தமிழ்நாட்டில் வெப்பநிலை உயர வாய்ப்பு

கிழக்கு திசை காற்று தடைபட்டு தற்போது வறண்ட மேற்கு திசை காற்று வீசுகிறது மேலும் கடல் காற்று உள் நுழைவதும் தடை பட்டதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்திருக்கிறது.இன்று முதல் தமிழ்நாட்டின் வெப்பநிலை இயல்பை விட 4°©️ வரை உயரும் என கணிக்கப்படுகிறது. குறிப்பாக சென்னை முதல் குமரி வரை உள்ள அனைத்து கடலோர மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரிக்கும். அடுத்த 5 நாட்களுக்கு சென்னை மதுரை திருச்சி நெல்லை விருதுநகர் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் […]

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்1 விண்கலம் அனுப்பிய புதிய புகைப்படம் வெளியீடு

கடந்த மே மாதம் ஏற்பட்ட சூரியப் புயலின் போது விண்கலம் எடுத்த புகைப்படம் – இஸ்ரோ. சூரியனில் ஏற்படும் காந்த விசை புயலுக்கு எக்ஸ் மற்றும் எம் வகை சூரிய கதிர்கள் தான் காரணம். சூரியனின் மேற்புற வளிமண்டல அடுக்கில் இருந்து வெளியாகும் அயனியாக்கப்பட்ட துகள்களுடன் எக்ஸ், எம் வகை சூரிய கதிர்களுக்கு தொடர்பு.

இன்று முதல் வரும் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் 110டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்பு!!!

வெயில் அதிகரிக்கும் போது ஆக்சிஜன் லெவல் மிகக் குறைவாக இருக்கும் எனவே மே மாதம் முடியும் வரை மதியம் ஒரு மணி முதல் மாலை 5 மணி வரைபெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும். நோயாளிகள் கர்ப்பிணிகள் சற்று எச்சரிக்கையுடன் இருங்கள். ஐஸ் கட்டிகள், ஐஸ் வாட்டர், கார்பனேட் குளிர்பானங்கள் கண்டிப்பாக தவிர்க்கவும். பழச்சாறு அருந்தலாம் அதுவும் ஐஸ் போடாமல், மற்றும் இளநீர்… இது எல்லாவற்றையும் விட மிகச் சிறந்தது மோர். பாட்டிலில் எடுத்து […]

“அக்னி நட்சத்திரம்’ என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும். தமிழ் பஞ்சாங்கம் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திரம் கணக்கிடப்பட்டு வருகிறது

அந்த வகையில் நடப்பாண்டு கத்தரி வெயில் நாளை மறுதினம் தொடங்குகிறது.இந்த கத்தரி வெயில் வருகிற 28-ந்தேதி வரை அதாவது, 25 நாட்கள் தொடர்ந்து வாட்டி வதைக்க காத்திருக்கிறது. பொதுவாக கத்தரி வெயில் காலத்தில்தான் வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும். ஆனால் கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்தே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதிலும் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக சேலம், ஈரோடு, கரூர், தர்மபுரி, திருத்தணி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய […]

இன்னும் பத்து வருடத்தில் வெயில் இப்போ உள்ள அளவை விட ஒரு மடங்கு அதிகரிக்கும் அப்போ நம்மால் தாங்க இயலாது.

குழந்தைகள் காப்பாற்றுவதற்கு சிரமம். இந்த வருடமே ஒவ்வொரு ஊரிலும் வெயிலால் கோடை கொப்பலம் வந்துள்ளது என மருத்துவ ஆய்வுகள் சொல்கிறது. நம்ம வீட்டை சுற்றி இடமிருப்பின் முடிந்த அளவிற்கு மரங்களை நடுங்கள். மரம் நடுவோம் இயற்கையை காப்போம். வரும் ஆவணி மாதம் மழை காலம் துவங்கும். அப்போது தமிழகத்தில் 10 கோடி மர கன்றுகள் நட இப்போதே திட்டமிடுவோம் மர கன்றுகள் உற்பத்தியாளர்கள்,வன துறை,பள்ளி தாளாளர்கள்,உயர் பதவிகளில் இருப்போர்,பிரபலங்கள்,ஆன்மீக தலைவர்கள்,அனைத்து மதங்களின் குருமார்கள்,கிராம தலைவர்கள்,ஊர் தலைவர்கள்,அனைத்து கட்சி […]

சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெரும் வீடுகள்: 300 யூனிட் இலவச மின்சாரம்!

சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெரும் வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. மேலும், இந்தியாவில் கிராண்ட் மாஸ்டர்கள் எண்ணிக்கை 80 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 3-வது முறையாக அதிகரிப்பு..!!

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 3-வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.பெங்களூரு, கடந்த 2-ம் தேதி 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் தீப்பிழம்பை கக்கியப்படி, 1,480 கிலோ எடை கொண்ட ‘ஆதித்யா எல்-1’ விண்கலத்தை சுமந்து கொண்டு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. பூமியில் இருந்து புறப்பட்ட 1 மணி நேரம் 3 நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்து ‘ஆதித்யா எல்1’ விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து சென்றது. பின்னர் புவிவட்டப்பாதையில் தனது பயணத்தை விண்கலம் […]