திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான ஒரத்தநாடு வைத்திலிங்கம், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
புதிய உச்சத்தில் தங்கம் விலை! சவரனுக்கு ரூ. 2,800 உயர்வு!!
சென்னையில் தங்கத்தின் விலை இன்று ரூ. 2,800 அதிகரித்துள்ளது.தொடர்ந்து இன்று(ஜன. 21, புதன்கிழமை) காலை 22 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,800 அதிகரித்து ரூ. 1,14,000 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 350 உயர்ந்து ரூ. 14,250 -க்கு விற்பனையாகிறது.அதேபோல வெள்ளி விலையும் வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனால் இன்று வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ. 340-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 3,40,000 […]
எம்ஜிஆர்போல் யாராவது உண்டா?… கே.பி.முனுசாமி கேள்வி
100 பேரை அடிப்பதுபோல் ஷோ காட்டுவோர் அரசியலுக்கு வந்து என்ன செய்யப் போகிறார்கள்? இப்போது உள்ள நடிகர்கள் மது குடிப்பது, 4 பெண்களுடன் நடனம் ஆடுவதுபோல் ஷோ காட்டுகின்றனர். மக்களுக்கு நல்ல அறிவுரை வழங்கும் கதாபாத்திரத்தில் நடித்தவர் எம்ஜிஆர்; சம்பாதித்த பணத்தை மக்களுக்கு கொடுத்த எம்ஜிஆர்போல் நடிகர்கள் யாராவது உள்ளனரா?
ஜனநாயகன் திரைப்படம் தீர்ப்பு ஒத்திவைப்பு.
’ஜனநாயகன்’ பட சென்சார் சான்றிதழ் தொடர்பான மேல் முறையீடு வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு. இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.
செங்கோட்டையன் கட்சித் தாவலா?
தமிழக வெற்றி கழகத்தில் சேர்ந்த அதிமுக பிரமுகர் செங்கோட்டையன் கடந்த சில நாட்களாக தனக்கு கட்சியில் மதிப்பு இல்லை, எனவே வேறு கட்சிக்கு செல்ல திட்டமிட்டு வருகிறார். என்று செய்தி வெளியாகியது அதனை செங்கோட்டையன் இன்று மறுத்துள்ளார்.
சட்டசபையில் 4-வது ஆண்டாக கவர்னர் மோதல்
கடந்த 3 ஆண்டுகளைப் போலவே, தமிழ்நாடு அரசின் உரையை வாசிக்காமல் சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி. அவையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாட வேண்டும் என ஆளுநர் கூறவே, தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து பாடுவது மட்டுமே மரபு என சபாநாயகர் விளக்கம் அதனை ஏற்க மறுத்து அவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார்.
தமிழக சட்டசபை 24-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜனவரி 24-ம் தேதி வரை நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, நாளை (ஜனவரி 21) அன்று சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். ஜனவரி 22-ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப் பெற்று விவாதம் தொடங்கும். ஜனவரி 23-ம் தேதி 2022 -2023 ஆம் ஆண்டுக்குரிய மிகை செலவுக்கான மானிய கோரிக்கை […]
ஆளுநர் உரை இல்லாத -சட்டசபை சட்டத்தை திருத்த ஸ்டாலின் வேண்டுகோள்
தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் உரையை ஆர். என். ரவியால் படிக்க முடியவில்லை. இதனால் அவர் வந்த சில நிமிடங்களில் வெளியேறினார்.இந்தப் பிரச்சனைகளை தவிர்க்க ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரை என்ற நடைமுறையை விலக்கிடும் வகையில் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான முயற்சிகளை இந்தியா முழுவதும் இருக்கும் ஒத்த கருத்துகளைக் கொண்ட அரசியல் கட்சிகள் துணையோடு நாடாளுமன்றத்தில் திமுக முன்னெடுக்கும்” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
ஆளுநர் குற்றச்சாட்டு நியாயமானது -எடப்பாடி பேட்டி
தமிழக சட்டசபையில் இன்று கவர்னர் ரவி தனது உரை படிக்க அனுமதிக்கப்படாத கண்டித்து வெளியேறினார். அவர் சென்றதும் எடப்பாடி தலைமையில் அதிமுக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டியில் ஆளுநர் சொன்ன குற்றச்சாட்டுகள் நியாயமானது தான் தமிழ்நாட்டில் நடப்பதை தான் அவர் கூறுகிறார். ஆனால் ஆளுநர் இவ்வாறு நடந்து கொள்வார் என எதிர்பார்த்து ஸ்டாலின் முன்கூட்டியே அறிக்கை தயாரித்து கொண்டு வந்து வாசிக்கிறார், என குற்றம் சாட்டினார்.
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி -புதிய தலைவர் உறுதி
பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராக நிதின் நவீன் இன்று அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டார். அவர் அளித்த பேட்டியில் தமிழ்நாடு கேரளா மேற்குவங்கம் குறிப்பிட ஐந்து மாநிலங்களிலும் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்கும். கார்த்திகை தீபத்தை எதிர்ப்பவர்களுக்கும் ராமர் பாலத்தை மறுப்பவர்களுக்கும் அரசியலில் இடமில்லை மரபுகளை தடுக்க முயற்சிக்கும் சக்திகளை எதிர்கொள்வது அவசியம் என்று கூறியுள்ளார்.