ராகிங் கொடுமையால் மாணவர் தற்கொலை

மேற்கு வங்கத்தில் ராகிங் கொடுமையால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜாதவ்பூர் பல்கலையில் படித்த முதலாம் ஆண்டு மாணவர் ஸ்வப்னோதீப் குண்டு (18), ராகிங் டார்ச்சரால் விடுதியின் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். காவல்துறை விசாரணையில், சில மாணவர்கள் மொட்டை மாடியில் நிர்வாணமாக ஓட கட்டாயப்படுத்தியது தெரியவந்தது.
உயிரை மாய்த்துக்கொள்ளும் சிந்தனை வேண்டாம்: மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

உயிரை மாய்த்துக்கொள்ளும் சிந்தனை வேண்டாம் என மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாணவன் ஜெகதீஸ்வரன், அவரது தந்தை செல்வசேகர் ஆகியோரின் மரணம் நீட் பலிபீடத்தின் இறுதிமரணமாக இருக்கட்டும் என்று கூறியுள்ளார். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். ஜெகதீஸ்வரன் போன்று எத்தனை உயிர்கள் பலியானாலும் ஆளுநர் ரவி போன்றவர்களின் இதயம் கரையப்போவதில்லை எனவும் கூறியுள்ளார்.
நீட் தேர்வில் அடுத்தடுத்து தோல்வி; உயிரை மாய்த்துக் கொண்ட மாணவர்-விரக்தியில் தந்தையும் விபரீத முடிவு

சென்னை சேர்ந்த 19 வயது மாணவர் நீட் தேர்வில் 2 முறை ஏற்பட்ட தோல்வியை தாங்க முடியாமல் தனது உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மருத்துவ படிப்பு படிக்கவேண்டும் என்றால் நீட் தேர்வை கட்டாயம் எழுதி தேர்ச்சிப் பெற வேண்டும். நீட் தேர்வு என்பது தேசிய தேர்வு முகமை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தபட்டு வருகின்றது. தமிழகத்தை பொறுத்தவரை பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் தொடங்கி பாமர மக்கள் வரை […]
செல்போனில் தகவல் தெரிவித்துவிட்டு வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

சென்னை வியாசர்பாடி ராஜீவ் காந்தி நகர் 19வது மேற்கு குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (30). இவர் கிரேன் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ஜெனிபர் (25). இவர்களுக்கு கடந்த 7 மாதத்துக்கு முன் திருமணம் நடைபெற்றது. இதன்பிறகு கொஞ்ச நாட்களிலேயே தம்பதி இடையே பிரச்னைகள் ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் ஜெனிபர் அடிக்கடி தனி குடித்தனம் போகலாம் என்று அழைத்துள்ளார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஜெனிபர், கணவர் ஆரோக்கியராஜ் உடன் தகராறு செய்துவிட்டு […]
நீட் தேர்வில் இரண்டு முறை தோல்வி குரோம்பேட்டையை சேர்ந்த மாணவர் தற்கொலை செய்து கொண்ட சோகம் மறைவதற்குள் அவரது தந்தையும் தூக்குப் போட்டு தற்கொலை……

குரோம்பேட்டையை சேர்ந்த ஜெகதீஸ்வரன்,19 என்ற மாணவர், நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இதற்காக தனியார் நீட் கோச்சிங் சென்டருக்கும் அவர் சென்று படித்துள்ளார். நடப்பாண்டு நீட் தேர்வு எழுதியும் அவர் தோல்வி அடைந்தார். தொடர்ந்து இரண்டு முறை நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தன்னால் இனி மருத்துவரே ஆக முடியாது என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் விரக்தியில் இருந்த மாணவன் ஜெகதீஸ்வரன், சனிக்கிழமையன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேர்வில் தொடர் […]
வங்கி ஊழியர் கடன் தொல்லையால் தற்கொலை

சேலம் ஓமலூர் பகுதியை சேர்ந்த காளிதாஸ் என்பவர், பொதுத்துறை வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் குடும்ப தேவைக்காக சிலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. பணத்தை திருப்பி கொடுக்க முடியாததால், கடன் கொடுத்தவர்கள் வங்கிக்கு வந்து கேட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ரூ 17 லட்சம் கடன் மனைவி குழந்தையை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற வாலிபர்

தாழம்பூரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 32-வயதான அரவிந்த் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அரவிந்த்க்கு சுமார் 17 லட்சம் கடன் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் கடன் கொடுத்தவர்கள் அதிகளவு நெருக்கடி கொடுத்தால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து 7-வயது மகள் ஐஸ்வர்யாவுக்கு (Okacet.L) என்ற மாத்திரையை கொடுத்த பிறகு அவரது மனைவி 32-வயதான சுஜிதாவிற்கும் அதே மாத்திரை கொடுத்த பிறகு அவரது வலது கை மணிக்கட்டு நரம்பை துண்டித்துள்ளார். பின்னர் அரவிந்த் […]
மது போதையில் மாடியிலிருந்து குதித்த வாலிபர் மின்கம்பியில் சிக்கி பலி

தாம்பரம் மாந்தோப்பு பகுதியை சேர்ந்த இளைஞர் டேனியல்(23) வீட்டில் குடும்ப சண்டை காரணமாக பழைய பெருங்களத்தூர் காமராஜர் சாலையில் உள்ள நண்பன் மணிகண்டன் வீட்டிற்கு சென்றார். அங்கு முதல் மாடியில் இருந்த அவர்கள் மது அருந்தியுள்ளனர். இந்த நிலையில் டேனியல் தற்கொலை என்னத்துடன் முதல் மாடியில் இருந்து குதித்துள்ளார். அங்கு சென்ற உயர் மின் அழுத்த கம்பிகள் இடையே சிக்கி உயிருக்கு போராடினார். இது குறித்து தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்த நிலையில் மின்சார துறையினர் […]
ஒரு கோடி கடன் சிட்லபாக்கம் தம்பதி தற்கொலை

தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் கல்யாண சுந்தரம் தெருவை சேர்ந்தவர் பொன்னுதாஸ் (48) திருமுடிவாக்கத்தில் ஏ.கே ஆட்டோ மொபலைஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். இவருடைய மனைவி ஜொன்சிராணி குன்றத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு கல்லூரி படிக்கும் ஒரு மகன் மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளனர். இந்நிலையில் ஆட்டோ மொபல் நிறுவனம் நடத்துவதற்காக வங்கி மற்றும் தனக்கு தெரிந்த பல நபர்களிடம் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை […]
ஷாக்கிங் நியூஸ்! திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை!

காரணம் என்ன? நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம், 13வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் தேவிபிரியா. இவரின் கணவர் அருள்லால். இவர்களுக்கு மோனிகா ஸ்ரீ(18) என்ற மகள் உள்ளார். நாமக்கல் ராசிபுரம் 13வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் குடும்படுத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், திமுக பெண் கவுன்சிலர் தேவிபிரியாவின் வீடு நீண்ட நேரமாகியும் திறக்கப்படாமல் இருந்தது. இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது […]