மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சிலம்ப பயிற்சி தாம்பரம் மேயர் தகவல்

தமிழக அரசு சிலப்ப விளையாட்டுக்கு கல்வி, உயர் கல்வியில் இடஒதுகீடு அறிவித்த நிலையில் மாணவர்களிடம் சிலம்பம் கற்கும் ஆவர்வம் அதிகரித்துள்ளது. அதுபோல் தாம்பரம் மாநகராட்சி அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் படிக்கும் மாணவ, மணவியர்கள் மாநில அளவிளான சிலம்ப போட்டியில் பங்குபெற்று யுவனேஷ், அகல்யா, சங்கர தனுஷ் ஆகிய மாணவர் முதல் பரிசும், அதுபோல் இரண்டாம் முன்றாம் இடம் என 14 மாணவர்கள் ஒரே போட்டியில் பரிசுகோப்பைகளை பெற்றுவந்தனர். அவர்களை மற்ற பள்ளிமாணவர்கள் முன்னிலையில் நடைபெற்ற பாராட்டுவிழாவில் தாம்பரம் […]
தாம்பரம் மாநகராட்சி 38 வது வார்டு, திரு.வி.க நகர் மெயின் ரோடு மற்றும் திரு.வி.க. நகர் சுற்றுவட்டார பகுதிகளில் மழைநீர் செல்ல முடியாமல் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு இருந்தது

இதனை அறிந்து 38 வது மாமன்ற உறுப்பினர் திருமதி சரண்யா மதுரைவீரன் மேற்பார்வையில் தூய்மை பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்களை கொண்டு பாதாள சாக்கடையில் இருந்த அடைப்பு சரி செய்யப்பட்டு மழைநீர் செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டது. அருகில் சி.ஆர்.மதுரைவீரன்
வீடு வீடாக காய்கறி தொகுப்பு: தாம்பரம் மாநகராட்சி ஏற்பாடு

தாம்பரம் மாநகராட்சி சார்பில் இரவு நேரத்திலும் 1000 குடும்பங்களுக்கு காய்கறி தொகுப்புகள் கொண்ட நிவாரண பொருட்கள் விநியோகம் அமைச்சர்கள் கொடியசைத்து துவக்கி வைப்பு. தாம்பரம் மாநகராட்சிகுட்பட்ட பல்வேறு பகுதிகள் மிக்ஜாம் புயல் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டது. பெரும்பாலான இடங்களில் மழை நீர் முழுமையாக வடிந்துவிட்டது ஆனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப அத்தியாவசிய பொருட்களைதாம்பரம் மாநகராட்சி சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இரவு நேரத்திலும் மாநகராட்சி சார்பில் காய்கறிகள் தொகுப்புகள் வீடு வீடாக விநியோகம் […]
தாம்பரம் வந்துள்ள தேசிய பேரிடர் மிட்பு குழுவை தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் அழகுமீனா ஐ.ஏ.எஸ்

நேரில் சென்று அவர்களுடம் மீட்பு பணிகள் குறித்தும், தகவல் பறிமாற்றம், தேவையான உபகரணங்கள், வசதிகள் குறித்து ஆலோசனை நடத்தினார், இரவு அல்லது நாலை கன மழை பெய்தால் தேசிய பேரிடர் மிட்பு குழு வினர் மிட்புபணியில் ஈடுபடவுள்ளனர்.
குரோம்பேட்டை நியூ காலனிக்கு சங்கரய்யா பெயர் மாநகராட்சி தீர்மானம்

சுதந்திர போராட்ட தியாகியும், கம்யூனிஸ்ட் முதுபெரும் தலைவரான என்.சங்கரையா சில தினங்களுக்கு முன் காலமானர். இந்த நிலையில் இன்று தாம்பரம் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் ஜி.காமராஜ், மண்டல குழு தலைவர்கள் வே.கருணாநிதி, ஜோசப் அண்ணாதுரை, டி.காமராஜ், இந்திரன், மதிமுக மாமன்ற உறுப்பினர் புஹிராபானு நாசர் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இதில் தாம்பரம் மாநகராட்சியின் 2 வது மண்டலகுழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை மறைந்த சங்கரையாவிற்கு புகழ் சேர்க்கும் விதமாக […]
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட செம்பாக்கம் மண்டலம் திருமலை நகர் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரினை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றும் பணிகளை ஆணையாளர் ஆர்.அழகும்னா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தேங்கியிருக்கும் மழைநீரை அகற்றும் களப்பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது

இதனைத் தொடர்ந்து தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் மழையின் காரணமாக தேங்கியிருந்த மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கைகளை துணைமேயர் கோ.காமராஜ் (30.11.2023) காலை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு துரிதமாக மழைநீரினை வெளியேற்றிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா பெருங்களத்தூர் மண்டலம் டாக்டர் அம்பேத்கர் திருமண மண்டபம்

மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா பெருங்களத்தூர் மண்டலம் டாக்டர் அம்பேத்கர் திருமண மண்டபத்தில் தங்கியுள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரை சந்தித்து தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தற்போது பெய்து வரும் வடகிழக்குப் பருவமழை

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தற்போது பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக முன்னனச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தயார்நிலையில் இருப்பதை தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா (30.11.2023) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன் தலைமையில் (30.11.2023) மாநகராட்சி மைய அலுவலக மாமன்ற கூட்டரங்கில் நடைபெற்றது

இக்கூட்டத்தில் துணை மேயர் கோ.காமராஜ், மண்டலக் குழு தலைவர்கள், நிலைக் குழு தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.