புதிய கமிஷனர் பதவியேற்பு

புதிதாக பொறுப்பேற்ற மாநகராட்சி கமிஷனர் பாலசந்தருக்கு மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி துணை மேயர் கோ. காமராஜ் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
Tambaram 21 July 2024
பொறியியல் தரவரிசையில் தாம்பரம் மாணவி முதலிடம்

என்ஜினீயரிங் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியானது. இந்த தரவரிசை பட்டியலில் ராஜகீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த மாணவி தோசிதா லட்சுமி முதலிடம் பெற்றார். அவரது தந்தை நாகராஜன், சாப்ட்வேர் என்ஜினீயர், தாயார் ராதிகா, தோசிதா லட்சுமி, கிழக்கு தாம்பரத்தில் உள்ள சங்கர வித்யாலயா பள்ளியில் பிளஸ்-2 முடித்தார். அவர் பிரென்ச்- 100, ஆங்கிலம் – 98, கணிதம் – 100, இயற்பியல் -100, வேதியியல் 100, கணினி அறிவியல் 100 என 600-க்கு 598 மதிப்பெண் பெற்று இருந்தார். […]
தாம்பரம் ஜிஎஸ்டி சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு

தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் பெருங்களத்தூர் வடக்கு பகுதி செயலாளர் 4வது மண்டல குழு தலைவர் டி.காமராஜ், காவல் துறை, நெடுஞ்சாலை துறை, வருவாய் துறை, தாம்பரம் மாநகராட்சி ஆகிய துறைகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
நயினார் நாகேந்திரன் ஆஜர்

நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில், தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் ஆஜர்
தாம்பரம் மாநகராட்சி புதிய ஆணையாளர் திரு.S.பாலச்சந்தர் இ.ஆ.ப., அவர்கள்
Tambaram 14 July -2024
முடிச்சூர் ஹார்டுவேர் கடையில் தீ விபத்து

தாம்பரம் அடுத்த முடிச்சூர் பிரதான சாலையில் உள்ள ஏ.ஆர்.கோகுல் ஹார்டுவேர் கடையின் முதல் தளத்தில் தீவிபத்து. தவல் அறிந்த தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உரிமையாளர் ராமசந்திரனிடம் பீர்க்கன்கரணை போலீசார் விசாரணை. பல லட்சம் மதிப்புள்ள் பெயிண்ட், கெமிக்கல், பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சாம்பலானது. மின்சார கசிவே தீவிபத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது.
தாம்பரம் புதிய போலீஸ் கமிஷனர் பதவியேற்பு

தாம்பரம் மாநகராட்சி போலீஸ் கமிஷனர் ஆக அமல்ராஜ் இருந்து வந்தார் அவர் திடீரென மாற்றப்பட்டார் அவருக்கு பதில் அபின் தினேஷ் மோதக் நியமிக்கப்பட்டார் அவர் இன்று முறைப்படி பதவி ஏற்றார் .அவருக்கு போலீஸ் அதிகாரிகள் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் ரவுடிகள் பட்டியல் கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது. அதைப் போல தாம்பரம் மாநகர பகுதிகளிலும் ரௌடிகளை கட்டுப்படுத்த புதிய போலீஸ் கமிஷனர் ஆலோசனைகளை மேற்கொண்டார்.
தாம்பரத்தில் பஸ் மோதி பூ விற்கும் மூதாட்டி பலி

தாம்பரம் சானடோரியம் அருகே ஜி.எஸ்.டி சாலையை கடக்க முயன்ற பூ வியாபாரம் செய்து வந்த மூதாட்டி மீது அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சென்னை குரோம்பேட்டை அடுத்த கக்கன் சாவடி பகுதியை சேர்ந்தவர் இசக்கியம்மாள் (80) அதே பகுதியில் பூ வியாபரம் செய்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் தாம்பரம் மார்கெட் பகுதியில் பூ வாங்குவதற்காக காசநோய் மருத்துவமனை அருகே சாலையை கடந்த போது அவ்வழியாக தாம்பரம் பணிமனையில் இருந்து வந்த தாம்பரம்-செங்கல்பட்டு […]