மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சிலம்ப பயிற்சி தாம்பரம் மேயர் தகவல்

தமிழக அரசு சிலப்ப விளையாட்டுக்கு கல்வி, உயர் கல்வியில் இடஒதுகீடு அறிவித்த நிலையில் மாணவர்களிடம் சிலம்பம் கற்கும் ஆவர்வம் அதிகரித்துள்ளது. அதுபோல் தாம்பரம் மாநகராட்சி அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் படிக்கும் மாணவ, மணவியர்கள் மாநில அளவிளான சிலம்ப போட்டியில் பங்குபெற்று யுவனேஷ், அகல்யா, சங்கர தனுஷ் ஆகிய மாணவர் முதல் பரிசும், அதுபோல் இரண்டாம் முன்றாம் இடம் என 14 மாணவர்கள் ஒரே போட்டியில் பரிசுகோப்பைகளை பெற்றுவந்தனர். அவர்களை மற்ற பள்ளிமாணவர்கள் முன்னிலையில் நடைபெற்ற பாராட்டுவிழாவில் தாம்பரம் […]
லாட்ஜில் ரூம் போட்டு ஆசிரியர் பாலியல் தொல்லை மாணவி தற்கொலை முயற்சி: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பெற்றோர்; மேலும் பல மாணவிகள் அளித்துள்ள புகாரால் பரபரப்பு
காலாப்பட்டு: லாட்ஜில் ரூம் போட்டு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால், மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானூரையொட்டிள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 350 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி நேற்று பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தாய், மாணவியை மீட்டு விசாரித்தார். அப்போது, பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வரும் மகேஸ்வரன் (38), அரசு விழா […]
குரோம்பேட்டையில் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்

குரோம்பேட்டையில் இயங்கி வரும் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சென்னை மண்டலம் மற்றும் மாவட்டம் சார்பாக நடைப்பெற்ற (டேபிள் டென்னிஸ்) மேசைப் பந்தாட்டம், குண்டு எறிதல், தொடரோட்டம், தடைகளைத் தாண்டி ஓடும் தொடரோட்டம், சிலம்பம், மற்போர் முதலான போட்டிகளில் பங்கேற்று 13 பதக்கங்களைப் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர் மற்றும் இரண்டு மாணவர்கள் மாநில அளவிலான சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
+1, +2 மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு தேதி மாற்றம்?

சென்னை கல்வி மாவட்டத்தில் டிச.7ல் நடைபெறவிருந்த 11, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு தேதி மாற்றப்பட உள்ளதாக தகவல் தேர்வு தேதி மாற்றம் தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தகவல் 7ஆம் தேதி மாணவர்கள் தேர்வுக்கு வருவதில் சிரமம் இருக்கக்கூடும் என்பதால் தேதியை தள்ளிவைக்க ஆலோசிக்கப்படுவதாக தகவல்
கல்லுரி மாணவர்கள் குழப்பம்
சென்னை , காஞ்சிபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லுரி இரண்டிற்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது… இந்நிலையில் கல்லூரிகளில் இன்று பல்கலைக்கழக தேர்வுகள் இருப்பதால், சென்னையில் இருந்து திருவள்ளூர் மாவட்ட கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
செங்கல்பட்டில் விடுமுறை இல்லை: பள்ளிக்கு நனைந்து சென்ற மாணவர்கள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்தார். ஆனால் காலை முதல் தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், முடிச்சூர், வரதராஜபுரம், சேலையூர் செம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைபெய்து வரும் நிலையில் அரசு, அரசு உதவி பெரும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் நனைந்தவாறு பள்ளிக்கு சென்றனர். மேலும் மாணவர்களை பெற்றோர் பள்ளிக்கு இருசக்கர வாகனங்களில் நனைந்தவாறு அழைத்து சென்றனர்…
கோவளத்தில் பீச் வாலிபால் : 108 அணிகள் பங்கேற்பு

செங்கல்பட்டு மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் கோவளத்தில் பள்ளி மாணவர்களுக்கு இடையே நடைபெறும் இரண்டுநாள் பீச் வாலிபால் போட்டியை முதன்மை கல்வி அலுவலர் சி.கற்பகம் துவக்கிவைத்தார். 40 மகளிர் 68 ஆடவர் அணிகள் என மொத்தம் 108 அணிகள் பங்கேற்ற நிலையில் ஜினியர், சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் என மூன்று பிரிவுகளில் ஆடவர், மகளிர் என தனித்தனியே நாக் அவுட் முறையில் போட்டிகள் நடைபெறுகிறது. கடற்கரை மணலில் நடைபெற்ற பீச் வாலிபால் போட்டியில் பங்கேற்ற அணிகள் […]
ஒரு பாடப்பிரிவில் 240 மாணவர்களை மட்டுமே சேர்க்க வேண்டும் என தற்போதுள்ள நிபந்தனையை தளர்த்த முடிவு

ஒரு பாடப்பிரிவில் 240 மாணவர்களை மட்டுமே சேர்க்க வேண்டும் என தற்போதுள்ள நிபந்தனையை தளர்த்த முடிவு செய்துள்ளனர். வரும் கல்வியாண்டு முதல் எவ்வளவு மாணவர்களை வேண்டுமானாலும் ஒரு பாடப்பிரிவில் சேர்க்கலாம் என ஏ.ஐ.சி.டி.இ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. போதுமான கட்டமைப்பு வசதியும் ஆசிரியர்களும் இருந்தால் அதிக மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.
MBBS மாணவர் சேர்க்கை – அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் இருந்த 86 இடங்களுக்கு தமிழ்நாடு அரசே கலந்தாய்வு நடத்தி நிரப்ப முடிவு

மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஒன்றிய அமைச்சர் மண்சுக் மாண்டவியாவிற்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் உத்தரவு கிடைக்கப் பெற்றுள்ளது.
இதய ஆரோக்கியத்தை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் பேரணி

பள்ளிக்கரணையில் இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்தை பெரும்பாக்கம் குளோபல் கிளினிக்கல் மருத்துவமனை சார்பில் வாக்கத்தான் நடைபெற்றது, 300 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற நிலையில் நடிகர் பிரசன்னா கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளிக்கரணை இந்திய கடல் ஆராய்சி மைய்யத்தில் இருந்து பள்ளிக்கரணை காவல் நிலையம் வரை 4 கி.மீ தூரத்தில் இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்தை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.