வண்டலூர் அருகே விரைவு ரயில் மோதி திருநங்கை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது விபத்தில் சிக்கி உயிரிழந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்

சென்னை வண்டலூர் அடுத்த மறைமலைநகர் ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் திருநங்கை ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக தாம்பரம் இருப்புபாதை போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து திருநங்கை உடலை கைபற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை நடத்தினர், விசாரனையில் நாகபட்டினத்தை சேர்ந்த வேல்முருகன் என்கிற அனன்யா (35) என்பதும் இன்று அதிகாலை அவ்வழியாக வந்த ராமேஸ்வரம் விரைவு ரயில் மோதி உயிரிழந்தது தெரியவந்துள்ளது, மேலும் விபத்தில் […]

கேட்பாரற்றுக் கிடந்த 9 பவுன் நகையை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்

சென்னையை அடுத்த தாம்பரம் ரங்கநாதபுரம் காதர்பாய் தெருவை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. ஆட்டோ டிரைவர். இவரது மகள் நஸ்ரின் பானு. நேற்று அதிகாலை முதல் தாம்பரம் பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. சாகுல் அமீது, தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு சவாரி ஏற்ற சென்றபோது மழை பெய்ததால் ஆட்டோவின் உள்ளே மழைநீர் விழாமல் தடுக்க வீட்டில் இருந்த போர்வையை எடுத்து சென்றார்.அவரது மகள் நஸ்ரின் பானு, இரவில் தூங்கும்போது தான் அணிந் திருந்த 9 பவுன் நகையை […]

பஸ் மீது மோதல் :சேலையூர் போக்குவரத்து எஸ்ஐ உயிரிழப்பு

சென்னை புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சிவகுமார் (வயது- 53) இவர் தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட சேலையூர் போக்குவரத்து சிறப்பு உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சிவகுமார் பணி முடிந்து இன்று அதிகாலை தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார்,அப்போது ஆலந்தூர் அருகே ஆசர்கான பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்த தனியார் பேருந்தில் பின்னால் எதிபாரதவிதமாக விதமாக […]

மத்திய அமைச்சராகிறார் அண்ணாமலை!தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அமைச்சராக நியமிக்கப்பட உள்ளார் எனவும், அதற்கான அறிவிப்பு வருகின்ற முதல் வாரத்தில் வெளிவர உள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழகத்தில் பாஜக மாவட்ட தலைவர்கள் புதியதாக அனைத்து மாவட்டங்களுக்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் பதவிக்கு மீண்டும் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்பட பலர் பாஜக தலைமையிடம் கேட்டு உள்ளனர். ஆனால் கோவையை சேர்ந்த ஏ. பி. முருகானந்தத்தை அண்ணாமலை […]

தாம்பரத்தில் சரக்கு ரயில் பெட்டி கவிழ்ந்தது

தாம்பரம் ரெயில்வே பரமரிப்பு பகுதியில் நிறுத்திவைக்கப்பட்ட கார்களை ஏற்றி செல்லும் காலி சரக்கு ரெயில் மித வேகத்தில் சென்னையை நோக்கி இழுத்து செல்லப்பட்டது, மாலை சுமார் 7 மணியளவில் தாம்பரம்- சானடோரியம் இடையே சென்றபோது 8,9 மற்றும் 10 எனும் மூன்று காலி ரெயில் பெட்டிகள் தடம் புரண்டு வலதுபுரம் உள்ள தண்டவாளத்தையும் சேதப்படுத்தி நின்றது. இந்த தகவல் அறிந்த உயர் ரெயில்வே துறை அதிகாரிகள் பார்வையிட்டு வழகமாக செல்லும் விரைவு ரெயில் மற்றும் புறநகர் ரெயில் […]