இந்திய தேர்தல்‌ ஆணையத்தின்‌ உத்தரவின்படி, 2024 நாடாளுமன்றப்‌ பொதுத்தேர்தல்‌ 19.04.2024 அன்று நடைபெறுவதையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம்‌ தாம்பரம்‌ மாநகராட்சியில்‌ பொதுமக்களிடையே 100% வாக்களிப்பதன்‌ முக்கியத்துவம்‌ குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்திடும்‌ வகையில்‌ பெருங்களத்தூர்‌ மண்டல அலுவலகத்தில்‌ தேர்தல்‌ குறித்து ரங்கோலி கோலம்‌ வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

தாம்பரம் மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் அதிமுக வெளி நடப்பு

தாம்பரம் மாநகராட்சியில் 2024-25ம் ஆண்டுகான நிதி நிலை அறிக்கையை மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் நிதிக்குழு தலைவர் ரமணி ஆதிமூலம் தாக்கல் செய்தார். அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடையணிந்த நிலையில் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் இன்று கூடியது. இதில் துணைமேயர் ஜி.காமராஜ், ஆணையாளர் அழகுமீனா, அதிகாரிகள், மண்டலகுழு தலைவர் டி.காமராஜ், திமுக கவுன்சிலர்கள், ஜெகன், சுரேஷ், மதிமுக மாமன்ற உறுப்பினர் புஹிரா பானு […]

தாம்பரம்‌ மாநகராட்சியின்‌ மாமன்றக்‌ கூட்டரங்கில்‌, மேயர்‌ வசந்தகுமாரி கமலகண்ணன்‌ தலைமையில்‌, 2024&2025 ஆம்‌ நிதி ஆண்டிற்கான தாம்பரம்‌ மாநகராட்சியின்‌ நிதிநிலை அறிக்கையினை நிதி குழு தலைவர்‌ ஆர்‌.ரமணி சமர்ப்பித்தார்‌

இக்கூட்டத்தில்‌ துணைமேயர்‌ கோ.காமராஜ்‌‌, ஆணையாளர்‌ ஆர்‌. அழகுமீனா, மண்டல குழு தலைவர்கள்‌, நிலை குழு தலைவர்கள்‌ மற்றும்‌ மாமன்ற உறுப்பினர்கள்‌ உட்பட பலர்‌ கலந்து கொண்டனர்‌.

மின் கம்பங்களில் பதாகைகள் மாநகராட்சி அபராதம் விதிக்குமா- ?அறப்போர் இயக்கம் கேள்வி -?

குரோம்பேட்டை வார்டு 23,24,25,26 பகுதிகளில் கட்டுமான நிறுவனங்களால் சாலையில் திரும்பும் இடங்களில் எல்லாம் போக்குவரத்துக்கு இடையூறாகவும் விபத்தை ஏற்படுத்தும் வகையிலும் மின் கம்பங்களிலும், இன்டர்நெட் சேவை கம்பங்களிலும் 300க்கும் அதிகமான விளம்பர பதாகைகள் மற்றும் அட்டைகள் கட்டி வைக்கப்பட்டிருந்தன. இவை அந்த பகுதியை அசிங்கமாகவும்/அலங்கோலமாகவும் ஆக்குகின்றன. என அறப்போர் இயக்கத்தை சேர்ந்த டேவிட் மனோகரன் புகார் கூறியிருந்தார். உடனடியாக மாநகராட்சியின் மண்டலம் 2 & 3 நகர அமைப்பு ஆய்வர்கள், அலுவலர்கள் மற்றும் ராதா நகர் மின்வாரிய […]

பாலியல் தொல்லை புகார் தாம்பரம் சுகாதார அதிகாரி மாற்றம்

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட திருநீர்மலை அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளராக வேலை பார்ப்பவர் ராஜசிம்மன் தனக்கு கீழ் வேலை பார்க்கும் தூய்மை பணியாளர்களை தொடர்ந்து ஆபாசமாக பேசி அவமரியாதை படுத்தி வருவதாகவும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவதாகவும், தூய்மை பணியின் போது பாதுகாப்பு உபகரகரணங்களை கேட்டால் தகாத வார்த்தைகளில் பேசுவதாக கூறி அவர் மீது துறை ரீதியாக நடவடிக்க எடுக்க வலியுறுத்தி தாம்பரம் மாநகராட்சி தொழிலாளர் சங்கம் சார்பில் தலைவர் ராஜசிம்மன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் […]

தாம்பரம்‌ மாநகராட்சி அலுவலக மாமன்ற கூட்ட அரங்கில்‌ ஆணையாளர்‌ ஆர்‌.அழகுமீனா தலைமையில்‌ மிக்ஜாம்‌ புயலினால்‌ ஏற்பட்ட கனமழையால்‌ பாதிக்கப்பட்ட மாநகராட்சி பகுதியில்‌ மீட்புப்‌பணிகளை சிறப்பாக மேற்கொண்ட மீனவர்களுக்கு மேயர்‌ வசந்தகுமாரி கமலகண்ணன்‌ பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்

இந்நிகழ்ச்சியில்‌ துணை மேயர்‌ கோ.காமராஜ்‌ மண்டலகைமு தவைவர்கள்‌, நிலைக்குழு தலைவர்கள்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌, மாநகராட்சி அலுவலர்கள்‌ உட்பட பலர்‌ உடனிருந்தனர்‌.

தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட திருமலை நகர் கிளை நூலகத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் செங்கை பாரதியார் மன்றம் இணைந்து நடத்தும் வாசிப்பு திருவிழா மற்றும் தனி திறனாளர்களுக்கான கோலப்போட்டிகள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியினை செம்பாக்கம் மண்டல குழு தலைவர் ஜெயப்பிரதீப்சந்திரன் துவக்கி வைத்தார்

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் திருமதி கிரிஜாசந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். விழாவிற்கான ஏற்பாடுகளை திருமலை நகர் கிளை நூலக வாசிப்புசங்கத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது முன்னதாக மண்டலகுழு தலைவர் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தாம்பரம் மாநகராட்சி 43வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் தொடர் முயச்சியால் 8, 13, 16 ஆகிய 3 தேதிகளில் அப்பகுதிகளில் தொடர்ந்து மருத்துவமுகாம்கள் நடத்தப்பட்டது.

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 30வது வார்டு பெருமாள் நகர் பகுதிகளில் மிக்ஜாம் புயலால் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதி பொதுமக்களுக்கு தாம்பரம் மாநகராட்சியின் துணை மேயர் கோ.காமராஜ் உணவு வழங்கினார்

இப்பணியில் பம்மல் வடக்கு பகுதி செயலாளர் தா.ஜெயக்குமார், அருள்பெரும் ஜோதி பரமதயாளன் மற்றும் திமுக உறுப்பினர்கள் சந்திரன், ஸ்ரீதர், பாலாஜி, பாபுஜி, தனசேகர், செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.