Tambaram 29 Sep 2024
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாமினை பெருங்களத்தூரில் துணை மேயர் காமராஜ் தொடங்கி வைத்தார்

இதில் மண்டல குழு தலைவர் டி காமராஜ் மாமன்ற உறுப்பினர்கள்,நகர் நல அலுவலர் அருள் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்
தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் திரு.சீ.பாலச்சந்தர், இஆப,

அவர்கள் தலைமையில் வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து சேவைத்துறை அலுவலர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது.
தாம்பரத்தில் இருந்து மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு 10 வழித்தடங்களுக்கு மாநகர பேரூந்துகளை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கொடியசைத்து துவக்கிவைத்தார்

தாம்பரம் பேரூந்து நிலையத்தில் இருந்து மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட 10 புதிய வழித்தடத்தில் மாநகர பேரூந்துகளை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கொடியசைத்து துவக்கிவைத்தார், பின்னர் பொதுமக்களுடன் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா,தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, மண்டலகுழு தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன் ஆகியோர் சிறிது தூரம் பயணம் மேற்கொண்டனர்.
தாம்பரத்தில் திமுகவினருக்கு தங்கம், வெள்ளி நாணயம் பரிசு

மறைந்த முன்னாள் நகர துணை செயலாளர் 4ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கலந்துக்கொண்டு நலத்திட்ட உதவிகள், தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய திமுகவினர் 30 பேரில் 9 தங்கம், 21 வெள்ளி நாணயங்களை வழங்கினார். மறைந்த முன்னாள் நகர துணை செயலாளர் திருமதி.சுப்புலட்சுமி சர்தார் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, அவரது மகனும் மாநகர துணை அமைப்பாளர் ச.ராஜேஷ் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்சி நடைபெற்று, சிறப்பு அழைப்பாளராக […]
Tambaram 22 Sep 2024
Tambaram 15 Sep 2024
தாம்பரத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்

தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து செம்பாக்கம் பேரூந்து நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் ச.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். சிட்லபாக்கம்-, செம்பாக்கம் பகுதி செயலாளர் மோகன், முன்னாள் அமைச்சர் டி.கே.எம் சின்னையா, முன்னாள் எம்.எல்.ஏ ப.தன்சிங், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் சேலையூர்.ஜி.சங்கர், சாந்தி புருஷோதமன், மாடம்பாக்கம் தேவேந்திரன், உள்ளிட்ட 1000க்கும் மேற்படட் அதிமுக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.