இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளுக்கான 7.5% உள் இட ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு இன்று கலந்தாய்வு

சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரி வளாகத்தில் நேரடியாக கலந்தாய்வு நடைபெறவுள்ளது. நாளை பொதுப்பிரிவினருக்கான முதல் சுற்று கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
திரிசூலம் ஊராட்சி ஓன்றி நடுநிலைப்பள்ளியில் ஏகஜோதி தொண்டு அறக்கட்டளையினர் சார்பில் 75 மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கினார்

சென்னை அடுத்த திரிசூலம் புனித தோமையார்மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஏகஜோதி தொண்டு அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு P. S. வெங்கடேசன் அன்பளிப்பில் சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சங்கரா பால வித்யாலயா பள்ளியின் கல்வியாளர் செம்பாக்கம் வேதாசுப்பிரமணி கலந்து கொண்டு மாணவர்களின் கல்வி தரம் குறித்து சிறப்புரையாற்றினார். இதனை தொடர்ந்து மாணவ, மாணவிகள் 75 பேருக்கு சீருடைகள் வழங்கப்பட்டன. முன்னதாக மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக டாக்டர் […]
சேலையூரில் கட்டிடம் இடிந்து மழைக்கு ஒதுங்கிய2 மாணவர் பலி

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத், தென்னேரி பகுதியை சேர்ந்தவர் பிரென்ச் ஜெஃப்ரி தவமணி (23), மீனம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் திமோ மில்கி (19), பூந்தமல்லி பகுதியை சேர்ந்தவர் அஸ்வின் (19), சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்தவர் சாய் கௌசிகன் (19) இவர்கள் நான்கு பேரும் தாம்பரத்தில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்துவ கல்லூரியில் பிஎஸ்சி 3ம் ஆண்டு படித்து வந்தனர். இந்நிலையில் இன்று மாலை கல்லூரி முடிந்து மூன்று இருசக்கர வாகனத்தில் மேற்கண்ட நான்கு பேர் உட்பட ஆறு பேர் சேலையூர் […]
சினிமா படத்திற்காக சேலையூர் அருகே 1000 மாணவர்கள் உலக சாதனை

சேலையூர் அடுத்த மப்பேட்டில் உள்ள தனியார் பள்ளியிலமாணவர்களிடம் தன்நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இயக்குனர் டாக்டர் சீனி சவுந்தரராஜன் அவருடைய தயாரிப்பில் புதிய படத்தை இயக்கி உள்ளார். அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியீட்டு விழா நடைப்பெற்றது. இதனை முன்னிட்டு கபில் ரிட்டர்ன்ஸ் என்ற திரைப்படத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் 1000 ஆயிரம் மாணவர்கள் கபில் ரிட்டர்ன்ஸ் வடிவில் நின்று உலகசாதனை படைத்தனர். இதனை ஐன்ஸ்டின் உலகசாதனை நிறுவனம் அங்கிகரித்து படத்தின் இயக்குனர் சீனி சவுந்தரராஜனுக்கு, […]
கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அட்டவணை வெளியீடு

சென்னையில் வரும் 16 – 18ம் தேதி வரை சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நேரடி முறையில் நடைபெறும் என அறிவிப்பு
சேலையூர் பள்ளி தலைமை ஆசிரியருக்கு சீர்வரிசை கொடுத்து மாணவர்கள் பிரியாவிடை

சேலையூரில் தாம்பரம் மாநகராட்சி அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. 34 ஆண்டுகளாக செயல்படும் இந்த பள்ளியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக தலைமை ஆசிரியராக எம்.ஆனந்தபாபு என்பவர் பொறுப்பேற்றார். சேலையூர் ஊர் பிரமுகர்கள், பெற்றோர் ஆசிரியர்கழகத்துடன் இணைந்து பள்ளியின் தரம் உயரவும், மாணவர்களின் கற்றல் திறன் மேம்படவும் பாடுப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரின் அரசுப் பள்ளி ஆசிரியராக துவங்கி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். இந்த தகவல் அறிந்து பெற்றோர் […]
குரோம்பேட்டையில் எம்.ஐ.டி. கல்லூரி வளாகத்தில் 1000 பேர் அமரக்கூடிய வகையில் மிகப்பெரிய அரங்கம் அமைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: குரோம்பேட்டையில் எம்.ஐ.டி. வளாகத்தில் 1000 பேர் அமரும் வகையில் ஏ.சி வசதியுடன் மிகப்பெரிய அரங்கம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை குரோம்பேட்டையில் மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லூரி பவள விழாவை தொடங்கி வைத்து முதலமைச்சர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், எம்.ஐ.டி. கல்வி நிறுவனத்தால் தமிழ்நாட்டுக்கே பெருமை: இந்தியாவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களின் பட்டியலில் தமிழ்நாட்டு பல கல்வி நிறுவனங்கள் உள்ளன. தமிழ்நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் எம்.ஐ.டி. இடம்பெற்றுள்ளது. மாணவர்களின் வழிகாட்டியும் […]
எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசை பட்டியல்; மாணவர்கள் அசத்தல்

தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் நேற்று வெளியிட்டார். இதில் சேலம் மாணவி கிருத்திகா, விழுப்புரம் மாணவர் பிரபஞ்சன் ஆகியோர் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளனர். சென்னை மாணவர் சூர்ய சித்தார்த் 2வது இடமும் சேலம் மாணவர் வருண் 3வது இடமும் பிடித்துள்ளனர்.
சாய்ராம் கல்வி குழும நிறுவனர் லியோமுத்து நினைவு நாளில் ரூ 8 கோடிக்கு உதவி

ஸ்ரீ சாய்ராம் கல்விக்குழும நிறுவனர் மறைந்த லியோ முத்துவின் 8 ம் ஆண்டு நினைவு நாளையொட்டி சாய்ராம் கல்லூரியில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஆதரவற்ற, வசதி குறைவான மாணவர்களுக்கு 8 கோடி ரூபாய்கான கல்வி உதவிகளை கலைச்செல்வி லியோ முத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சாய்ராம் கல்விக்குழும முதன்மை செயல் அலுவலர் சாய்பிரகாஷ் லியோ முத்து, சர்மிளா ராஜா ஊள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நெக்ஸ்ட் தேர்வு இந்தாண்டு முதல் அமல்

நடப்பு கல்வியாண்டு முதல், எம்.பி.பி.எஸ்., மாணவர்களுக்கு, தேசிய எக்ஸிட் டெஸ்ட் என்ற, ‘நெக்ஸ்ட்’ தேர்வு அமல்படுத்தப்படும் என, தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. தேசிய மருத்துவ ஆணையம் நெக்ஸ்ட் நிலை 1, நெக்ஸ்ட் நிலை 2 என இரண்டு கட்டங்களாக தேர்வு நடத்த உள்ளது. அதன்படி, ஐந்தரை ஆண்டுகள் கொண்ட எம்.பி.பி.எஸ்., படிப்பில், முதல் நான்கரை ஆண்டுகள் முடித்தபின், நெக்ஸ்ட் நிலை 1 தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். அப்போது தான் ஓராண்டு பயிற்சி டாக்டராக […]