சுங்கச்சாவடி அருகே கிடந்த சிறுத்தை
விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே தலையில் அடிபட்டு இறந்த நிலையில் சாலையோரம் சிறுத்தை கிடந்தது.வனப்பகுதியே இல்லாத இடத்தில் சிறுத்தை இறந்து கிடந்தது எப்படி என சிறுத்தையின் சடலத்தை கைப்பற்றி வனத்துறை மற்றும் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
அன்புமணி ஆதரவாளர்கள் 25 பேர் மீது வழக்கு
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அருள் எம்.எல்.ஏ-வை தாக்கிய சம்பவத்தில் அன்புமணி ஆதரவாளர்கள் 25 பேர் மீது ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்புமணி ஆதரவாளர் ஜெயபிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில், ராமதாஸ் ஆதரவாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிச்சாவரத்தில் அரிய வகை பொன்நிற குள்ள நரிகள்
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுரபுன்னை காடுகளில் அரிய வகை பொன்நிற குள்ள நரிகள் அதிகம் உள்ளதை வனத் துறையினா் கண்டறிந்துள்ளனா். இந்த சுரபுன்னை காடுகளில் நீா்நாய் மற்றும் பொன்னிற குள்ள நரிகள் அதிகளவில் உள்ளது வனத் துறையினரால் கண்டறியப்பட்டுள்ளது. இவைகள் மீன், நண்டு, இறால் போன்றவற்றை உண்டு வாழ்கின்றன. குள்ள நரிகள் அலையாத்திக் காடுகளின் தூய்மைப் பணியாளராக கருதப்படுகின்றன.
2 தேர்வில் கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி
தமிழகத்தில் முதன்முதலாக பிளஸ் 2 கணக்குப் பதிவியல் தேர்வுக்கு மாணவர்கள் கால்குலேட்டர் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது
வட மாவட்டங்களில் அதி கனமழை..!
வருகிற 12-ந் தேதிக்கு பிறகு கிழக்கு திசை காற்று தமிழக பகுதிகளுக்குள் வருகிறது. இதனைத்தொடர்ந்து 15-ந் தேதியில் இருந்து மீண்டும் பருவமழை தீவிரம் அடையும். அதனையடுத்து 4-வது வாரத்தில் அதாவது 23-ந் தேதி முதல் 30-ந் தேதிக்கு இடைபட்ட நாட்களில் புயலுக்கான வாய்ப்பு உள்ளதாகவும், இந்த புயலினால் வட மாவட்டங்களில் அதி கனமழை வரை பெய்து, மழைப்பாதிப்பை கொடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.
சென்னையில் நாய் வளர்க்க ரூபாய் 5000 கட்டணம்
சென்னை மாநகராட்சி பகுதியில் வீடுகளில் செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் சென்னை மாநகராட்சியிடம் உரிமம் பெறாவிட்டால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். செல்லப்பிராணிகளை பொது இடங்களில் அழைத்து செல்லும்போது கழுத்து பட்டை இன்றி அழைத்து சென்றால் உரிமையாளருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். பொது இடங்களில் செல்லப்பிராணிகள் பொதுவெளியில் கழிவு ஏற்படுத்த உரிமையாளர்கள் அனுமதிக்க கூடாது. பொது இடங்களில் செல்லப்பிராணிகள் கழிவு ஏற்படுத்தினால், அதனை சுத்தம் செய்வது உரிமையாளரின் கடமை. வரும் நவம்பர் 24ம் தேதி முதல் இந்த விதிமுறைகளை அமல்படுத்த சென்னை […]
சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
2025-26 கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை மத்திய இடைநிலை கல்வி வாரியமான CBSE வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்தாண்டு பிப்ரவரி 17 முதல் மார்ச் 10 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளதால் முன்கூட்டியே தேர்வு நடத்த முடிவு செய்துள்ளனர்.
மாதம்பட்டி ரங்கராஜ் காதலிக்கு ஆண் குழந்தை
நிறைமாத கர்பிணியாக இருக்கும் தனக்கு மாதம் மாதம் பராமரிப்பு தொகையை வழங்க மாதம்பட்டி ரங்கராஜுக்கு உத்தரவிடக் கோரி ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.இந்த நிலையில் ஜெய் கிறிசில்டாவுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்தது.
த.வெ.க அலுவலகதிற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் உள்ள த.பெ.க அலுவலகத்திற்கு வெடிகுண்டு போட்டால் வந்தது இதனை தொடர்ந்து அதிரடிப்படையினர் வந்து சோதனை நடத்தினார்கள் அதன் பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளியான தெரிய வந்தது.
தமிழ்நாட்டின் 35 வது கிரான்ட் மாஸ்டர்
தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம்பரிதி என்ற இந்தச் சிறுவன் சதுரங்க ஆட்டத்தில்இந்தியாவின் 90 ஆவது கிராண்ட் மாஸ்டர் என்ற தகுதியைப் பெற்றார்.தமிழ்நாட்டில் 35-வது இடத்தில் உள்ளார்