ஓசூரில் முதலீட்டாளர்கள் மாநாடு: ஸ்டாலின் அறிவிப்பு
தூத்துக்குடியைப் போல ஓசூரிலும் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.வெளிநாடு சுற்றுப்பயணம் முடிந்து இன்று சென்னை திரும்பிய ஸ்டாலின் இதனை தெரிவித்தார்
தங்கம் விலை குறைந்தது.
22 காரட் ஆபரணத் தங்கம்ஒரு கிராம் நேற்று ரூ.10,005 ஆக இருந்த விலை, இன்று ரூ.35 குறைந்து ரூ.9,970 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் (8 கிராம்) நேற்று ரூ.80,040 ஆக இருந்த விலை, இன்று ரூ.280 குறைந்து ரூ.79,760 ஆக விற்பனையாகிறது.
1 கிராம் தங்கம் ரூ 10000த்தை தாண்டியது
இன்று வரலாற்றில் இதுவரை இல்லாத உச்சமாக தங்கம் விலை தொட்டுள்ளது. கிராமுக்கு140 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,005-க்கும் சவரனுக்கு 1,120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.80,040-க்கும் விற்பனையாகிறது. கடந்த 3 நாட்களில் சவரன் ரூ.3080 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திற்கு ரூ.15,516 கோடி முதலீடுகள் – முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கான பயணத்தில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இவற்றில் ஜெர்மனியில் மேற்கொண்ட பயணத்தில் 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், இங்கிலாந்தில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. ஜெர்மனியில் ரூ.7,020 கோடியும், இங்கிலாந்தில் ரூ.8,496 கோடியும் என மொத்தம் ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளார்.
செங்கோட்டையன் பற்றி பேச மறுக்கும் எடப்பாடி
செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுகவில் இருந்து வெளியேறியவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும். அப்போதுதான் வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். இதற்காக பழனிசாமிக்கு கால அவகாசமும் அளிப்பதாக தெரிவித்திருந்தார். இது குறித்து தேனியில் தங்கியிருந்த பழனிசாமியிடம் கேள்வி கேட்க செய்தியாளர்கள் முயற்சித்தனர். ஆனால், அதனைத் தவிர்த்துவிட்டு காரில் அவசரமாக கம்பம் பிரச்சாரத்துக்கு கிளம்பிச் சென்றார். கம்பம் பிரச்சாரத்திலும் செங்கோட்டையன் குறித்த பேச்சு இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அங்கும் செங்கோட்டையனைப் பற்றி அவர் எதுவும் […]
எடப்பாடி வேளை மறித்த ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள்
கம்பம் பிரச்சாரத்துக்காக தேனியில் இருந்து பழனிசாமி சென்று கொண்டிருந்தார். அப்போது அனுமந்தன்பட்டி அருகே அமமுகவினர் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவரது வாகனத்தை திடீரென மறித்தனர். அதிமுகவில் இருந்து விலகியவர்கள் அனைவரும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர். போலீஸார் உடனடியாக அவர்களை அப்புறப்படுத்தியதைத் தொடர்ந்து வாகனங்கள் கிளம்பிச் சென்றன.
மாணவர்கள் மசாஜ்.தலைமை ஆசிரியை இடமாற்றம்
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே பள்ளி வகுப்பறையில் தலைமை ஆசிரியரின் கை, கால்களை மாணவர்கள் மசாஜ் செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதையடுத்து, தலைமை ஆசிரியர் வேறு பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட்டு உள்ளார்.
எடப்பாடிக்கு எதிராக பேசவில்லை – பிரேமலதா
மேல்மருவத்தூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், “என்னுடைய தேமுதிக சார்பில் நடைபெறும் “உள்ளம் தேடி இல்லம் நாடி” என்ற முதல் சுற்றுப்பயணம் வெற்றிகரமாகவும் மக்களுடைய ஆதரவோடும் மிக சிறப்பாக நடைபெற்றது. மீண்டும் இரண்டாம் கட்ட பயணம் வருகின்ற ஐந்தாம் தேதி தொடங்கி செப்டம்பர் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது எங்கு சென்றாலும் மக்கள் மிகச் சிறப்பான வரவேற்பு அளித்தார்கள். நான் பலமுறை எங்கள் கட்சி கூட்டணி குறித்து கூறிவிட்டேன் கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணியை […]
“வளர்ப்பு நாய்களுக்கு `மைக்ரோ சிப்’ கட்டாயம்”
சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ பொருத்துவது கட்டாயம், சிப் பொருத்தாத நாய் உரிமையாளர்களுக்கு ரூ.3,000 அபராதம்விதிக்கப்படும் சென்னையில் நாய்கள் வளர்க்க புதிய விதிகள்அடுத்த மாதம் அமலுக்கு வருகிறது, நாய்களைவெளியே அழைத்து செல்லும்போது வாய்மூடி கட்டாயம் போடப்பட வேண்டும் நாய்கடி சம்பவங்களை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்து உள்ளது
9 நாளில் பவுன் விலை ரூ 4000 அதிகரிப்பு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.78 ஆயிரத்தை தாண்டி, வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்தது. பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.78,440-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.80 உயர்ந்து ரூ.9,805-க்கு விற்பனையானது. தங்கம் விலையை பொறுத்தவரை கடந்த மாதம் 25-ம் தேதி முதல் செப்.3-ம் தேதி வரை 9 நாட்களில் பவுனுக்கு ரூ.4,000 வரை உயர்ந்துள்ளது.