வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த படிவத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்யலாம்…
இணையதளம் வாயிலாக Enumeration Form-ஐ பூர்த்தி செய்து சமர்பிக்கலாம். இதற்கு தேவையான விஷயங்கள். உங்கள் அலைபேசி எண் voter ID யுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆதாரில் உள்ள உங்கள் பெயருடன், voter ID உள்ள பெயரும் பொருந்தி இருந்தால், இணையதளம் வாயிலாக சுலபமாக முடித்து விடலாம். தேர்தல் ஆணைய இணையதள முகவரி: https://voters.eci.gov.in/
எழும்பூருக்கு பதில் தாம்பரத்தில் புறப்படும் ரெயில்கள்
எழும்பூர் ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் முடியாததால் தாம்பரத்தில் இருந்து ரயில்கள் புறப்படும் நடவடிக்கை மேலும் நீடிக்கப்பட்டு உள்ளது உழவன், அனந்தபுரி, சேது எக்ஸ்பிரஸ் ரயில்கள் நவம்பர் 10 தொடங்கி 29 ஆம் தேதி வரையும், குருவாயூர் எக்ஸ்பிரஸ் மறு அறிவிப்பு வரும் வரையும் தாம்பரத்தில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
நவம்பர் 15ஆம் தேதி சீமான் நடத்தும் தண்ணீர் மாநாடு.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி ஆடு-மாடு மாநாடு, மலைகளின் மாநாடு, மரங்களின் மாநாடு போன்றவற்றை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. 2026 தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், மற்ற அரசியல் கட்சிகள் அரசியல் பரப்புரைக் கூட்டங்கள், மாநாடுகளை நடத்தி வருகின்றன. இந்நிலையில், சீமான் நடத்தும் மாநாடுகள் பேசும் பொருளாகி உள்ளன. இதற்கிடையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் ‘15 -ந்தேதி தண்ணீர் மாநாட்டை’ நடத்த நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது
பொங்கல் கால ரயில் பயண முன்பதிவு தொடங்கியது.
தமிழர் திருநாளான பொங்கல் 2026 ஜனவரி 14 அன்று கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் ரயிலில் பயணம் செய்ய இன்று காலை 8 மணி முதல் முன்பதிவு துவங்கியது. 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், ஜனவரி 9 முதல் ஜனவரி 18 வரை பயணிக்க விரும்புவர்கள், அதற்கேற்ப நவம்பர் 10 முதல் 19 வரை முன்பதிவு செய்து கொள்ளலாம். தினமும் காலை 8 மணி முதல் முன்பதிவு […]
.ஜனநாயகன் திரைப்படம் ஆயிரம் கோடியை வசூலிக்குமா?
படம் வெளியாவதற்கு முன்னரே ‘ஜனநாயகன்’ திரைப்படம் பல்வேறு உரிமைகளில் மிகப்பெரிய தொகையை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்யும் என்ற நம்பிக்கை வலுத்துள்ளது. படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் சுமார் ரூ. 120 கோடிக்கு வாங்கியுள்ளது. ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், இப்படத்தின் திரையரங்க உரிமையை ரூ. 120 முதல் ரூ. 130 கோடி வரை கொடுத்து வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் சேட்டிலைட் உரிமைகளும் ரூ. 50 […]
16-ந் தேதி முதல் மீண்டும் தீவிரம் அடையும் பருவமழை..!
இலங்கையையொட்டி தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுநிலை, தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்று, 16-ந் தேதியில் (ஞாயிற்றுக்கிழமை) இருந்து வடகிழக்கு பருவமழையை மீண்டும் தீவிரப்படுத்தும் என தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார். இதனால் 16, 17-ந் தேதிகளில் காவிரி டெல்டா, தென் மாவட்டங்களிலும், 17-ந் தேதி இரவில் இருந்து 19-ந் தேதி வரை சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்களிலும் மழையை எதிர்பார்க்கலாம் எனவும் அவர் கூறி உள்ளார். 20-ந் தேதிக்கு பிறகு […]
சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு தேசிய விருது!
நாட்டிலேயே சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பை கொண்ட நகரம் என்ற உயரிய தேசிய விருதான ‘நகா்ப்புறப் போக்குவரத்து திறன் விருதை’ மத்திய அரசு சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு வழங்கியுள்ளது.
தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு
வாரத்தின் முதல் நாளான இன்று (நவ.10) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.880 உயர்ந்து அதிரடி காட்டியுள்ளது. ஒரு பவுன் விலை ரூ.91 ஆயிரத்தைக் கடந்துள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் நேற்று பவுனுக்கு ரூ.240 உயர்ந்து, 90,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (திங்கள்கிழமை) கிராமுக்கு ரூ.110 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,410-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பவுனுக்கு ரூ.880 அதிகரித்து ஒரு பவுன் ரூ.91,280-க்கு […]
இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு கௌரவம்!
கோவாவில், 56 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா, வரும் நவ.20 முதல் நவ.28 ஆம் தேதி வரை நடைபெற்றவுள்ளது. இந்தியத் திரைப்பட விழாக்களில் முதன்மையான இவ்விழாவில் நாட்டின் முக்கிய திரைக்கலைஞர்கள் கௌரவிக்கப்படுவார்கள். இந்த நிலையில், இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நிகழ்ச்சியில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கௌரவிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதால், நடிகர் ரஜினிக்கு இந்த கௌரவம் வழங்கப்படுகிறது.
முதல்வர் வேட்பாளர் விஜய் பொதுக்குழுவில் தீர்மானம்
தமிழக வெற்றி கழக பொதுக்குழு இன்று நடைபெற்றது. இதில் விஜய் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தல் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மேலும் கூட்டணி குறித்தும் மற்ற தேர்தல் அணுகுமுறை குறித்தும் முடிவு செய்ய விஜய்க்கு அதிகாரம் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றினார்கள்.