தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி : – மு.க.ஸ்டாலின்
ஜெர்மனி முதலீட்டு மாநாட்டில் ரூ.3,819 கோடி மதிப்புள்ள 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளன. இதன்மூலம் 9,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெர்மனி பயணத்தில் மொத்தம் ரூ.7,020 கோடி மதிப்புள்ள 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், 15,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி முதலீட்டு மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- ஜெர்மனி எப்படி ஐரோப்பிய யூனியனின் முக்கியத் தொழில்துறை நாடாக இருக்கிறதோ, அதேபோல இந்திய ஒன்றியத்தில் தொழில் […]
ஆளுநரிடம் பட்டம் வாங்குவதை புறக்கணித்த மாணவி யார்?
மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் வாங்கிய மாலை ஒருவர் மாணவி ஜுன் ஜோசப் ஆளுநரிடம் பட்டம் வாங்காமல் புறக்கணித்து துணைவேந்தரிடம் வாங்கினார்.இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுநர் தமிழக அரசுக்கு எதிராக இருப்பதால் இந்த புறக்கணிப்பு செய்ததாக அவர் கூறினார். இதற்கிடையே அந்த மாணவி யார் என்பது தெரிய வந்துள்ளது அவர் நாகர்கோவில் நகர திமுக பிரமுகரின் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்
தாம்பரம் மாநகராட்சி முன்பு முதியவர் திடீர் போராட்டம்
பல்லாவரம், குரோம்பேட்டை பகுதி யில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண் டும். சாலைகளை சீரமைக்க வேண்டும். பல்லாவரம் பெரிய ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். குரோம் பேட்டைராதாநகர் நாயுடு ஷாப் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சிறு பாலத்தை உடைத்து விட்டு புதிய பாலம் கட்டவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குரோம்பேட்டை கட்டபொம்மன் குறுக்கு தெரு வைச் சேர்ந்த கோதண்டபாணி (வயது 74) என்ற முதியவர், தாம்பரம் மாநகராட்சி அலுவலக நுழைவு […]
5.36 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க டெண்டர்
நடப்பாண்டு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு, ₹193 கோடியில் டெண்டர் கோரியுள்ளது. இதில் 5.36 லட்சம் பேருக்கு சைக்கிள் வழங்கப்படவுள்ளன. இந்த சைக்கிள்களில் ‘தமிழ்நாடு முதலமைச்சரின் மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2025 – 26’ என்ற லோகோ இடம்பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
டெல்லியில் நிலநடுக்கம்.
தலைநகர் டெல்லியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 9.04 மணியளவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 4.4 அலகுகளாக பதிவாகி உள்ளது. டெல்லியை சுற்றியுள்ள காசியாபாத், குருகிராம், நொய்டா உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டது. ஹரியானாவின் குராவாரா பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததது.
கர்நாடகத்தில் இதய நோய் பீதி மருத்துவமனைகளில் குவியும் மக்கள்
கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் கடந்த 40 நாட்களில் 22 பேர் இதய கோளாறு ஏற்பட்டு மரணம் அடைந்தனர் .ஒரு பத்தாம் வகுப்பு மாணவனும் பள்ளியில் இதய கோளாறு காரணமாக திடீரென மரணம் அடைந்தான். இதனால் அந்த ஊரை சேர்ந்தவர்கள் தங்களுக்கும் இதய நோய் இருக்குமா என்று பயத்தில் ஒரே நேரத்தில் மருத்துவமனைகளுக்கு படை எடுத்தனர இதனால் டாக்டர்கள் அவர்களை பரிசோதிக்க இயலாது திகைத்தார்கள் ஒவ்வொருவரையும் வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இருந்தாலும் தொடர்ந்து அந்த பகுதியில் […]
எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல். வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் காவல் துறையினர் நடத்திய சோதனையில் புரளி என தெரியவந்தது; வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்கள் யார் என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஜய் வீட்டில் ரெய்டு நடத்திய அதிகாரிக்கு கட்சி பதவி
தமிழ்நாட்டில் வருமான வரித்துறை அதிகாரியாக பனியாற்றிய போது, நடிகர் விஜய் மீது 2020-ல் நடந்த வருமான வரித்துறை சோதனையின் தலைமை அதிகாரியாக செயல்பட்டார். பின்னர் வழக்கம் போல் அந்த வழக்கு நீர்த்து போனது அப்போது முதல் தான் இவருக்கும் விஜய்க்கும் நெருக்கம் ஏற்பட்டது. தனது செல்வாக்கு, பாஜக தொடர்புகளை பயன்படுத்தி தவெகவிற்கு தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய இவர் உதவியதால் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு உள்ளாகி, தனது பதவியை ராஜினாமா செய்தார்.தற்போது தவெகாவில் இணைந்தார். கொ.ப.செ.ஆனார்
.வேகமாக பரவும் கொரோனா.. மீண்டும் லாக்டவுன் அச்சம்!
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருகிறது. இதுவரை பாதிப்பே இல்லாத இமாச்சலப் பிரதேசத்திலும் நேற்று ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்தச் சூழலில், ஹாஸ்பிடல்களில் போதிய ஆக்ஸிஜன்கள், படுக்கைகள், மருந்துகளை இருப்பு வைக்குமாறு மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால், மீண்டும் ஒரு மினி லாக்டவுன் வருமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது.
.இது தமிழ் பண்பாடா? வேல்முருகனுக்கு கண்டனம்
நடிகர் விஜய் குறித்து வேல்முருகன் பேசியதற்கு தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். மாணவ, மாணவிகள் விஜய்யை அண்ணா என அழைப்பது அன்பின் வெளிப்பாடு என கூறியுள்ளார். இது அரசியலுக்கு அப்பாற்பட்ட அழைப்பு, அந்த உறவை கொச்சைப்படுத்துவது, குழந்தைகள் மற்றும் பெற்றோரின் மனதை புண்படுத்தும் செயலாகும் என சாடியுள்ளார். மேலும் இது தமிழ் பண்பாடும் அல்ல, மனிதநேயமும் அல்ல என்றும் விமர்சித்துள்ளார்.