விடிய விடிய மது குடித்த மாணவி பலி -சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி அஸ்வினி(19), கேளம்பாக்கம் அடுத்த இந்துஸ்தான் கல்லூரியில் பி.சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார், தனியார் ஏகாட்டூரில் விடுதியில் தங்கியிருக்கும் நிலையில் ஊரிலிருந்து திரும்பிய அஸ்வினி தனது தோழியில் அறையில் தங்கி இரவு முழுவதும் (ஓட்கா ஜோனோ) மது குடித்துள்ளார், இதில் வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டார், ஆனால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிய நிலையில் பிரேத்தை கைப்பற்றிய கேளம்பாக்கம் போலீசார் […]
சிட்லபாக்கத்தில் பாதாளசாக்கடை நீர் சாலையில் ஓடுவதால் துர்நாற்றம் பொதுமக்கள் பாதிப்பு
தாம்பரம் மாநகராட்சி சிட்லப்பாக்கம் திரு.விக.நகர் பகுதியில் பாதாளச்சக்கடை அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவு நீர் வழிந்து செல்வதால் திரு.வி.கா நகர், சர்வ மங்களா நகர் உள்ளிட்ட பகுதியில் கடும் துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது. சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வாகனங்களில் சென்றாலும் கழிவு நீர் படுவதால் அசுத்தம் ஏற்படுகிறது என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
மலை உச்சியில் மீனம்பாக்கம் போலீஸ்காரர் தற்கொலை
மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் பணி புரியும் முதல் நிலை காவலர் கார்திகேயன்(35), சங்கர்நகர் பகுதியில் உள்ள அவர் வீடு அருகே உள்ள மலை குன்றின் மீது தூக்கு மாட்டி தற்கொலை, குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை என முதற்கட்ட தகவலின் பேரில் சங்கர்நகர் போலீசார் விசாரணை.
Tambaram March 02 to 08 Issue 44
ஆசிரியர் திட்டியதால் மாணவன் தற்கொலை | உடல் உறுப்பு தானத்திற்கு கடிதம்
சென்னை தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரனை வேல் நகர் பகுதியை சேர்ந்தவர் கலாவதி(47) சேலையூரில் உள்ள மருத்துவமனையில் துப்புரவு பணி செய்து வருகிறார், இவருடைய மகன் யோஸ்வா(14) அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார், இந்த நிலையில் யோஸ்வா பள்ளியில் சக மாணவர்களுடன் அவ்வப்போது தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது, நேற்று வழக்கம் போல் தனது மகன் யோஸ்வா பள்ளிக்கு அனுப்பி வைத்த கலாவதி பணிக்கு சென்றுள்ளார் அப்போது பள்ளியில் மீண்டும் ஜோஸ்வா தகராறில் ஈடுபட்டதாகவும் […]
சிட்லபாக்கத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா
தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளையொட்டி, செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், செம்பாக்கம் – சிட்லபாக்கம் பகுதி கழகம் சார்பில், பகுதி கழக செயலாளர் இரா. மோகன் ஏற்பாட்டில், 34-வது வார்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச. இராசேந்திரன் வழங்கினார். உடன் மாவட்ட எம்.-ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் ஜி.எஸ். புருஷோத்தமன், 34 –வது வார்டு வட்ட செயலாளர் ரவி, அவைத்தலைவர் என். பாஸ்கரன், ஜெ. முரளி (எ) […]
தாம்பரத்தில் ஸ்கூட்டர் மோதி சிறுமி படுகாயம்
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் பெரும்பாலானோர் அதிவேகமாக சென்று வருவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு மேற்கு தாம்பரம், கல்யாணசுந்தரம் தெருவில் சிறுவர்கள் சிலர் சாலையில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.அப்போது வழியாக அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று அங்கிருந்த சிறுமி மீது மோதியது.இதில் படுகாயம் அடைந்த சிறுமியை அங்கிருந்தவர்கள் மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.அங்கு சிறுமியின் இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு […]
முதல்வர் மருந்தகம் துணை மேயர் கோ. காமராஜ் திறந்து வைத்தார்
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 30 வது வார்டு துர்கா நகர் பிரதான சாலையில் தமிழக அரசின் மக்கள்முதல்வர் மருந்தகம் துணை மேயர் கோ காமராஜ் திறந்து வைத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் கூட்டுறவுத் துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் முதல்வர் மருந்தகங்களை காணொளி வாயிலாக திறந்து வைத்தார் அதனைத் தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 30 வது வார்டு துர்கா நகர் பிரதான சாலையில் தமிழக […]
Tambaram Feb 23 to Mar 01 Issue 43
தாம்பரம் அருகே வீடு புகுந்து கொள்ளை | 2 பேர் கைது
சென்னை மேற்கு தாம்பரம் அடுத்த ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (60) இவர் வீட்டின் முதல் மாடியில் தனது மனைவி வேளாங்கனி மற்றும் மூத்த மகன் வினோத்குமார் என்பவருடன் வசித்து வருவதாகவும் கீழ் தளத்தில் இளைய மகன் சதீஷ்குமார் அவரது மனைவி ராதா ஆகியோர் வசித்து வருகின்றனர். சென்ற மாதம் தல பொங்கலுக்கு கீழ் தளத்தில் உள்ள தனது மகன் சொந்த ஊர் சென்றிருந்த நிலையில் சேகர் காலை கீழே உள்ள வீட்டை சுத்தம் செய்துவிட்டு சென்றவர் […]