மாடு பிடிக்கும் தாம்பரம் மாநகராட்சி

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரம் மண்டலம்-2 வார்டு எண்-22,38,43 சக்தி நகர்,மகேஷ்வரி நகர், பாம்மன் சாமி சாலை மற்றும் சர்வ மங்களா நகர் பகுதிகளில் பொதுமக்களுக்கும் , போக்குவரத்திற்கும் இடையூறாக சாலைகள் மற்றும் தெருக்களில் சுற்றித்திரிந்த‌ மாடுகள் மாநகராட்சியின் மாடு பிடிக்கும் வாகனம் மூலம் பிடிக்கப்பட்டு வாலாஜா கோசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

தாம்பரம் காந்தி நகரில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம்

தாம்பரம் மாநகராட்சி 26வது வார்டு காந்தி நகர் பகுதியில் அப்துல் கலாம் நற்பணி மன்றத்தின் செயலாளர் குனசேகரன் தலைமையில் ஏழை மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் ,சீருடை ,பேக் மற்றும் எழுது பொருட்கள் சுமார் 85 மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. மேலும் +2 அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக செங்கல் பட்டு வடக்கு மாவட்ட தி மு க துணை செயலாளரும் குரோம்பேட்டை ராதா நகர் வணிகர்கள் நலச்சங்க துணை தலைவருமான […]

தாம்பரத்தில் வீடு புகுந்து 40 பவுன் கொள்ளை அடித்தவர் கைது.

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் லிங்கம் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (42) ஒரகடத்தில் கண்ணாடி உற்பத்தி செய்யும் தொழில் நடத்தி வருகிறார், இவருடைய மனைவி மகேஸ்வரி கடந்த 22ம் தேதி காலை தனது மகள் சிறப்பு குழந்தை என்பதால் கையெழுத்து பயிற்ச்சி பள்ளிக்கு அழைத்து சென்று விட்டு இரண்டு மணி நேரத்தில் வீடு திரும்பிய போது முன் கதவு உடைக்கபட்டிருந்தை கண்ட அதிர்ச்சியடைந்தார், உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கபட்டிருந்த 40 சவரன் தங்க நகைகள் […]

தாம்பரம் பல்லாவரம் சேலையூர் உள்ளிட்ட பகுதிகளில் திடீர் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி

புறநகர் பகுதியில் சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில் திடீர் மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் நனைந்தபடி சென்றனர்சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியில் கடந்த சில தினங்களாக அதிக வெப்பத்துடன் அனல் காற்று வீசி வந்த நிலையில் இன்று திடீரென சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம் பல்லாவரம் குரோம்பேட்டை சேலையூர் உள்ளிட்ட பகுதிகளில் தூரலுடன் தொடங்கிய மழை திடீரென நல்ல கனமழை கொட்டி தீர்த்தது இதில் திடீர் மழையை பொருட்படுத்தாமல் வாகன […]