தாம்பரத்தில் வானத்தில் தோன்றிய மர்ம ஒளி | மக்கள் அச்சம்

தாம்பரத்தில் வானத்தில் தோன்றிய மர்ம ஒளியால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டு உள்ளது சென்னையில் இசிஆர் பகுதி வானத்தில் மர்மமான 4 பறக்கும் தட்டுகள் ஏற்கனவே வந்ததாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று இதே போன்று தாம்பரம் பகுதியில் வானத்தில் 4 மர்ம ஒளி தோன்றியது பொதுமக்களை அச்சம் அடையவைத்துள்ளது.

தாம்பரம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ஆர்‌.அழகுமீனா மகளிர்‌ உரிமைத்‌ திட்ட விண்ணப்பம்‌ சரிபார்க்கும்‌ ஆய்வு

(29.08.2023) தாம்பரம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ஆர்‌.அழகுமீனா பம்மல்‌ மண்டலம்‌ அனகாபுத்தூர்‌ பகுதியில்‌ கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்டத்தில்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை சரிபார்க்கும்‌ கள ஆய்வு பணிகள்‌ நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.

தமிழக அரசினால் இரண்டாவது தலைசிறந்த தாம்பரம் மாநகராட்சி என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்

தாம்பரம் நகராட்சியாக இருந்து தரம் உயர்த்தப்பட்டு 18 மாதங்கள் ஆன தாம்பரம் மாநகராட்சி தமிழக அரசினால் இரண்டாவது தலைசிறந்த தாம்பரம் மாநகராட்சி என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல்நாத் மற்றும் நமது தாம்பரம் மாநகராட்சியின் ஆணையாளர் அழகுமீனா, தாம்பரம் மாநகராட்சியின் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் மற்றும் தாம்பரம் மாநகராட்சியின் துணை மேயர் கோ.காமராஜ் மரியாதை நிமித்தமாக பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

தாம்பரம் மாநகராட்சியை பாஜக உண்ணாவிரதம்

மணிப்பூர் கலவரத்தை விரைவில் கட்டுக்குள் மத்திய அரசு கொண்டுவரும் மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம் பேட்டி தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை செய்யாமல் இருக்கும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டம் மாவட்டத் தலைவர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம் தலைமையில் செம்பாக்கம், காமராஜபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்றது.இதில் பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்கள் […]

கால்நடைகளால் விபத்து தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தாம்பரம் மாநகராட்சியில் கால்நடைகளால் விபத்து ஏற்படுவதை தடுக்க கோரிமக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் சார்பில் மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னதாக ஊர்வலமாக சென்று மாநகராட்சி முன் கோஷம் எழுப்பி அடையாள ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ‘அனகாபுத்தூரில் தம்பதியர் இருவர் வாகனத்தில் செல்லும்போது நடுரோட்டில் படுத்திருந்த மாட்டின் மீது மோதி கட்டுப்பாடு இழந்து நாகம்மாள் கீழே விழுந்தவுடன் எதிரே வந்த தண்ணீர் லாரி மோதி உடல் நசுங்கி பலியாகி உள்ளார் எனவே மாநகராட்சி சாலையில் தெரியும் மாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் […]

தாம்பரம் மாநகராட்சியில் சரியாக குப்பை அள்ளாத தனியார் நிறுவனம். உறுப்பினர்கள் சரமாரி புகார்

தாம்பரம் மாநகராட்சியின் சாதாதணகூட்டம் மேயர் வசந்தகுமாரி தலைமையில் நடைபெற்றது.இதில் துணை மேயர் ஜி.காமராஜ், ஆணையாளர் அழகு மீனா ஐ.ஏ.எஸ் மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். 74 முக்கிய பொருள்களை மன்ற கூட்டத்தில் முன் வைத்து விவாதிக்கப்பட்டது. அப்போது மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி உள்ளாட்சி பிரமுகர்களாக மேயர், துணை மேயர், மாமன்ற உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் வழங்கிட தமிழக முதலமைச்சர் அறிவிப்பிற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினார்கள். அதனையடுத்து பேசும்போது குப்பைகளை அகற்ற அவர் லேண்ட் […]

தாம்பரம்‌ மாநகராட்சியின்‌ மாமன்ற கூட்டம்

தாம்பரம்‌ மாநகராட்சியின்‌ மாமன்ற கூட்டம்‌ மேயர்‌ வசந்தகுமாரி கமலகண்ணன்‌ தலைமையில்‌ இன்று (28.07.2023) மாநகராட்சி மைய அலுவலக மாமன்ற கூட்டரங்கில்‌ நடைபெற்றது. இக்கூட்டத்தில்‌ துணை மேயர்‌ கோ.காமராஜ்‌, ஆணையர்‌ ஆர்‌.அழகுமீனா‌, மண்டலக்‌ குழு தலைவர்கள்‌, நிலைக்‌ குழு தலைவர்கள்‌ மற்றும்‌ மாமன்ற உறுப்பினர்கள்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌.

தாம்பரம்‌ மாநகராட்சியின்‌ மாமன்றக்‌ கூட்டரங்கு

தாம்பரம்‌ மாநகராட்சியின்‌ மாமன்றக்‌ கூட்டரங்கில்‌ இன்று (2707.2023) தேர்தல்‌ நடத்தும்‌ அதிகாரி/மாநகராட்சி ஆணையாளர்‌ ஆர்‌.அழகுமீனா, தலைமையில்‌ நடைபெற்ற வரிவிதிப்பு மேல்முறையீட்டுக்‌ குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில்‌ மாமன்ற உறுப்பினர்கள்‌ எம்‌.வி.வாணிஸ்ரீ (வார்டு-3), ம.சத்யா (வார்டு-12), ஏ.பிருந்தாதேவி (வார்டு-19), க.மகேஸ்வரி (வார்டு-27), க.மகாலட்சுமி (வார்டு-37), இரா.ராஜா (வார்டு-44), திருமதி ப.லிங்கேஸ்வரி (வார்டு-51), ச.மதுமிதா (வார்டு-58), செ.ரமாதேவி (வார்டு-68) ஆகியோர்‌ போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்‌. இந்நிகழ்வில்‌ மேயர்‌ வசந்தகுமாரி கமலகண்ணன்‌, துணை மேயர்‌ கோ.காமராஜ்‌‌, மண்டலக்‌ குழுத்தலைவர்கள்‌ மற்றும்‌ மாமன்ற உறுப்பினர்கள்‌ உடன்‌ […]

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்

தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட 38 வது வார்டு பத்மநாப நகர் கருமாரியம்மன் ஆலய கூடத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமை தாம்பரம் மாநகராட்சி 38 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரண்யா மதுரை வீரன் பார்வையிட்ட போது எடுத்த படம் அருகில் திமுக நிர்வாகி சி.ஆர் மதுரை வீரன்

சிட்லபாக்கத்தில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணி நிறைவு

தாம்பரம் மாநகராட்சி, மண்டலம் 3, சிட்லபாக்கம் வார்டு 43க்கு உட்பட்ட திருமுருகன் சாலையில் சாலை பணிகள் நடந்து கொண்டுள்ளது. பல ஆண்டு காலங்களாக குடிநீர் விநியோகிக்கும் குழாய் பழுதடைந்து இருக்கிறது. அதனை சாலை பணிகள் முடிவடைவதற்க்குள் புதிய குழாயை அமைப்பதற்கு சி.ஜெகன் எம்.சி கோரிக்கை வைத்ததால், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா வழிகாட்டுதலின்படி தாம்பரம் மாநகராட்சியின் 3வது மண்டல குழு தலைவர் ச.ஜெயப்பிரதீப் புதிய குழாய் அமைப்பதற்க்கு ஆவனம் செய்தார். அவ்வாரே புதிய குழாய் அமைக்கப்பட்டு பணி […]