ராகிங் கொடுமையால் மாணவர் தற்கொலை

மேற்கு வங்கத்தில் ராகிங் கொடுமையால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜாதவ்பூர் பல்கலையில் படித்த முதலாம் ஆண்டு மாணவர் ஸ்வப்னோதீப் குண்டு (18), ராகிங் டார்ச்சரால் விடுதியின் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். காவல்துறை விசாரணையில், சில மாணவர்கள் மொட்டை மாடியில் நிர்வாணமாக ஓட கட்டாயப்படுத்தியது தெரியவந்தது.
உயிரை மாய்த்துக்கொள்ளும் சிந்தனை வேண்டாம்: மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

உயிரை மாய்த்துக்கொள்ளும் சிந்தனை வேண்டாம் என மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாணவன் ஜெகதீஸ்வரன், அவரது தந்தை செல்வசேகர் ஆகியோரின் மரணம் நீட் பலிபீடத்தின் இறுதிமரணமாக இருக்கட்டும் என்று கூறியுள்ளார். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். ஜெகதீஸ்வரன் போன்று எத்தனை உயிர்கள் பலியானாலும் ஆளுநர் ரவி போன்றவர்களின் இதயம் கரையப்போவதில்லை எனவும் கூறியுள்ளார்.
தாய் திட்டியதால் தற்கொலை செய்த மாணவன் ஜமீன் பல்லாவரத்தில் பரிதாபம்

ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்தவர் மாரியம்மாள் இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் மாரியம்மாளின் கடைசி மகன் ஜெகதீஷ் என்பவர் தாம்பரம் சானிடோரியத்தில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று காலை 08.00 மணி அளவில் ஜெகதீஷின் தாயார் மாரியம்மாள் வீட்டிற்கு தேவையான தண்ணீர் பிடித்து வைக்காததை கண்டித்து அண்ணன் ஜனார்த்தனன் மற்றும் ஜெகதீஷ் ஆகிய இருவரையும் திட்டி கையால் அடித்து விட்டு அவர் வேலைக்கு கிளம்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த […]