தாம்பரம் அருகே இலவச மருத்துவமனை திறப்பு

சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு பெருங்களத்தூர்-பீர்கன்காரணை குடியிருப்போர் நலச்சங்கம், கேளம்பாக்கம் செட்டி நாடு மருத்துவமனை மற்றும் சாய் ஆக்ஸ்ரா டிரெஸ்ட் இணைந்து, அனைத்து வித மருத்துவர்களை கொண்டு மாபெரும் பொது இலவச மருத்துவமனையை ஓய்வு பெற்ற நீதிஅரசர். வள்ளிநாயகம் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். இந்த இலவச மருத்துவமனையில் கண்,நெஞ்சகம்,பொது அறுவை சிகிச்சை,பொது மருத்துவம் மற்றும் குழந்தைகள் மருத்துவம் போன்றவற்றை இன்று முதல் , தினமும் காலை முதல் மாலை […]
Tambaram 14 Jan 2024
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி 56 55 வார்டு பெருங்களத்தூர் கிராமம் 77 ஆம் ஆண்டு ஏர்முனை பொங்கல் விழா

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி 56 55 வார்டு பெருங்களத்தூர் கிராமம் 77 ஆம் ஆண்டு ஏர்முனை பொங்கல் விழா 1000 மேற்பட்டவர்கள் மேற்பட்டவர்களுக்கு பரிசுகள் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ் ஆர் ராஜா அவர்களும் திருவடி காமராஜ் மண்டலகுரழு தலைவர் அவர்களும் பெருங்களத்தூர் எஸ் சேகர் பி எ அவர்களும் பரிசுகளை வழங்கினார்கள்
தாம்பரம் மாநகராட்சி 38 வது வார்டு மேற்கு பகுதியில் திரு வி க நகரில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் .அவர்களின் 107 வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு அவர் உருவப்படத்திற்கு திரு.R. செல்வராஜ் அஸ்தினாபுரம் பகுதி கழக துணை செயலாளர் அவர்கள் தலைமையில் மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி கோவையில் இருந்து தாம்பரத்துக்கு 16, 17 தேதிகளிலும், தாம்பரத்தில் இருந்து கோவைக்கு ஜனவரி 17, 18 தேதிகளிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன!

தாம்பரத்திலிருந்து காலை 7.30 மணிக்கு புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு கோவை சென்றடையும். கோவையில் இருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 5.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
மறைந்த கேப்டன் விஜயகாந்திற்கு நினைவேந்தல் கூட்டம் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில், வரும் 19ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் என தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவிப்பு
முதல் நாளில் ரூ 5.5லட்சம் கோடி இலக்கை எட்டியதுசென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் முதல்நாளில் ரூ 5.5லட்சம் கோடி இலக்கை எட்டியுள்ளது

100க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முன்னணி நிறுவனங்களால் கையெழுத்திடப்பட்டுள்ளதாக தொழில்துறை செயலாளர் அருண் ராய் தகவல்
எல்ஜி-யின் புதிய இரண்டுசக்கர வீட்டு ரோபோட்!

தென்கொரியாவை தலைமையகமாகக் கொண்ட நிறுவனமான எல்ஜி, வரும் சிஇஎஸ் 2024 தொழில்நுட்ப மாநாட்டில் தனது புதிய செய்யறிவு ரோபோவை அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த புதிய ரோபோட் பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு, வீட்டில் உள்ள சின்னச் சின்ன வேலைகளை செய்யும் திறன்கொண்டுள்ளது. வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டிற்குள் உலாவி விளக்குகளை, மின் விசிறிகளை அணைத்தல், செல்லப் பிராணிகளைப் பார்த்துக்கொள்ளுதல் போன்றவற்றை செய்யும் திறன்கொண்டது. மேலும், வீட்டின் நேரடி காணொலிகளை பார்க்க உதவுதல், வீட்டில் ஏதேனும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால் உரிமையாளர்களைத் தொடர்புகொள்ளுதல் போன்றவற்றை சிறப்பாகச் செய்யும் […]
தாம்பரம் ரயில் நிலையம் விமான நிலையம் போல் மாறும் பா.ஜ. க தகவல்

ஆறு மாதத்திற்குள் ரயில் நிலையங்கள் புது ஒளிவு பெறும், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக தலைவர் தகவல் ரயில் நிலையங்களை மேம்படுத்த மத்திய அரசு சார்பில் ரயில் நிலைய மேம்பாட்டு குழு ஒன்றை உருவாக்கி அதில் உறுப்பினர்களை நியமித்து உள்ளது.இதில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக சார்பில் ரயில் நிலைய மேம்பாட்டு குழு உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம் அகரம்தென் பிரதான சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினர்களாக தென்னக ரயில்வே பயணிகள் ஆலோசனை […]