மழைக்கால நோய்கள் -டெங்கு கொசு கடிக்கும் நேரம்
தற்போது மழை காலம் தொடங்கிவிட்டது இதனால் டெங்கு உட்பட பல்வேறு நோய்கள் குழந்தைகளை தாக்குகின்றன இதுகுறித்து இந்திய குழந்தைகள் மருத்துவ அகாடமி தமிழ்நாடு குழுத் தலைவர் டாக்டர் ராஜேந்திரன் கூறும்போது, ‘டெங்கு’ பாதிப்பு ஏற்படுத்தும் கொசுக்கள் பெரும்பாலும் காலை 6 முதல் 8 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் தான் கடிக்கும். குழந்தைகள் கை, கால்கள் முழுவதும் மூடும் வகையிலான ஆடைகளை அணிய வேண்டும். வீட்டின் சுற்றுப்புற பகுதிகளில் தேங்கி […]
நவ.4-ஆம் தேதி 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தமிழ்நாடு மாநிலப் பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் இயங்கும் தனியார் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை நவம்பர் 4ஆம் தேதி வெளியிடப்படவிருக்கிறது.
கரூர் விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மாமல்லபுரத்தில் சந்திக்கும் விஜய்
தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் கரூர் நெரிசல் சம்பவத்திற்கு பிறகு வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை .ஒரு சில நாட்கள் மட்டும் பனையூர் அலுவலகத்திற்கு வந்து போனார். 40 நாட்களுக்கும் மேலாக வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார் கரூருக்கு சென்று நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது தற்போது 50 குடும்பத்தினரை மாமல்லபுரத்துக்கு வரவழைத்து அவர்களை தனித்தனியாக சந்திக்க இருப்பதாக தெரியவந்துள்ளது இதற்காக அங்குள்ள பிரபல ஓட்டலில் 50 […]
சீமை கருவேல முள் அகற்ற தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கெடு
தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான திட்டத்தை அக்டோபர் 10ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என உயர்நீதி மன்றம் கூறியுள்ளது ஆனால் வடகிழக்கு பருவ மழை தொடங்க இருப்பதால் மேலும் 3 மாத கால அவகாசம் வேண்டும் என தமிழக அரசு கேட்டது சீமை கருவேல மரங்களை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து 15 ஆண்டுகள் கடந்து விட்டது வடகிழக்கு பருவ மழையை காரணம் காட்டி, சீமை கருவேல மரங்களை அகற்றுவதைஎன்று நீதிமன்றம் […]
மதப் பிரச்சாரம் செய்ய வந்தவர்கள் மீது திருநீறு பூசிய வழக்கில் நைனார் உதவியாளர் மீது வழக்கு
நெல்லை அருகே ஜெபம் செய்யச் சென்றவர்கள் மீது குங்குமம் பூசியதாக, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் அலுவலக உதவியாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் கீழக்கல்லூர், நடுக்கல்லூர் கிராமங்களுக்கு கடந்த 22-ம் தேதி வந்துள்ளனர். அவர்கள் கீழக்கல்லூர் பகுதியில் மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி, இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் மணிகண்டன் மகாதேவன், பாஜகவைச் சேர்ந்த அங்குராஜ் உட்பட 3 பேர் வழிமறித்து, […]
அதிமுக பாஜக சந்தர்ப்பவாத கூட்டணி -விஜய் தாக்கு
நாமக்கல் பகுதியில் நடந்த பிரச்சாரத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கூறியதாவது:-அதிமுக பாஜக இடையே ஏற்பட்டு இருப்பது சந்தர்ப்பவாத கூட்டணி அதேசமயம் திமுக குடும்பமும் பாஜகவுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளது எனவே தமிழகத்தில் தமிழக வெற்றி கழகத்திற்கும் திமுகவுக்கும் தான் நேரடி போட்டி அதை பார்த்துவிடலாம் என்று விஜய் கூறினார்
திருவண்ணாமலையில் கார்த்திகை திருவிழா நவ.21ம் தேதி கொடியேற்றம்
திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நவ.21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது டிசம்பர் 3ம் தேதி அதிகாலை பரணி தீபமும், மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் மலை மகா தீபமும் ஏற்றப்படுகிறது
விஜயுடன் காங்கிரஸ் ரகசிய பேச்சு
தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி சேர்வது குறித்து காங்கிரஸ் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக டெல்லியில் தகவல் பரவி உள்ளது காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால் டெல்லியில் தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்தை சந்தித்ததாகவும் இதற்கு ஒரு காங்கிரஸ் எம்பி ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது. நடிகர் விஜய்யை முதல்வராக ஏற்கவும் காங்கிரஸுக்கு 70 இடங்கள் ஒதுக்க வேண்டும் என்றும் துணை முதல்வர் பதவி வேண்டும் என்றும் பேச்சு நடப்பதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டசபை அடுத்த மாதம் கூடுகிறது.
தமிழக சட்டசபை அக்டோபர் 14ம் தேதி கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். அக்டோபர் 14ம் தேதி சட்டசபை காலை 9.30 மணிக்கு கூட்டத்தொடர் தொடங்கும். முதல் நாளில், மறைவுற்ற முன்னாள் சட்டசபை எம்எல்ஏக்கள் குறித்து இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். வால்பாறை தொகுதி எம்எல்ஏ கந்தசாமி மறைவு குறித்தும் உயிரிழந்த பிரபலங்கள் குறித்தும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். அக்டோபர் மாதம் 14ம் தேதிக்கு முன்னதாக ஏதாவது ஒரு தேதியில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டப்பட்டு சட்டசபை கூட்டம் எத்தனை […]
பாலியல் வழக்கு சாமியார் தலைமறைவு.
பாலியல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டபிரசன்ன சதுர்வேதி சாமியார் தலைமறைவாகி உள்ளார். 2004ம் ஆண்டு தொழிலதிபரின் மனைவி-மகளை கடத்திய வழக்கில் தலைமறைவாக உள்ள சதுர்வேதி சாமியார் மீது சென்னைமத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவுசெய்துள்ளனர்.