வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாம்பரம் மற்றும் முடிச்சூர் பகுதி மக்களுக்கு

நாடு திரைப்படத்தின் இயக்குனர் சரவணன் மற்றும் நாயகன் தர்ஷன் ஆகியோர் நேரில் சென்று உணவு மற்றும் அடிப்படை தேவையான பொருட்கள் வழங்கினர்

தாம்பரம் மாநகர மக்களுக்கு ஒர் அறிவிப்பு

கனமழை காரணமாக நம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தாம்பரம் மாநகராட்சி எல்லைகுட்பட்ட பகுதியில் மழையினால் ஏதாவது பாதிப்பு இருந்தால் தாம்பரம் மாநகராட்சி Toll free no Tambaram corporation 18004251600 – Pallavaram 18004254355 – Tambaram மற்றும் மாநகராட்சி தொலைபேசிக்கு What’s app மூலம் 8438353355 தெரியப்படுத்த வேண்டுகிறேன். இப்படிக்கு : வசந்தகுமாரி கமலகண்ணன் மேயர் தாம்பரம் மாநகராட்சி (9150045632/7305541470)

தளபதி விஜய் நூலகம் தாம்பரத்தில் திறப்பு

தாம்பரம், பல்லாவரத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தளபதி விஜய் நூலகம் திட்டத்தினை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் துவங்கி வைத்தார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ‘விஜய் விலையில்லா மருந்தகம்’, ‘விஜய் விழியகம்’, ‘விஜய் பயிலரங்கம்’ உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் புத்தக வாசிப்பு திறன் மற்றும் பொது அறிவு சிந்தனை வளர்க்கும் நோக்கில் ‘தளபதி விஜய் நூலகம்’ திட்டத்தினை இன்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் […]

நீட் விலக்கு கோரி தாம்பரத்தில் கையெழுத்து இயக்கம்

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி கிழக்கு தாம்பரத்தில் கையெழுத்து இயக்கம்,காஞ்சி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி மாணவரணி மருத்துவர் அணி சார்பில் தாம்பரம் மாநகராட்சி மேயர் வந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் இந்த நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகர கழக துணைச் செயலாளர் பொன் சதாசிவம், அமைப்புசாரா ஓட்டுனர் அணியின் மாவட்ட அமைப்பாளர் தாம்பரம் நாராயணன், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் இன்ஜினியர் ராமமூர்த்தி, மாவட்ட சிறுபான்மை அணி துணை தலைவர் ஷாஜகான், மாவட்ட மகளிர் தொண்டரணி துணை […]

மது போதையில் மகன் தாக்கியதால் தந்தை பலி

தாம்பரம் அடுத்த பதுவஞ்சேரி, பஞ்சாயத்து காலனியை சேர்ந்தவர் மணி, (55) இவரது இளைய மகன் சந்துரு( 19) குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் 18ம் தேதி இரவு, மது அருந்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதைபார்த்த மணியின் மூத்த மகன் கார்த்திக், 32, என்பவர் தம்பியை தட்டி கேட்டுள்ளார். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதைபார்த்த தந்தை மணியும், இளைய மகன் குடித்துவிட்டு வந்ததை தட்டிகேட்டுள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த சந்துரு, தந்தையை தாக்கி கீழே தள்ளிவிட்டுள்ளார் அதில், அவருக்கு தலையில் […]

மணிமங்கலம் அருகே ஏரியில் பெயிண்டர் பிணம் கொலையா? போலீஸ் விசாரணை

தாம்பரம் அடுத்த மணிமங்கலம் பகுதியில் உள்ள பெரிய ஏரியிலிருந்து கரசங்கால் பகுதி வழியாக அடையாறு ஆற்றுக்கு செல்லும் உபரிநீர் கால்வாயில் காயங்களுடன் ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதியினர் 108 ஆம்புலன்ஸ்க்கும்,மணிமங்கலம் போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் பேரில் நிகழ்வு இடத்திற்கு வந்த போலீசார் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உதவியோடு கால்வாயில் கிடந்த நபரை பரிசோதனை செய்தனர். இதில் தலை, மற்றும் உடலில் ரத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. பின்னர் சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை […]