இன்றைய தங்கம் நிலவரம் 27.03.2025
மனோஜ்க்கு கவிஞர் வைரமுத்துவின் இரங்கல்
கவிஞர் வைரமுத்துவின் இரங்கல் !மகனே மனோஜ்!மறைந்து விட்டாயா?பாரதிராஜாவின்பாதி உயிரே! பாதிப் பருவத்தில்பறந்து விட்டாயா?‘சிங்கம் பெத்த பிள்ளையின்னுதெரியவப்போம் வாடா வாடா’என்று உனக்குஅறிமுகப் பாடல் எழுதினேனே சிங்கம் இருக்கப்பிள்ளைநீ போய்விட்டாயா?உன் தந்தையைஎப்படித் தேற்றுவேன்? “எனக்குக் கடன் செய்யக்கடமைப்பட்டவனே!உனக்கு நான் கடன்செய்வதுகாலத்தின் கொடுமைடா” என்றுதகப்பனைத் தவிக்கவிட்டுத்தங்கமே இறந்துவிட்டாயா? உன் கலைக் கனவுகள்கலைந்து விட்டனவா?முதுமை – மரணம் இரண்டும்காலத்தின் கட்டாயம்தான்.ஆனால், முதுமைவயதுபார்த்து வருகிறது;மரணம் வயதுபார்த்துவருவதில்லை சாவுக்குக் கண்ணில்லைஎங்கள் உறக்கத்தைக்கெடுத்துவிட்டவனே!உன் உயிரேனும்அமைதியில் உறங்கட்டும் !
சர்வதேச போதை கடத்தல் வழக்கு:திமுக நிர்வாகிகளுக்கு சம்மன்
திமுக அயலக அணியைச் சேர்ந்த ஒருவர் சர்வதேச போதை கடத்தல் வழக்கிலும், சர்வதேச போதை கடத்தல் பண பரிமாற்ற வழக்கிலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையிலும், ஆதாரங்கள் அடிப்படையிலும் திமுக நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்ப உள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் டெல்லியில் இருந்து வரவழைக்கப்பட்டு உள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோடைகாலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-கோடை காலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும். மின்வாரியத்தில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த நான்கு ஆண்டுகளில் 78,000 புதிய மின்மாற்றிகள் பொருத்தப்பட்டுள்ளது. 6000 மெகாவாட் அளவிற்கு கூடுதலாக மின் தேவை இருக்கும் என்பதால் டெண்டர் கோரப்பட்டுள்ளது. சூரிய சக்தி மற்றும் காற்றாலைகள் மூலம் மின்சாரம் பெறப்பட்டு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. 500 மெகாவாட் […]
ஏப்ரல் 6-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி
பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி ஏப்ரல் மாதம் 6-ந்தேதி தமிழகம் வருகிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்து இறங்கும் பிரதமர், அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் வரவுள்ளதாகவும்.புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்து, ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைக்கிறார். பின்னர் ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசாமி கோவிலில் தரிசனம் செய்கிறார். அதன்பிறகு பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொள்கிறார். இதைத் தொடர்ந்து, மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து டெல்லி […]
இன்றைய தங்கம் நிலவரம் 26.03.2025
பள்ளிக்கரணையில் பரிதாபம் : பாதாள சாக்கடை தோண்டும் போது மண் சரிந்து ஒருவர் பலி
சென்னை பள்ளிக்கரணை பாரதிதாசன் 2வது தெருவில் மெட்ரோ வாட்டர் சார்பில் பாதாள சாக்கடைக்காக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது திடீரென மண் சரிவு ஏற்பட்டதில் பணியில் ஈடுபட்ட திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த அன்பு(59) என்பவரும் திருப்பதி என்பவரும் மண் சரிவில் சிக்கிக்கொண்டனர்.பணியில் இருந்த மற்ற ஊழியர்கள் காப்பாற்ற முயற்சி செய்தும் பலனளிக்காததால் உடனடியாக பள்ளிக்கரணை காவல் நிலையம் மற்றும் மேடவாக்கம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிக்கரணை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் […]
வெள்ளரிக்காயில் மயக்கப் பொடி தூவி பெண்களிடம் நகை பறிக்கும் கும்பல் கைது
வேலூரில் இருந்து சென்னை தாம்பரம் சானடோரியத்திற்கு வரும் அரசு பேரூந்துகளில் திருமண முகூர்த்த தினம், அல்லது கோவில் விஷேச தினங்களில் பயணம் செய்யும் பெண்களிடம் நகை கொள்ளையடிப்பதாக 15 சவரன் நகையை பறிகொடுத்த மூன்று பெண்கள் தாம்பரம் போலீசில் புகார் கொடுத்தனர். இதன் அடிப்படையில் நகை பறிகொடுத்தவர்களிடம் முதலில் விசாரித்தபோது அருகிள் இருந்த பெண்ணிடம் இனிப்புகள், வெள்ளேரி காய் வாங்கி சாப்பிட்டபோது அரை மணி நேரம் மயக்கம் ஏற்பட்டதாகவும் அதன் பின்னர் மயக்கம் தெளிந்து பார்த்தால் பெண்ணையும் […]
இன்றைய தங்கம் நிலவரம் 25.03.2025
ஐபிஎல் பார்த்து விட்டு திரும்பிய2 மாணவர்கள் மெட்ரோ தூணில் பைக் மோதி பலி
ஐபிஎல் போட்டியை பார்த்து விட்டு அதிவேகமாக பைக்கில் சென்று மெட்ரோ தூணில் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கால்வின் கென்னி, சித்தார்த்தன். இருவரும் நேற்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியை கண்டு களித்துள்ளனர். பிறகு புல்லட் பைக்கில் வீட்டிற்கு திரும்பினர். பைக்கை கால்வின் கென்னி ஓட்டிச் சென்றார். அதிவேகமாக சென்றபோது ஆலந்தூர் மெட்ரோ ரயில் தூணில் கட்டுப்பாட்டை இழந்து மோதினர். […]