விஜய் பிரச்சாரத்தில் மைக் கோளாறு.
திருச்சியில் விஜய் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே மைக் வேலை செய்யவில்லை. ஸ்பீக்கர்களும் சரியாக வேலை செய்யவில்லை. இதனால் அவர் பேச்சு தொலைக்காட்சி நேரலைகளில் சரிவர கேட்கவில்லை. மேலும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தனது பேச்சை சுருக்கமாக 20 நிமிடத்தில் முடித்துக் கொண்டார்.
விஜய் வருகையால் திருச்சியில் போக்குவரத்து நெரிசல்
தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் என்று திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்கினார் அவர் தனி விமானத்தில் திருச்சிக்கு வந்தால் விமான நிலையத்திலிருந்து பிரச்சாரம் பேசும் இடத்திற்கு பஸ்ஸில் செல்வதற்கு நாலு மணி நேரம் ஆகிவிட்டது வழியதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்தனர்
அரசு பேருந்தை வழிமறித்த காட்டு யானை
நீலகிரி மாவட்டம் – கூடலூர் பகுதி ஓவாலி மூலக்காடு எஸ்டேட் சாலையில் அரசு பேருந்தை ஒற்றை காட்டு யானை. வழி மறித்தது தொடர்ச்சியாக ஹார்னை ஒலித்ததும் பின்வாங்கி திரும்பி சென்றது.
பயணிகளை தரக்குறைவாக நடத்தும் தனியார் பேருந்து ஊழியர் வீடியோ வைரல்
திருச்செந்தூர் – தூத்துக்குடி வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகளில் பயணிகளை தரக்குறைவாக நடத்துவதாக புகார் எழுந்துள்ளது. காயல்பட்டினத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை, தனியார் பேருந்து நடத்துனர் ஏறவிடாமல் தடுத்து, தகாத வார்த்தைகளால் பேசியது இணையத்தில் பரவி வருகிறது.
டெல்லியில் செங்கோட்டையன் அமித்ஷா சந்திப்பு
டெல்லியில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்துப் பேசியது அதிமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .இதற்கிடையே செங்கோட்டையன் இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகின்றார்.
தாம்பரம் பகுதியில் கேபிள் கழுத்தில் சிக்கி முதியவர் படுகாயம்
தாம்பரம் மா நகராட்சி மண்டலம் 3,வார்டு 22/39 , திருமலை நகர் வடக்கு விரிவாக்கம் இரண்டாம் குறுக்கு தெருவில்,சட்ட விரோதமாக கேபிள்கள் மின் கம்பத்தில் கட்டப்பட்டு உள்ளன. இதை பற்றி ஏற்கனவே பல முறை புகார் அளித்தும் ஒரு பயனும் இல்லை. முதியவர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வரும் போது, சட்ட விரோத கேபிள் கழுத்தில் மாட்டி கீழே விழுந்தார். நல் வாய்ப்பாக ,உயிர் சேதம் ஏதும் இல்லை. அந்த கேபிளில் மின்சாரம் பாய்ந்து இருந்தால் […]
அஜித் படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த தடை
அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படத்தில்இளையராஜா பாடலை பயன்படுத்த இடைக்கால தடை, விதிக்கப்பட்டுள்ளது இளையராஜா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது இளையராஜா மனுவுக்கு பதிலளிக்ககுட் பேட் அக்லி தயாரிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
மல்லை சத்யா மதிமுகவில் இருந்து நீக்கம்
மதிமுகவில் இருந்து மல்லை சத்தியாவை நிரந்தரமாக நீக்கி பொதுச்செயலாளர் வைகோ இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மல்லை சத்யா கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, மல்லை சத்யா மதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவியில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுகிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் காதலன் தடை:4வது மாடியில் இருந்து குதித்த காதலி
சென்னை, சேப்பாக்கத்தில் இன்ஸ்டாகிராமில்காதலன் பிளாக் செய்ததால், ஹோட்டல் மாடியில் இருந்து கல்லூரிமாணவி குதித்தார். 4வது மாடியில் இருந்து குதித்ததில் படுகாயம் அடைந்த இளம்பெண் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இது பற்றி
தலைமைச் செயலகம் ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்
*சென்னை தலைமை செயலகத்திற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. *காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மிரட்டலை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர் சென்னை ஆளுநர் மாளிகைக்கும் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் வந்தது.இதைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.