புதிய தலைமை நீதிபதி 24ந்தேதி பதவி ஏற்பு

53-வது தலைமை நீதிபதியாக சூர்யா காந்த் நியமிக்கப்பட்டார் நவம்பர் 24 அன்று பதவியேற்கிறார் உச்ச நீதிமன்ற நீதிபதியான சூர்யா காந்த், இந்தியாவின் 53-வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். வரும் நவம்பர் 24 அன்று அவர் பதவியேற்க உள்ளார். 2027ஆம் ஆண்டு பிப்ரவரி 9 வரை அவர் இந்த பதவியில் நீடிப்பார்.

குடும்ப பென்சனுக்கு உச்சவரம்பை உயர்த்த முடிவு

குடும்ப நலநிதியில் சேர தற்போது மாத வருமானத்தின் உச்சவரம்பு ரூபாய் 15 ஆயிரம் ஆக உள்ளது .இதனை ரூபாய் 25 ஆயிரம் ஆக்க குடும்ப நல நிதி அமைப்பு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது விரைவில் அது பற்றி முடிவு எடுக்கப்பட உள்ளது.

குரூப் 4 தேர்வு சான்றிதழ் பதிவேற்ற அவகாசம்

குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், நவம்பர் 7ம் தேதிக்குள் சான்றிதழ் பதிவேற்ற அவகாசம். வழங்கப்பட்டு உள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆன்லைன் மூலம் வரும் நவ.7ம் தேதி வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம் மேலும் தகவலுக்கு 1800 419 0958 என்ற கட்டணமில்லா எண்ணை அழைக்கலாம். 4,662 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவு கடந்த 12ம் தேதி வெளியானது.

ஆபரணத் தங்கம் விலை ரூ.1,800 குறைந்தது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,800 குறைந்து ஒரு சவரன் ரூ.88,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.225 குறைந்து ஒரு கிராம் ரூ.11,100க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை சில்லறை வர்த்தகத்தில் கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.165க்கு விற்பனையாகிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்கு 2 வாரம் ஓய்வு |

வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதத்தில்தான் அதன் ஆட்டத்தை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே 2 நிகழ்வுகள் வங்கக்கடலில் உருவாகிவிட்டன. அதில் ஒன்று புயலாக வும் வலுப்பெற்று சூறாவளி புயலாக மழையை ஆந்திராவில் கொட் காலங்களில் ஒரு இடைவெளி ஏற்படும். அந்தவகையில் வடகிழக்கு டியுள்ளது. பொதுவாக ஒரு புயல் கரையை கடந்ததும், பருவமழை பருவமழை மீண்டும் தீவிரம் அடைவதற்கு 2 வார காலம் ஆகும் எனவும், அதுவரை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையால் பரவ தெரிவிக்கின்றனர். லான […]

சிலம்பம் சுற்றிய மு.க.ஸ்டாலின்

தென்காசியில் நடந்த அரசு விழாவில் பங்கேற்பதற்காக செல்லும் வழியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆலங்குளம் அருகே உள்ள கழுநீர்குளம் கிராமத்துக்கு சென்றார். அங்கு, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்த ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவி பிரேமாவுக்கு கொடுத்தவாக்குறுதியின்படி கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் மாணவியின் குடும்பத்துக்கு வீடுகட்டும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது மாணவி பிரேமாவின் தாயார் ரா.முத்துலட்சுமி,தந்தை சு.ராமசாமி ஆகியோரிடம் பேசினார். மேலும் […]

கோவையில் ரேஸ் கார் ஓட்டிய நடிகர் அஜித்குமார்

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள 111 ஏக்கர் பரப்ப ளவு மைதானத்தில் 3.8 கிலோ மீட் டர் நீளம் கார் பந்தய டிராக் உள் ளது. இந்த மைதானம் சர்வதேச தரத்தில் தயார் செய்யப்பட்டு உள் ளது. இதன் மூலம் கோவையில் சர்வதேச அளவிலான கார் பந்த யம், புகழ் பெற்ற பார்முலா 1 வகை கார்பந்தயங்களை நடத்த முடியும். இந்த நிலையில் நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித்குமார் கருமத்தம்பட்டியில் உள்ள சர்வ தேச […]

பிறந்தநாள் கொண்டாட சென்ற 4 பேர் விபத்தில் உயிரிழப்பு

கோவை பேரூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், மரத்தில் மோதிய விபத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குச் சென்ற 4 பேர் உயிரிழந்தனர் நண்பர்களான பிரகாஷ் (22), ஹரிஷ் (21), சபரி (21), அகத்தியன் (20) ஆகியோர் உயிரிழந்தனர் பிரபாகரன் (19) என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ரூ.5 கோடி நில மோசடி; -சிட்லபாக்கம் பெண் கைது

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நில அபகரிப்பில் ஈடு பட்ட 2 முக்கிய குற்றவாளிகளை தனித்தனி வழக்குகளில் தேடி வந்தனர். ரூ.3 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக கடந்த 2021-ம் ஆண்டு முதல் சுமதி (வயது 49) என்ற பெண்ணை தேடி வந்தனர். சென்னை சிட்லப்பாக்கத்தை சேர்ந்த இவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவலில் அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.இதே யில் பெண்கள் போன்று போலியான நில ஆவணங்களை தயாரிப்பதில் […]

விரைவில் கமல் -ரஜினி இணையும் படம்

தமிழ் சினிமாவின் இரு துருவங்களான ரஜினிகாந் தும், கமல்ஹாசனும் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புதிய படத்தில் இணைய போகிறார்கள் என்ற தகவல் ஒட்டுமொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் தூண்டி இருக்கிறது. இந்தப் படத்தை லோகேஷ் கனக ராஜ் இயக்கப்போவதாகவும், அடுத்த ஆண்டில் (2026) இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப் படுகிறது. இதற்கிடையில் ரஜினிகாந்தின் மகளான சவுந்தர்யா தெரிவித்த தகவல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், இதுதொ டர்பான ஒரு கேள்விக்கு, “கமல்ஹாசன் தயாரிக்கும் […]