மதுரையில் அமித்ஷாவை சந்திக்கும் அன்புமணி?

மதுரைக்கு வரும் அமித்ஷாவை அன்புமணி சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 8-ம் தேதி மதுரை வரும் அமித்ஷா, NDA கூட்டணி தலைவர்களை சந்திக்கிறார். அப்போது பாமக உடனான கூட்டணியை இறுதிசெய்திட வேண்டுமென திட்டமிட்டுள்ளார். அதிமுகவுடனான கூட்டணி அறிவிப்புக்கு முந்தைய நாள் அன்புமணியை கட்சிப் பதவியில் இருந்து ராமதாஸ் நீக்கியது குறிப்பிடித்தக்கது.

தக்லைப் முதல் நாள் வசூல்

கமலஹாசன் நடித்த தக்கலை திரைப்படம் வெளியாகி உள்ளது இது தமிழகத்தில் 800 தியேட்டர்களில் 3000 காட்சிகள் முதல் நாளில் திரையிடப்பட்டு உள்ளதுமுதல் நாள் மட்டும் 17 கோடி வசூலித்து உள்ளது.இந்த படம் கர்நாடகத்தில் வெளியாகவில்லை

வண்டலூர் அருகே விரைவு ரயில் மோதி திருநங்கை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது விபத்தில் சிக்கி உயிரிழந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்

சென்னை வண்டலூர் அடுத்த மறைமலைநகர் ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் திருநங்கை ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக தாம்பரம் இருப்புபாதை போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து திருநங்கை உடலை கைபற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை நடத்தினர், விசாரனையில் நாகபட்டினத்தை சேர்ந்த வேல்முருகன் என்கிற அனன்யா (35) என்பதும் இன்று அதிகாலை அவ்வழியாக வந்த ராமேஸ்வரம் விரைவு ரயில் மோதி உயிரிழந்தது தெரியவந்துள்ளது, மேலும் விபத்தில் […]

நயினார். நாகேந்திரன் பாஜக தலைவர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழக பாஜகவின் புதிய மாநில தலைவராக அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பாஜக தேசிய பொறுப்பாளர்கள் கிஷன் ரெட்டி மற்றும் தருண் சுக் ஆகியோர், அதற்கான சான்றிதழை நயினார் நாகேந்திரனுக்கு நேற்று வழங்கினா்.தலைவர் பதவிக்கு அவர் ஒருவர் மட்டுமே விருப்பம் மனு செய்திருந்தால் எனவே அவரே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் அவருக்கு ஜி. . வாசன் உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தார்கள்.