குற்றங்களை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு அவசியம் தாம்பரம் போலீஸ் கமிஷனர்

குற்றங்களை தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் குரோம்பேட்டை காவல் நிலையத்தில் இருந்து சிசிடிவி கேமராக்களை இயக்கி வைத்த பின்னர் தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ் பேட்டியளித்தார். சென்னை அடுத்த குரோம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பொது இடங்களில் நடைபெறும் குற்றங்களை கண்காணிப்பதற்காக தனியார் பங்களிப்புடன் ஜி.எஸ்.டி சாலையில் அமைக்கபட்டுள்ள 75 சிசிடிவி கேமராக்களை குரோம்பேட்டை காவல் நிலையத்திலிருந்து தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ் இயக்கி வைத்தார். பின்னர் பேட்டியளித்த ஆணையர் அமல்ராஜ்:- குற்றங்களை […]

சிக்கன் பிரியாணியால் தகராறு தம்பியுடன் மோதலில் மாணவன் தற்கொலை

வீட்டில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட தம்பியுடன் தகராறு பிளஸ் ஒன் மாணவன் தூக்கு போட்டு தற்கொலை தாம்பரத்தில் சோக சம்பவம் சென்னை அடுத்த தாம்பரம் ரங்கநாதபுரம் ஆறாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாபு குவைத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சந்தியா இவர்களுக்கு தாரிஸ் வயது 16 கோகுல் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். தாரிஸ் தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வந்தார். தீவிர சைவ பிரியரான தாரிஸ் அசைவ உணவுகளை […]

தாம்பரம் அருகே ஒரே இரவில் இரண்டு பேர் விபத்தில் பலி

தாம்பரம் அருகே ஒரே இரவில் நடைபெற்ற இரு வேறு சாலை விபத்துகளில் பணியை முடித்துவிட்டு வீட்டிற்க்கு சென்ற இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த சித்தாலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (35) தனியார் உணவு நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு தாம்பரம் , வேளச்சேரி வழியாக சென்று கொண்டிருந்த போது கேம்ப்ரோடு அருகே பின்னல் கும்பகோணத்தில் இருந்து அதே மார்க்கத்தில் செந்தில்குமார் […]

தாம்பரம் போலீசாருக்கு கல்லீரல் பரிசோதனை முகாம்

உலக கல்லீரல் கொழுப்பு தினத்தை முன்னிட்டு தாம்பரம் மாநகர ஆணையரக காவலர்களுக்கு பைப்ரோ ஸ்கேன் கல்லீரல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜூன் 13 உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு ஜூன் மாதம் முழுக்க உலக கல்லீரல் கொழுப்பு மாதமாக கடைப்பிடிப்பதை தொடர்ந்து தாம்பரம் மாநகர காவல் ஆணையரக காவலர்களுக்கும் அதிகாரிகளுக்கும்இலவச பைப்ரோ ஸ்கேன் கல்லீரல் பரிசோதனை முகாம் இலவசமாக நடைபெற்றது. உலக கல்லீரல் கொழுப்பு மாதமாக ஜூன் […]

தாம்பரம் நகைக்கடை ஆக்ரமித்த நடைபாதை மீட்பு

தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்பு அகற்றம், பிரபல ஜி.ஆர்.டி தங்கமாளிகை நிறுவனம் ஆக்கிரமித்து அமைத்த விளம்பர போர்டுகளை அகற்றியும், நடைப்பாதையை மீட்டது நெடுஞ்சாலை துறை வார விடுமுறை நாட்களானலும், பண்டிகை காலங்களிலும் தாம்பரம் ஜி.எஸ்.டி சாலை நெரிசலில் சிக்கி தவிக்கும், தாம்பரம் பெருங்களத்துரை தாண்டுவியா என மீம்ஸ் பரவும் நிலையில் நெரிசல் ஏற்படும், இந்த நிலையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு ஆட்சியர் முன்னிலையில் நெடுஞ்சாலை துறையினர், காவல் துறையினர், மாநகராட்சியினர் உள்ளிட்ட பல்வேறு துறையினர்கள் […]

தாம்பரம் மாநகராட்சியில் 8 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்கள்

தாம்பரம் மாநகராட்சியில் 8 வயது சிறுவனை நான்கு தெரு நாய்கள் சுற்றி வளைத்து கடித்து குதறியதால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார். தாம்பரம் மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் நாய்கள் தொல்லைகள் அதிகரித்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டும் கண்டு கொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள் என் பிள்ளைக்கு நடந்தது போல் வேறு ஒருவருக்கும் நடக்கக்கூடாது என வேண்டுகோள் விடுத்த பெற்றோர் சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட 39வது வார்டு, திருமலை நகர் 5வது தெருவில் வசிக்கும் […]

பள்ளிகள் திறப்பு: மாணவர்களுக்கு இனிப்பு வழங்கிய தாம்பரம் மேயர்

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண்.32, கடப்பேரி பகுதியில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து இன்று அன்று வந்த மாணவ மாணவியர்கள் மற்றும் புதியதாக அப்பள்ளியில் சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு தாம்பரம் மாநகராட்சி மேயர். திருமதி. வசந்தகுமாரி கமலகண்ணன், B.Tech., அவர்களால் இனிப்பு வழங்கி மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும், மேற்படி பள்ளியின் கழிவறைகள், பள்ளி வகுப்பறைகள், சத்துணவு கூடம் ஆகியவை ஆய்வு மேற்கொண்டார்கள்.