இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் கடும் போட்டி!..

80 ஆயிரம் இடங்களுக்கு இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம் அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்ட தனியார் பள்ளிகளில் இன்று குலுக்கல் மூலமாக குழந்தைகள் தேர்வு சென்னையில் 636 தனியார் பள்ளிகளில் குலுக்கல் நடைபெறுவதாக அறிவிப்பு ஆர்டிஇ-க்கு ஒதுக்கப்பட்ட இடங்களை விட கூடுதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பதால், பெற்றோர் முன் குலுக்கல் நடைபெறுகிறது சென்னையில் மட்டும் 8000 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன

நாடு முழுவதும் ஐ.ஐ.டி.க்களில் இந்த ஆண்டு படிப்பை முடித்த 8,000 மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை

நாடு முழுவதும் உள்ள 23 ஐ.ஐ.டி.க்களில் இந்த ஆண்டு படிப்பை முடித்த 38 சதவீத மாணவர்கள் வேலை தேடி வருகின்றனர். 2024-ல் 21,500 மாணவர்கள் படிப்பை முடித்த நிலையில் 13,410 பேர் பணியில் சேர்ந்தனர்.

சிபிஎஸ்சி தேர்வில் சாதனை படைத்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைத்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா. மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ 2023-24 ஆம் ஆண்டுக்கான 12-ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அடுத்தடுத்து வெளியாகியதில் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொது தேர்வில் நாடு முழுவதும் 87.98% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர் இதில் சென்னையை பொறுத்த வரை 98.47 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தநிலையில் சென்னையில் […]

ஊரப்பாக்கம் கல்குவாரியில் குளிக்கச் சென்ற மூன்று மாணவர்கள் மூழ்கி சாவு

ஊரப்பாக்கம் அடுத்த கீரப்பாக்கம் கல்குவாரியில குளிக்க சென்ற மூன்று மாணவர்கள் பலி.. ஒருவர் சடலம் மீட்பு செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் கல்குவாரியில குளிக்க சென்ற பொத்தேரி எஸ்ஆர்எம் வள்ளியம்மை கல்லூரியில் பயின்று வந்த B.E.,இரண்டாம் ஆண்டு மாணவர்கள் முகமது இஸ்மாயில், விஜய்சாரதி, தீபக்சாரதி உள்ளிட்ட மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி பலியாகினர். தற்போது சடலத்தை தீயணைப்பு துறையினர் மீட்டு வருகின்றனர். இதில் இரண்டு மணிநேர போராட்த்திற்கு பிறகு விஜய்சாரதி உடல் மீட்கப்பட்ட நிலையில் மற்ற இருவரது உடல் […]

40,000 மாணவர்கள் ‘ஆப்சென்ட்’ : வீடுதேடி சென்று வீடு தேடிச் சென்று பேசி, துணை தேர்வில் பங்கேற்க வைக்க ஆசிரியர்களுக்கு அறிவுரை

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுகளில், ‘ஆப்சென்ட்’ ஆன, 40,000 மாணவர்களை, வீடு தேடிச் சென்று பேசி, துணை தேர்வில் பங்கேற்க வைக்க வைக்கும்படி, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுக்கான, விடைத்தாள் மதிப்பீடு நடந்து முடிந்துள்ளது. வரும், 6ம் தேதி பிளஸ் 2வுக்கும், 10ம் தேதி – 10ம் வகுப்புக்கும், 14ம் தேதி – பிளஸ் 1க்கும் தேர்வு முடிவுகள் […]

சென்னை கிறிஸ்தவ கல்லூரி இதழியல் துறை மாணவர்கள் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தினர்

இதில் தனியார் காவல் நிறுவனத்தின் தலைவர் கார்த்திகேயன், தகவல் பாதுகாப்பு துறை துணைத்தலைவர் பழனி குமார் ஆறுமுகம், தனியார் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த திருமதி பி சாந்தி தேவி, உளவியல் நிபுணர் திருமதி சங்கவி சவுந்தரராஜன், ஹேக்கர் பி ரங்கநாதன் ஆகியோர் பங்கேற்று சைபர் செக்யூரிட்டி தொடர்பான பல்வேறு விளக்கங்களை அளித்தனர். கண்காட்சியும் நடத்தப்பட்டது. இறுதியில் எழுத்தாளர் மனுஷ்ய புத்திரனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

குரோம்பேட்டை நேருநகர், ஸ்ரீ அய்யாசாமி அய்யர் துவக்க பள்ளியில் சென்றவாரம் பெற்றோர், ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் வகுப்பறை செயல்பாடுகளான கதை, நாடகம், தனிநடிப்பு, உரையாடல், பாடல், கும்மி, வில்லுப்பாட்டின் மூலம் எண்ணும், எழுத்தும் செயல்பாடுகளையும் பெற்றோர்கள் முன் சிறப்பாக நிகழ்த்தி காட்டினார்கள். பெற்றோருக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்தனர்.

கேளம்பாக்கத்தில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

திருப்போரூர் ஒன்றியம் கேளம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் 2024-2025 ஆம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி ராணி எல்லப்பன் அவர்களது தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி ரேவதி அவர்களும், கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திரு கே.பாஸ்கரன், வார்டு உறுப்பினர்கள் கோதண்டராமன், கே டி கே பழனிவேல், கலாவதி தணிகாசலம், திருவள்ளுவர் கல்வி மன்ற நிறுவனர் திரு கா.கோ.பழனி மற்றும் பள்ளி […]

தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற உள்ளன

ஏப்ரல் 13ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை. ஆசிரியர்கள் மாணவர்களின் விடைத்தாள் திருத்துதல், தேர்ச்சி அறிக்கை தயார் செய்தல் மற்றும் அடுத்த கல்வி ஆண்டின் மாணவர் சேர்க்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஏப்ரல் 26ஆம் தேதி இந்த கல்வி ஆண்டின் கடைசி வேலை நாளாகும். கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்-தமிழ்நாடு அரசு.

பள்ளிக்கரணையில் இருசக்கர வாகனம் தடுப்புச் சுவரில் மோதி மாணவன் உயிரிழப்பு

பள்ளிகரனை அருகே இருசக்கர வாகனம் கட்டுபாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதியதில் சிறுவன் உயிரிழப்பு சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் விஷ்வேஸ் (16) பத்தாம் வகுப்பு படித்து வந்தவர் நேற்று தனது நண்பர் ஹரிஹாசனுடன் வேளச்சேரி செல்வதற்காக மேடாவாக்கம் மேம்பாலம் வழியாக சென்று கொண்டிருந்த போது கட்டுபாட்டை இழந்த இருசக்கர வாகனம் தடுப்பு சுவற்றில் மோதி சாலையில் விழுந்ததில் விஷ்வேஸ் தலையில் பலத்த காயமடைந்தார் ஹரிஹாசன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். விப்த்தை நேரில் கண்டவர்கள் […]