தாம்பரத்தில் சரக்கு ரயில் பெட்டி கவிழ்ந்தது
தாம்பரம் ரெயில்வே பரமரிப்பு பகுதியில் நிறுத்திவைக்கப்பட்ட கார்களை ஏற்றி செல்லும் காலி சரக்கு ரெயில் மித வேகத்தில் சென்னையை நோக்கி இழுத்து செல்லப்பட்டது, மாலை சுமார் 7 மணியளவில் தாம்பரம்- சானடோரியம் இடையே சென்றபோது 8,9 மற்றும் 10 எனும் மூன்று காலி ரெயில் பெட்டிகள் தடம் புரண்டு வலதுபுரம் உள்ள தண்டவாளத்தையும் சேதப்படுத்தி நின்றது. இந்த தகவல் அறிந்த உயர் ரெயில்வே துறை அதிகாரிகள் பார்வையிட்டு வழகமாக செல்லும் விரைவு ரெயில் மற்றும் புறநகர் ரெயில் […]
வெள்ளரிக்காயில் மயக்கப் பொடி தூவி பெண்களிடம் நகை பறிக்கும் கும்பல் கைது
வேலூரில் இருந்து சென்னை தாம்பரம் சானடோரியத்திற்கு வரும் அரசு பேரூந்துகளில் திருமண முகூர்த்த தினம், அல்லது கோவில் விஷேச தினங்களில் பயணம் செய்யும் பெண்களிடம் நகை கொள்ளையடிப்பதாக 15 சவரன் நகையை பறிகொடுத்த மூன்று பெண்கள் தாம்பரம் போலீசில் புகார் கொடுத்தனர். இதன் அடிப்படையில் நகை பறிகொடுத்தவர்களிடம் முதலில் விசாரித்தபோது அருகிள் இருந்த பெண்ணிடம் இனிப்புகள், வெள்ளேரி காய் வாங்கி சாப்பிட்டபோது அரை மணி நேரம் மயக்கம் ஏற்பட்டதாகவும் அதன் பின்னர் மயக்கம் தெளிந்து பார்த்தால் பெண்ணையும் […]
தாம்பரம் சானடோரியம் அருகே ஜி.எஸ்.டி சாலையை கடக்க முயன்ற பூ வியாபாரம் செய்து வந்த மூதாட்டி மீது அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்தியே உயிரிழந்தார்

சென்னை குரோம்பேட்டை அடுத்த கக்கன் சாவடி பகுதியை சேர்ந்தவர் இசக்கியம்மாள் (80) அதே பகுதியில் பூ வியாபரம் செய்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் தாம்பரம் மார்கெட் பகுதியில் பூ வாங்குவதற்காக காசநோய் மருத்துவமனை அருகே சாலை கடந்த போது அவ்வழியாக தாம்பரம் பணிமனையில் இருந்து வந்த தாம்பரம்-செங்கல்பட்டு செல்லும் தடம் எண் 500 அரசு பேருந்து இசக்கியம்மாள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த குரோம்பேட்டை போக்குவரத்து […]
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் – தாம்பரம் சானடோரியம், ஹோம் சாலையில் 18 கோடி ரூபாய் செலவில் 461 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பணிபுரியும் மகளிர் விடுதிக் கட்டடத்தை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

இந்நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஐடக் சிரு, சமூக நலத்துறை ஆணையர் வே.அமுதவல்லி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
தாம்பரம் சானடோரியம் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேக்கம், நோயாளிகள் அவதி

தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அரசு நெஞ்சகநோய் மருத்துவமனை உள்ளது. இந்த வளாகத்தில் முழுவதும் மழைநீர் சூழ்துள்ளதால் வெளிநோயாளிகள், பார்வையாளர்கள் மருத்துவமனை சென்று வரமுடியாமல் மழைநீரில் நடந்துசென்றனர். மேலும் அங்கு பயன்பாட்டில் இல்லாத கட்டிடத்தில் மழைநீர் தேக்கம் அடைந்துள்ளது. அந்த கட்டிடத்தை சுற்றியுள்ள பகுதியில் ஆகாயதாமரை செடிகள் சூழ்ந்த நிலையில் உள்ளதால் நாள் பார்பதற்கு குளம்போல் காட்சியளிக்கிறது. ஏற்கனவே தாழ்வான பகுதியான இந்த மருத்துவமனையில் அருகாமையில் உள்ள பச்சமலை நீர் இப்பகுதியில் தேங்கி ஜி.எஸ்.டி சாலையில் உள்ள சிறிய […]
தாம்பரம் சானிட்டோரியத்தில் பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதி

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சானடோரியம், ஜட்ஜ் காலனி பகுதியில் ரூபாய் 18 கோடி மதிப்பீட்டில் 464 படுக்கைகள் கொண்ட நவீன வசதியுடன் புதியதாக கட்டப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ள அரசு பணிபுரியும் பெண்களுக்கான விடுதியினை தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா மற்றும் அதிகாரிகள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அங்கு அமைக்கப்படும் தங்கும் […]
பெரிய கட்டிடங்களில் தீ அணைக்க ட்ரோன்

தாம்பரம் சானடோரியத்தில், மாநில தீயணைப்பு துறை பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு, தீயணைப்பு துறை அலுவலர்கள் மற்றும் வீரர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்த நிலையில், 2023, ஜூலை மாதம், 137 வது அணிக்கான புதிய தீயணைப்போர் அடிப்படை பயிற்சி துவங்கியது. இது, மூன்று மாதங்கள் கொண்ட பயிற்சியாகும். 127 தீயணைப்பு துரை வீரர்களுக்கு, தீயணைப்பு துறை சார்ந்த அடிப்படை, தடை தாண்டுதல், ஆழ்கடல் நீச்சல், கயிறு மூலம் மீட்பது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பயிற்சி […]