரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்
தென்மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு வாகனங்கள் படையெடுத்ததால், செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் நேற்று காலை முதல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுதவிர சிங்கப்பெருமாள்கோவில், மறைமலை நகர், கூடுவாஞ்சேரி, கிளாம்பாக்கம், பெருங்களத்தூர், தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் ஓஎம்ஆர், ஈசிஆரிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் இன்று காலை வரை செங்கல்பட்டு மாவட்ட மற்றும் சென்னை மாநகர போலீஸார் போக்குவரத்தை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
டிரம்ப் தொடங்கிய புதிய சர்வதேச அமைப்பு
ஐ.நா. சபைக்கு மாற்றாக ‘‘போர்டு ஆப் பீஸ்’’ என்ற புதிய சர்வதேச அமைப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடங்கி உள்ளார். இந்த புதிய அமைப்பில் ரூ.9,000 கோடி கட்டணம் செலுத்தி உறுப்பினராக சேரலாம் என்று அதிபர் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.பிரதமர் மோடிக்கும் அழைப்பு வந்துள்ளது.
சச்சின் சாதனையை முறியடித்த கோலி
இந்தூரில் நேற்று நடந்த கடைசி ஒரு நாள் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இந்த போட்டி மூலம் கோலி 35 மைதானங்களில் தன் ஒரு நாள் சதங்களை எடுத்துள்ளார். இதில் இந்தூர் சதம் கடைசியாக சேர்ந்தது. இதிலும் சச்சின் டெண்டுல்கரை கடந்து விட்டார் கோலி. சச்சின் 34 மைதானங்களில் சதம் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.