சச்சின் சாதனையை முறியடித்த கோலி
இந்தூரில் நேற்று நடந்த கடைசி ஒரு நாள் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இந்த போட்டி மூலம் கோலி 35 மைதானங்களில் தன் ஒரு நாள் சதங்களை எடுத்துள்ளார். இதில் இந்தூர் சதம் கடைசியாக சேர்ந்தது. இதிலும் சச்சின் டெண்டுல்கரை கடந்து விட்டார் கோலி. சச்சின் 34 மைதானங்களில் சதம் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.
தங்கம் விலை மீண்டும் உயர்வு
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.170 உயர்ந்து, ரூ.13,450க்கும், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,360 உயர்ந்து ரூ.1,07,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று ஒரு கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.318 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.8,000 உயர்ந்து ரூ.3,18,000க்கு விற்பனையாகி வருகிறது.
அஜித் குமார் உடன் கார் பந்தயத்தில் செல்ல கட்டணம்
துபாயில் கார் பந்தயம் நடைபெற்று வருகிறது இதில் அஜித் குமார் ரேசிங் அணி தொடர்ந்து பங்கேற்று வருகிறது. வரும் 25ஆம் தேதி துபாய் ஆட்டோடிரோமில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த போட்டியின் போது அஜித்குமார் ஓட்டும் காரில் அவருடன் செல்வதற்கு 86 ஆயிரத்து 475 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது யார் வேண்டுமானாலும் இந்த பணத்தை கட்டி காரில் அவருடன் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டள்ளது.
விஜய் ஆலோசகர் கைதாக வாய்ப்பு
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு தேர்தல் யூக ஆலோசகராக ஜான் ஆரோக்கியசாமி செயல் பட்டு வருகிறார் அவர் கட்சியின் மாநாடு மட்டும் பொதுக்கூட்டங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நீதி பெற்று தந்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான ஆதாரங்கள் அடிப்படையில் அவர்கள் விசாரணை நடக்கிறது. அவர் கைதாக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன
நடிகர் விஜய் இடம் சி.பி.ஐ அதிரடி கேள்வி
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்காக மீண்டும் டெல்லிக்கு போய் உள்ளார்.இன்று அவரிடம் இரண்டாவது கட்ட விசாரணை நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் பேசும் போதே நெரிசல் ஏற்பட்டது உங்களுக்கு தெரியாதா? என்பது உட்பட பல கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் கேட்டனர் .வழி நெடுக அலங்கார வளைவுகள் இருந்ததால் கூட்டத்துக்கு வர தாமதம் ஆனதாக விஜய் கூறினார். இது தொடர்பான ஆதாரங்களை உடனே காட்டும் படி சி.பி.ஐ உத்தரவிட்டது.
பிரேமலதா பிடிவாதத்தால் கூட்டணியில் சிக்கல்
அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்க பேச்சுவார்த்தை நடத்தி வரும் தேமுதிக, பாமக-வை விட தங்களுக்கு ஒரு தொகுதியாவது கூடுதலாக வேண்டும் என்று கேட்பதால் அந்தக் கட்சியுடனான கூட்டணியை இறுதி செய்வதில் இழுபறி நீடிப்பதாகச் சொல்லப்படுகிறது.
ஆட்சியில் பங்கு ராகுல் காந்தி ஆலோசனை
காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் ஆட்சியில் பங்கு தர வேண்டும் என்று கேட்டு வருகிறது ஆனால் அவ்வாறு பங்கு தர முடியாது என்று அமைச்சர் ஐ பெரியசாமி நேற்று திட்டவட்டமாக அறிவித்தார் இதனை ஸ்டாலின் சொன்னதாக அவர் கூறினார் இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க ராகுல் காந்தி தமிழககாங்கிரசாரை டெல்லிக்கு அழைத்துள்ளார்
தமிழக சட்டசபை ஜனவரி 20 இல் கூடுகிறது
சென்னை, ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், 2026-ம் ஆண்டு புத்தாண்டில் முதல் சட்டசபை கூட்டம் ஜனவரி 20-ந் தேதி (செவ்வாய்கிழமை) நடக்க இருக்கிறது. இந்த கூட்டத்தில், கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்ற இருக்கிறார். இதுதொடர்பாக, சபாநாயகர் அப்பாவு இன்று தலைமைச்செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- “2026-ம் ஆண்டு தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஜனவரி 20-ந் தேதி கூடுகிறது. அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு கூடும் […]
விளையாட்டு வீராங்கனை பி.வி சிந்துவுக்கு புதிய பதவி
உலக பாட்மிண்டன் சம்மேளனம் (பிடபிள்யூஎப்) சார்பில் செயல்படும் விளையாட்டு வீரர்கள் ஆணையத்தின் தலைவராக இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 2026ம் ஆண்டு முதல் 2029ம் ஆண்டு வரை இந்தப் பதவியை வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட தவெ.க. நிர்வாகி தற்கொலை முயற்சி
திருவள்ளூர் மாவட்ட த.வெ.க. நிர்வாகி சத்திய நாராயணன் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். கிறிஸ்துமஸ் வாழ்த்து பேனரில் பூண்டி ஒன்றிய செயலாளர் விஜய் பிரபுவின் புகைப்படம் இல்லாததால், அவர் சத்திய நாராயணனை தொடர்பு கொண்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால், சத்திய நாராயணன் தற்கொலைக்கு முயன்று, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, பதவி விவகாரத்தில் தூத்துக்குடி பெண் நிர்வாகி அஜிதா தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.