இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் சேரும் இந்திய மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி: ஆக்ஸ்ஃபோர்டு கல்வி மையம் வழங்குகிறது

சென்னை: இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் சேரும் இந்திய மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படும் என்று ஆக்ஸ்ஃபோர்டு சர்வதேச கல்வி சேவைகள் மையம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் உயர்கல்வி படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு ஆக்ஸ்ஃபோர்டு சர்வதேச கல்வி சேவைகள் மையம் (ஓஐஇஎஸ்) சார்பில் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னையில் இதன் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஆக்ஸ்ஃபோர்டு சர்வதேச கல்வி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் மோஹித் கம்பீர், தலைமை வணிக அதிகாரி ஆண்டி கால்டுவெல், […]

70 பேர் தேசியக்கொடி வரைந்து உலகசாதனை

சென்னை கோபாலபுரத்தில் உள்ள மேனகா ஆர்ட்ஸ் அகாடமி சார்பில் 70 பேர் கொண்ட குழு உலக சாதனை நிகழ்ச்சி ஒன்றினை சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக நூலக வளாகத்தில் நிகழ்த்தியது. ரங்கோலி, கொலாஜ் மற்றும் பெயிண்டிங் என மூன்று வகைகளில் சிறுவர்கள் நடுவயதினர் பெரியவர்கள் என்று மொத்தம் 70 பேர் செங்கோட்டையில் தேசிய கொடி என்ற தலைப்பிலான வண்ண படத்தை 44 நிமிடங்கள் என்ற திட்டமிடப்பட்டு சுமார் 37 நிமிடங்கள் 21 வினாடிகளிலேயே உருவாக்கி உலக சாதனை […]

விமான நிலையத்தில் உறுப்பு தான விழிப்புணர்வு பேரணி

சென்னை விமான நிலையத்தில் உலக உடல் உறுப்பு தானம் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி சென்னை விமான நிலையத்தில் உலக உடல் உறுப்பு தானம் தினத்தை முன்னிட்டு ஏர்போர்ட் ஆதாரிட்டி ஆப் இந்தியாவுடன் இணைந்து காவேரி தனியார் மருத்துவமனை, எஸ் ஆர் எம் தனியார் மருத்துவக் கல்லூரி இணைந்து உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது, இந்த நிகழ்ச்சியில் 400க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு சென்னை விமான நிலையத்தின் டெர்மினல் […]

கார்கில் போர் வெற்றியின் 25 வது ஆண்டு விழா அஸ்தினாபுரம் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடந்தது

இந்த நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். கார்த்திக் கண்ணன், முன்னிலை வசித்தார். மக்கள் இயக்க நிர்வாகி வெங்கட்ராமன் மூ.கு.கிருஷ்ணமூர்த்தி, தேவராஜன், சினிமா துணை இயக்குநர். மற்றும் முனுசாமி வரதன் செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில் சுமார் 300க்கும் மேற்பட்ட பள்ளிமாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்கள் ஆசிரியர்கள் போர்வீரர் நினைவு ஸ்தூபிக்கு புஷ்பாஞ்சலி செலுத்தினர்.

ஆறாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வரும் ஆகஸ்ட் முதல் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது

இதற்காக நிதி ஒதுக்கப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தில் இணையும் மாணவர்கள் ஆதார் எண் இணைத்து மனு செய்ய வேண்டும்.ஏற்கனவே மாணவிகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டிற்கு நல்ல தலைவர்கள் தேவை – தவெக தலைவர் விஜய்

நம்முடைய தமிழ்நாட்டில் சிறந்த மருத்துவர்கள், பொறியியல் வல்லுநர்கள், வழக்கறிஞர்கள் உள்ளார்கள். ஆனால், நமக்கு தற்போது தேவையாக உள்ளது நல்ல தலைவர்கள் தான். நான் தலைவர்கள் என்று சொல்வது அரசியல் மட்டுமல்ல; ஒவ்வொரு துறையிலும் நமக்கு தலைவர்கள் தேவை. எதிர்காலத்தில் அரசியல் துறையும் ஒரு விருப்பமாக இருக்க வேண்டும். நன்றாக படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் தானே? நீங்களே சொல்லுங்கள். அரசாங்கத்தை விட நம்ம Lifeஐ நாமதான் பார்த்துக்கணும். உங்களுடைய மனக்கட்டுப்பாடு, தனி மனித ஒழுக்கத்தை வளர்த்துக்குங்க. இப்போதைக்கு […]

கல்லூரிகளில் ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை

இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை மாணவர் சேர்க்கை நடத்த யுஜிசி அனுமதி. வரும் கல்வியாண்டு முதல் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மாணவர்களை சேர்க்கலாம் என பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவு.

பள்ளிகள் திறப்பு: மாணவர்களுக்கு இனிப்பு வழங்கிய தாம்பரம் மேயர்

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண்.32, கடப்பேரி பகுதியில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து இன்று அன்று வந்த மாணவ மாணவியர்கள் மற்றும் புதியதாக அப்பள்ளியில் சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு தாம்பரம் மாநகராட்சி மேயர். திருமதி. வசந்தகுமாரி கமலகண்ணன், B.Tech., அவர்களால் இனிப்பு வழங்கி மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும், மேற்படி பள்ளியின் கழிவறைகள், பள்ளி வகுப்பறைகள், சத்துணவு கூடம் ஆகியவை ஆய்வு மேற்கொண்டார்கள்.

தமிழ்நாடு முழுவதும் நாளை டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் குரூப்-4 எழுத்துத் தேர்வு நாளை நடைபெறுகிறது. வி.ஏ.ஓ., வனக்காவலர் உள்ளிட்ட 6,244 காலிப் பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வை சுமார் 20 லட்சம் எழுதுகின்றனர். நாளை காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை குரூப்-4 தேர்வு நடைபெறுகிறது. தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் சென்றுவிட வேண்டும்.

அப்துல் கலாம் நற்பணிமன்றம் சார்பில் மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம்

தாம்பரம் மாநகராட்சி காந்தி நகரில் அப்துல் கலாம் நற்பணி சார்பில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது. தாம்பரம் மாநகராட்சி 26 வது வார்டில் காந்தி நகர் A P J அப்துல் கலாம் நற்பணி மன்ற தலைவர் குலசேகரன் ஏற்பாட்டில் 80 மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம்,ஜாமெண்டரி பாக்ஸ், புத்தக பை போன்ற பொருட்கள் காந்திஜி திருமண மண்டபத்தில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக 26 ஆவது வார்டு மதிமுக மாமன்ற மாமன்ற உறுப்பினர் […]