அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு எதிர்பாராத விபத்து காரணமாக உயிரிழப்பு / பலத்த காயம் / சிறிய காயம் போன்றவற்றினால் பாதிப்படையும் போது ரூ.1,00,000 வரை நிவாரணத் தொகை வழங்க தொடக்கக்கல்வி இயக்குநருக்கு அதிகாரம் வழங்கி அரசாணை வெளியீடு…

தமிழகம் தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2024-25ம் கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை இன்று முதல் தொடங்குகிறது

ஐந்து வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கலாம் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் திட்டம்

மாணவர்கள் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதும் முறையை நடைமுறைப்படுத்த சி.பி.எஸ்.இ. தீவிரம். இந்தாண்டு நவம்பர் மாதத்தில், 9 முதல் 12-ம் வகுப்பு வரை அறிவியல், கணிதம் உள்ளிட்ட சில பாடங்களில் சோதனை முறையில் அமல்படுத்த ஏற்பாடு.

பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்தல் மற்றும் புதுப்பிக்கும் திட்டத்தை நாளை கோவையில் தொடங்கி வைக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நாளை முதலே இதனை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம்.

மாணவர்கள் வளர் இளம் பருவத்தில், எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக ரூ.35 லட்சம் செலவில் 10 ஆலோசகர்களை பணியமர்த்த உள்ளோம்

சென்னைப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் வளர் இளம் பருவத்தில், எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக ரூ.35 லட்சம் செலவில் 10 ஆலோசகர்களை பணியமர்த்த உள்ளோம். -சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு!

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வரும் 20ம் தேதி முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்

தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் ஹால்டிக்கெட்டுகளை வரும் 20ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிப்பு! www.dge.tn.gov.in என்ற தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

சாய்ராம் கல்லூரி மாணவர்கள் புது கண்டுபிடிப்புகளை வடிவமைக்க ஒப்பந்தம்

திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் உற்பத்தியாளர் மெகா குழுமத்தில் ஸ்ரீசாய்ராம் கல்லூரி மாணவர்கள் புதுகண்டு பிடிப்புகளை வடிவமைக்க விதமான ஏற்பாடு அதற்கான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. தாம்பரம் அடுத்த ஸ்ரீசாய்ராம் கல்லூரியில் நடைபெற்ற ஒப்பந்த நிகழ்சியில் சென்னை திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் அரசு மான்யதுடன் பொது தொழிற்சாலை வளர்ச்சி திட்டத்தில் 40 நிறுவனங்கள் பயன் பெரும்விதமாக 47.5 கோடி மதிப்பிட்டில் அமைக்கப்பட்ட நிலையில் இதில் சிறு குறு நிறுவனங்களும், மாணவர்களும் அவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை வடிவமைக்கும் விதமாக அனுமதி […]

நீலாங்கரை முதல் மெரினா வரை கடலில் நீந்தி 3 சிறுவர்கள் சாதனை

சென்னையை சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்த்தனுஸ்ரீ, இவரது மகள் தாரகை ஆராதனா(10), மற்றும் தங்கை மகன்கள் கவி அஸ்வின்(14), நிஷ்விக்(8) ஆகிய மூவரும் கடல் மாசு தடுக்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சென்னை நீலாங்கரை கடற்கரையில் கடலில் நீந்த துவங்கி சென்னை மெரினா கடற்கரை வரை 20 கி.மீ தூரத்தை 5 மணி நேரம் 25 நிமிடங்களின் கடந்து சாதனை புரிந்தனர். இந்த சாதனையை அசிஸ்ட் வேல்டு ரெக்கர்ட்ஸ் நிறுவனம் சாதனை புத்தகத்தில் இடம் […]

மாடம்பாக்கம் ஏரியில் மூழ்கிய 2பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் ஏ.எல்.எஸ் நகர் அருகே மாடம்பாக்கம் ஏரியில் முழுகிய மாநகராட்சி பள்ளி 6ம் வகுப்பு மாணவன் சந்திரஸ்(12), ஒன்றாம் வகுப்பு மாணவன் தர்ஷன்(6) அகிய இருவர் உயிரிழப்பு, உடல்களை மீட்ட அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள பாரத் மெடிக்கல் கல்லூரியில் கொண்டு சென்ற நிலையில் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தகவல், சேலையூர் போலீசார் பிரேதங்களை கைப்பற்றி விசாரணை..