மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

குரோம்பேட்டை நியூ காலனி ஆறாவது குறுக்கு தெருவில் திடீரென்று மாநகராட்சி அவசரமாக ஒரு கால்வாயை அமைத்துள்ளது. இந்த கால்வாய் சீராக கட்டப்படவில்லை. கோணலும் மாநலுமாக இருக்கிறது. முறையாக கட்டப்படவில்லை. கால்வாயை எந்த இடத்தில் இணைப்பது என்று தெரியாமல் அப்படியே விட்டுவிட்டார்கள். அந்தக் கால்வாய் மூடப்படவும் இல்லை. அப்பகுதியில் உள்ள மக்கள் அந்தக் கால்வாயை தாண்டித்தான் வெளியே வர வேண்டும். இது குறித்து சமூக ஆர்வலர் வி.சந்தானம் கூறும்போது தனியார் பரிசோதனை நிலையம் ஒன்றிற்காக இப்படி அவசரமாக கால்வாய் […]
மழைநீர் தேங்குவதை தடுக்க தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை

தாம்பரம் மாநகராட்சியின் 4வது மண்டல அலுவலகத்தில் மண்டல குழு தலைவர் டி.காமராஜ் தலைமையில் மண்டல குழு கூட்டம் நடைபெற்றது.இதில் உதவியாளர் ஷகிலா, மாமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் மண்டல குழு தலைவர் டி.காமராஜ் பேசுகையில் :மண்டல அலுவலகத்தில் ஆட்கள் பற்றாக்குறைக்கு குறித்து துறையின் அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். விரைவில் ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.மழை காலத்தில் எங்கெல்லாம் தண்ணீர் நிற்குமோ அந்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தண்ணீர் தேங்கி நிற்காமல் உடனடியாக செல்லும்படி […]
நாய்களுக்கு கருத்தடை மாநகராட்சிக்கு கோரிக்கை

தாம்பரம் மாநகராட்சி 2வது மண்டல குழு கூட்டம் மண்டல தலைவர் ஜோசப் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. இதில் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி பொறியியல், சுகாதாரபிரிவு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். அப்போது தூர்வாரப்பட்ட கழிவுகள் ஆங் ஆங்கே தேக்கம் அடைந்துள்ளதாக மாமன்ற உறுப்பினர்கள் எடுத்துக்கூறினார்கள., அப்போது பேசிய மண்டல குழு தலைவர் மழை முன்னெச்சரிக்கை பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் விழிப்புடன் செயலாற்ற வேண்டும். போதிய பணியாளர்களுடன் மாமன்ற உறுபினர்களுடன் இணைந்து வெள்ளத் தடுப்பு பணிகளில் ஈடுபட வேண்டும். மழை […]
தாம்பரம் மாநகராட்சி பம்மல் மண்டலம், வார்டு-8குட்பட்ட, பஜனை கோயில் தெரு பகுதியில் ரூ.2500 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட உள்ள நகர்புற நல வாழ்வு மைய கட்டடப் பணி

தாம்பரம் மாநகராட்சி பம்மல் மண்டலம், வார்டு-8குட்பட்ட, பஜனை கோயில் தெரு பகுதியில் ரூ.2500 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட உள்ள நகர்புற நல வாழ்வு மைய கட்டடப் பணியினை மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன் அடிக்கல்நாட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, துணை மேயர் கோ.காமராஜ், பம்மல் மண்டலக் குழுத் தலைவர் வே.கருணாநிதி, உதவி செயற்பொறியாளர் கோவிந்தராஜ், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் உள்ளனர்.
பணியாட்கள் இல்லாமல் திணறும் தாம்பரம் மாநகராட்சி

சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் தனியார் நோய்கண்டறிதல் மைய்யத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்துவைத்தார். அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி மேயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் தாம்பரம் மாநகராட்சியின் மண்டல குழு தலைவர்கள் கருணாநிதி, ஜோசப் அண்ணாதுரை, காமராஜ், இந்திரன் உள்ளிட்டோர் தாம்பரம் மாநகராட்சியில் போதிய பணியாளர்கள் இல்லாததால் மக்களின் அடிப்படை பணிகள் தடைபடுவதாகவும் அதனால் பணியாட்களை நியமிக்க கோரிக்கை விடுத்தனர். இதனை கேட்டுகொண்ட அமைச்சர் அதிகாரிகள் […]
ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு சாலையில் உள்ள மழைத்தண்ணீர் வடிவதற்கு ஏதுவாக கால்வாய் ஏற்படுத்திய காட்சி

தாம்பரம் மாநகராட்சி சிட்லபாக்கம் 43வது வார்டுக்கு உட்பட்ட கஸ்தூரிபாய் தெரு, வியாசர் தெரு, சர்வமங்களா நகர் 4வது தெரு, கருணாநிதி தெரு ஆகிய தெருக்களில் மழைநீர் தேங்கி நின்றது. அப்பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். அவர்களின் கோரிக்கை ஏற்று மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் தனது சொந்த முயற்சியில் ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு சாலையில் உள்ள மழைத்தண்ணீர் வடிவதற்கு ஏதுவாக கால்வாய் ஏற்படுத்திய காட்சி.
வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

தாம்பரம் மாநகராட்சியின் அலுவலக கூட்ட அரங்கில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை ஆணையர், நகர்நல அலுவலர் தலைமை பொறியாளர், துப்புரவு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம்

தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன் தலைமையில் (29.09.2023) மாநகராட்சி மைய அலுவலக மாமன்ற கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை மேயர் கோ.காமராஜ், ஆணையர் ஆர்.அழகுமீனா, மண்டலக் குழு தலைவர்கள், நிலைக் குழு தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தாம்பரம் மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் நாளை (29.09.2023) காலை 10.00 மணி அளவில் மேயர் திருமதி வசந்தகுமாரி கமலகண்ணன் தலைமையில் நடைபெற உள்ளது.
தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 3 உட்பட்ட 43-வது வார்டில் மக்கள் குறை தீர்ப்பு

தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 3 உட்பட்ட 43வது வார்டில் உள்ள பாலாஜி அவென்யூ, சாந்தி அவென்யூ, பாலு அவென்யூ, கனகராஜ் அவென்யூ மற்றும் அப்பகுதியில் உள்ள மக்கள் குறைகளை, தெரிந்துகொள்ள மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் MC தலைமையில், சுகாதாரப்பிரிவு அதிகாரி திரு.நாகராஜ்(SO), கண்காணிப்பாளர் திரு.கார்மேகம்(SS), வருவாய்ப்பிரிவு ஆய்வாளர் திரு.பிரபாகரன்(RI), திரு.ரவிச்சந்திரன்(BC) மற்றும் பொறியாளர் பிரிவு திருமதி.ஜீவித்ரா(TA) மற்றும் அங்குள்ள பொதுமக்கள்கள் கலந்து கொண்டு மாநகராட்சியின் மூலம் எடுக்கப்படவேண்டிய வளர்ச்சி பணிகள் மற்றும் குறைகளும் அதற்குண்டான பொருட்கள் […]