மக்களவையில் கரூர் எம்.பி. ஜோதிமணி உள்பட 5 காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி அமளியில் ஈடுபட்டதாக காங்கிரஸ் எம்.பி.க்கள் டி.என்.பிரதாபன், டீன் குரியகோஸ், எஸ்.ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ் மற்றும் ஹைபி ஈடன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்!

ஊராட்சி நிதியில் கையாடல் செய்ததாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்

₹94லட்சம் கையாடல் செய்ததாக கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரிந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுந்தரம், மாலாவை சஸ்பெண்ட் செய்து ஆட்சியர் பழனி நடவடிக்கை எடுத்துள்ளனர். கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 5 ஊராட்சிகளில் ப2018 முதல் நிதி கையாடல் செய்ததாக புகார் கூறப்பட்டது.

அட்டைப் பெட்டியில் குழந்தை சடலம் – சஸ்பெண்ட்

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தையின் உடலை அட்டைப் பெட்டியில் வைத்து வழங்கிய விவகாரம் குழந்தையின் உடலை சரியாக மூடாமல் வழங்கிய பிணவறை ஊழியர் பன்னீர்செல்வம் சஸ்பெண்ட் சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு விசாரணை குழு அமைப்பு

தெலங்கானா டிஜிபி சஸ்பெண்ட்

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கூறி தெலங்கானா டிஜிபி அஞ்சனி குமாரை சஸ்பெண்ட் செய்தது தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்த போது, ​​தெலங்கானா காங். தலைவர் ரேவந்த் ரெட்டியை சந்தித்ததால் நடவடிக்கை டிஜிபியுடன் ரேவந்த் ரெட்டியை சந்திக்க சென்ற மேலும் 2 ஐபிஎஸ் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ள தேர்தல் ஆணையம்

அரசு தலையீடு: இலங்கை அணியை சஸ்பெண்ட் செய்த ஐசிசி

அரசு தலையீடு காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியை சஸ்பெண்ட் செய்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. ஐசிசி, இலங்கைஐசிசி, இலங்கைபுதிய தலைமுறை அரசு தலையீடு காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியை சஸ்பெண்ட் செய்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’தற்போது நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி பெரும்பாலான போட்டிகளில் படுதோல்வி அடைந்து வருகிறது. இதனையடுத்து இலங்கை அரசு இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்து அறிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் […]

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: மூத்த அதிகாரி சஸ்பெண்ட்

தெலங்கானா, ஐதராபாத் அருகே உள்ள ஹக்கிம்பேட் நகரில் உள்ள மாநில விளையாட்டு பள்ளியில் மூத்த அதிகாரி ஒருவர், மாணவிகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், அந்த அதிகாரியை பணியிடை நீக்கம் செய்வதாக அம்மாநில விளையாட்டுதுறை அமைச்சர் அறிவித்தார். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

லஞ்சம் வாங்கிய தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர்

லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் மீனாட்சி சுந்தரம், தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள உணவக உரிமையாளர் மாரிசாமியிடம் லஞ்சம் பெற்றதாக ஊடகத்தில் வெளியான செய்தியின் அடிப்படையில், தேனி மாவட்ட இணை இயக்குனர் […]

செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மகிதா,அரசு மருத்துவரை மிரட்டி ₨.12 லட்சம் லஞ்சம் பெற்றதாக சஸ்பெண்ட்

ஒரே மாதத்தில் 2 பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் கூடுவாஞ்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பீர்க்கன்கரணை, மணிமங்கலம், சோமங்கலம், ஓட்டேரி, கூடுவாஞ்சேரி மற்றும் மறைமலைநகர் ஆகிய காவல் நிலையங்களை உள்ளடக்கி கூடுவாஞ்சேரியில் அனைத்து மகளிர் காவல் நிலையம் இயங்கி வருகிறது. கூடுவாஞ்சேரியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஏற்கனவே இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த விஜயலட்சுமி உட்பட 4 பெண் போலீசார், கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி இரவு […]