ஆம்ஸ்ட்ராங் கொலை தாம்பரத்தில் பிடிபட்ட ரவுடி

ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் தேடப்படும் சீசிங் ராஜாவின் கூட்டாளி சஜித் தை தாம்பரம் போலீசார் பிடித்து விசாரணை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டுவரும் பிரபல ரவுடி சீசிங் ராஜாவை போலீசார் தேடிவரும் நிலையில் தாம்பரம் காவல் நிலைய கொலை வழக்கு, கொலை முயற்சி, அடிதடி, வழிபறி என பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய தேடப்படும் குற்றவாளர் சஜித் என்பவனை பிடித்த தாம்பரம் போலீசார் விசாரணை செய்துவருகிறார்கள்.

சில்லறை பிரச்சனை : பயணியை அடிக்க பாய்ந்த கண்டக்டர்

தாம்பரம் அருகே மாநகரப் பேருந்தில் டிக்கெட் எடுக்க 200 ரூபாய் கொடுத்த போது சில்லறை இல்லை எனக்கூறி இளைஞரை ஆபாசமாக பேசிய மாநகர போக்குவரத்துகழக நடத்துனர் இணையத்தில் வைரலாகும் வீடியோ நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஊரப்பாக்கத்தில் தங்கி சென்னையில் உள்ள மென் பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இன்று காலை நெல்லையில் இருந்து ரயிலில் தாம்பரம் வந்த அந்த இளைஞர் தான் தங்கி இருக்கும் அறைக்கு செல்வதற்காக தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு […]

மேற்கு தாம்பரத்தில் நாய் தொல்லை பெண்ணுக்கு ஐம்பதாயிரம் அபராதம்

மேற்கு தாம்பரம் திருவேங்கடம் நகரில் திவ்யா எனும் பெண் தனது ஜெர்மன் ஷெப்பர்ட் வகை வளர்ப்பு நாயை கட்டுபாடு இன்றி சாலையில் திரிய விட்டதாக எழுந்த புகாரின் பேரில் தாம்பரம் மாநகராட்சி கால்நடை மருத்துவர் சக்திதேவி, சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோர் நேரில் விசாரணை, நாயின் உரிமையாளர் திவ்யாவிற்கு 50 ஆயிரம் அபராதம் செலுத்த உத்திரவு நாய் யாரையும் கடிக்க வில்லை வீட்டின் அருகே உள்ளவர்களுடன் பிரச்சனை உள்ளதால் நாய் மீது புகார் எழுப்பியுள்ளனர் என திவ்யா […]

தமிழக ஒலிம்பிக் வீரர்களை உற்சாகப்படுத்த தாம்பரத்தில் மினி மாரத்தான்

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் வீராங்கனைகளை உற்சாகப்படுத்தும் நோக்கில், ஸ்போர்ட்ஸ் கிளப் ஆஃப் தாம்பரம் சார்பில் சென்னை மேற்கு தாம்பரத்தில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. 2024 ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த பிரவீன் சித்ரவேல், ஜெஸ்வின் ஆல்ட்ரின், சந்தோஷ், ராஜேஸ் ரமேஷ், வித்யா ராமராஜ், சுபா வெங்கடேஷ், நேத்ரா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதேபோல் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக, மாரியப்பன், துளசிமதி, […]

போலீசாரை பாராட்டிய பொதுமக்கள்

தாம்பரத்தில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருவதால் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது இதனால் சாலைகளில் பள்ளங்கள் பல இடங்களில் ஏற்பட்டுள்ளன. தாம்பரம் போலீசார் தார் கலவை கொண்டு பள்ளங்களை நிரப்பினார்கள். இதனை பொதுமக்கள் பாராட்டினார்கள்.