சுரேஷ் கோபி தனது முகநூல் பக்கத்தில், “நான் அமைச்சரவையில் இருந்து விலகவுள்ளதாக தவறான செய்தி பரவி வருகின்றது. இது முற்றிலும் தவறானது..

மோடியின் தலைமையின்கீழ் கேரளத்தின் வளர்ச்சிக்காக பணியாற்ற உறுதியாக இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்..

பிரபல மலையாள நடிகரும், பாஜக முன்னாள் ராஜ்யசபா உறுப்பினருமான சுரேஷ் கோபி கடந்த அக்டோபர் 27ம் தேதி கோழிக்கோட்டில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்

அப்போது கேள்வி கேட்ட ஒரு மலையாள தனியார் தொலைக்காட்சி பெண் நிருபரின் தோளில் அவர் கை வைத்து பேசினார். இது குறித்து அந்தப் பெண் நிருபர் கோழிக்கோடு நடக்காவு போலீசில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து முன் ஜாமீன் கோரி சுரேஷ் கோபி கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் நேற்று இந்த மனு மீது விசாரணை நடந்தது. அப்போது சுரேஷ் கோபியை கைது செய்யும் திட்டம் இல்லை என்று கேரள அரசு சார்பில் […]