சென்னை : 502 ஆண்டுகள் பழமையான புனித தோமையார் மலை தேசிய பசிலிக்கா தேவாலையத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிராத்தனை
ஏழை எளியேரை நேசிக்கவே இயேசு பிரான் மண்ணில் அவதரித்தார். தமிழகம், இந்தியா, உலகம் முழுவதும் அமைதி நிலவி சகோதரத்துவம் பெருக, அருட்தந்தை ஏ.டி.மைக்கல் சிறப்பு பிராத்தனை செய்தனர். 502 ஆண்டுகள் பழமையான சென்னை புனித தோமையார் மலை தேசிய பசிலிக்கா தேவாலையத்தில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு சிறப்பு திருப்பலில் அருட்தந்தை ஏ.டி.மைக்கல் தலைமையில் நடைபெற்றது, ஆலைய வளாகம் முழுவதிலும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இயேசு பிறப்பை எல்.ஈ.டி திரையில் ஏ.ஐ தொழில்நுட்ப உதவியால் விடியோ காட்சி திரையிட்டுட்டு […]
காஷ்மீர் போல மாறிய ஊட்டி
ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள், அவலாஞ்சி, அப்பர்பவானி, குன்னூர், கோத்தகிரி உள்பட மாவட்டம் முழுவதும் கடும் உறை பனிப்பொழிவு காணப்படுகிறது. ஊட்டி தலைகுந்தா பகுதியில் குறைந்தபட்சமாக மைனஸ் 1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. குறிப்பாக காலை நேரத்தில் குட்டி காஷ்மீரை போல் ஊட்டி தலைகுந்தா பகுதி காணப்படுகிறது. வழக்கமாக இந்த குளிர்காலத்தில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருக்கும். இந்த ஆண்டு இப்பகுதியில் உறை பனிப்பொழிவு ரீல்ஸ்கள் மூலம் சமூக வலைதளங்களில் வைரலானது. அதோடு […]
ஒரு ஆயிரம் கோடி வசூலை எட்டும் மாதவன் படம்
இந்தியாவில் ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், மாதவன் நடித்த ‘துரந்தர்’, வசூலில் முதலிடத்தில் இருந்த ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படத்தை முந்தியிருக்கிறது. ‘துரந்தர்’ இந்தியாவில் ரூ.600 கோடியும் உலகம் முழுவதும் இப்போது வரை ரூ.925 கோடியையும் வசூலித்து ஓடிக் கொண்டிருக்கிறது. இதன் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் வசூலைக் குறித்த 10 படங்கள்
ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் உருவாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த வருடமும் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் அதிக திரைப்படங்கள் உருவாகியுள்ளன. இந்தியா முழுவதும் பல மொழிகளில் சுமார் 1,519-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இந்தாண்டு வெளியாகி இருக்கின்றன. இதன் மூலம் மொத்தம் ரூ.12,291 கோடி வசூலாகியுள்ளன. இதில், 10 படங்கள் மட்டும் ரூ.4,443 கோடியை ஈட்டி அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களாக உருவெடுத்துள்ளன.
விராட் கோலி புதிய சாதனை
15 ஆண்டுகளுக்கு பிறகு பெங்களூரில் நடந்த விஜய் ஹசாரே போட்டியில் களமிறங்கிய விராட் கோலி ஆந்திர அணிக்கு எதிராக 131 ரன்கள் எடுத்தன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேகமாக 16 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார். தனது 330-வது இன்னிங்ஸில் விராட் கோலி இந்த சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்னர் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 391 இன்னிங்ஸ்களில் 16 ஆயிரம் ரன்களைக் கடந்திருந்ததே […]
கரூர் சம்பவம் டெல்லி விசாரணைக்கு வர புஸ்சி ஆனந்துக்கு உத்தரவு
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பரப்புரையில் 41 பேர் கரூரில் பலியான சம்பவ தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது .தற்போது கட்சியின் முக்கிய தலைவரான புஸ்சி ஆனந்த் உள்பட 4 பேரை 29ஆம் தேதி விசாரணைக்காக டெல்லிக்கு வருமாறு சிபிஐ உத்தரவிட்டுள்ளது
தங்கம் விலை நாலு நாளில் 3360 உயர்வு
இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து, ரூ.1,02,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,820-க்கு விற்பனையாகிறது. இதன்மூலம் தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறது.தங்கம் விலை கடந்த 4 நாட்களில் 3,360 அதிகரித்துள்ளது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, வெள்ளி கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ரூ.1,000-ம் அதிகரித்து, ஒரு கிராம் 245-க்கும், கிலோவுக்கு ரூ.2,45,000-க்கு விற்பனையாகிறது.
ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம்.
கடலூர்:- சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நடராஜர் சன்னதிக்கு எதிரே உள்ள கொடி மரத்தில் வேத மந்திரங்கள் முழங்க, வாத்திய கருவிகள் இசைக்க கொடியேற்றப்பட்டது. உத்சவ ஆச்சாரியார் சிவாநாத் தீட்சிதர் கொடியேற்றி வைத்தார். வருகிற ஜனவரி மாதம் 2ஆம் தேதி தேரோட்டமும், 3ஆம் தேதி ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெற உள்ளது.
பாகுபலி ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டாவின் 2ஆவது ஏவுதளத்தில் இருந்து பாகுபலி ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. தொலைதூரப் பகுதிக்கு கைப்பேசி இணைப்பு, அதிவேக 5ஜி இணையதள சேவை வழங்க இந்த செயற்கைக்கோள் உதவும். இஸ்ரோ அனுப்பிய செயற்கைக்கோள்களில் மிக அதிக எடை கொண்ட செயற்கைக்கோளாக இது இருக்கும். அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட AST SpaceMobile நிறுவனம், செயற்கைக்கோள் மூலம் 4ஜி, 5ஜி இணையச் சேவை வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தச் செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த படிவத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்யலாம்…
இணையதளம் வாயிலாக Enumeration Form-ஐ பூர்த்தி செய்து சமர்பிக்கலாம். இதற்கு தேவையான விஷயங்கள். உங்கள் அலைபேசி எண் voter ID யுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆதாரில் உள்ள உங்கள் பெயருடன், voter ID உள்ள பெயரும் பொருந்தி இருந்தால், இணையதளம் வாயிலாக சுலபமாக முடித்து விடலாம். தேர்தல் ஆணைய இணையதள முகவரி: https://voters.eci.gov.in/