அமெரிக்காவில் இந்திய மாணவருக்கு கத்திக்குத்து

வாஷிங்டன்: அமெரிக்காவில் 24 வயதான வருண் என்ற இந்திய மாணவரை, அந்நாட்டு வாலிபர் கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த வருண், உயிர் பிழைப்பது கடினம் என டாக்டர்கள் கூறியுள்ளனர். அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள வால்பரைசோ நகரில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் வருண் கத்தியால் தாக்கப்பட்டார். கத்தியால் குத்திய ஜோர்டான் ஆண்ட்ராட்(24) என்ற அமெரிக்க வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது பயங்கர ஆயுதத்தை பயன்படுத்தியது மற்றும் கொலை முயற்சி பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு […]
மாணவிகளிடம் பாலியல் சீண்டல்; அரசுப் பள்ளி ஆசிரியர் கைது

காடையாம்பட்டி அருகே, அரசுப் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அப்பள்ளி ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே நடுப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு ராஜமாணிக்கம் (50) என்பவர் ஆங்கில பட்டதாரி ஆசிரியராகப்பணியாற்றி வருகிறார். இந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வரும் மூன்று மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் (டியூஷன்) எடுப்பதாகச் சொல்லி ஆசிரியர் ராஜமாணிக்கம் அவர்களைத்தனி அறைக்கு […]
நீட் விலக்கு கோரி தாம்பரத்தில் கையெழுத்து இயக்கம்

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி கிழக்கு தாம்பரத்தில் கையெழுத்து இயக்கம்,காஞ்சி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி மாணவரணி மருத்துவர் அணி சார்பில் தாம்பரம் மாநகராட்சி மேயர் வந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் இந்த நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகர கழக துணைச் செயலாளர் பொன் சதாசிவம், அமைப்புசாரா ஓட்டுனர் அணியின் மாவட்ட அமைப்பாளர் தாம்பரம் நாராயணன், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் இன்ஜினியர் ராமமூர்த்தி, மாவட்ட சிறுபான்மை அணி துணை தலைவர் ஷாஜகான், மாவட்ட மகளிர் தொண்டரணி துணை […]
ரோலர் ஸ்கேட்டிங்: ஆசிய சாதனை படைத்த சிட்லபாக்கம் மாணவிக்கு பாராட்டு

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி உட்பட்ட மூன்றாவது மண்டலத்தில் உள்ள சிட்லபாக்கம் 43-வது வார்டுக்கு உட்பட்ட துரைசாமி நகரில் உள்ள சாகச நாயகி செல்வி.கார்த்திகா ஜெகதீஸ்வரன் ஆசியா கோப்பை ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டில் வெண்கல பதக்கத்தை வென்று இந்தியாவிற்கு அதிலும் சிட்லபாக்கத்திற்கு பெருமை சேர்த்த சாகச நாயகிக்கும் மற்றும் உறுதுணையாக இருந்த குடும்பத்தினருக்கும் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆர் ராஜா அவர்கள் நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் மண்டல குழு தலைவர் […]
அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்த மாணவி

பீகார் மாநிலம் பாட்னாவில் 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தேர்வில் தோல்வியடைந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான நிலையில், அவர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே குதித்துள்ளார். அந்த நேரத்தில் இளைஞர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு தற்கொலைக்கு முயன்ற மாணவியை தைரியமாக காப்பாற்றியுள்ளார். இதன் காரணமாக சிறிய அளவிலான காயத்துடன் மாணவி மீட்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவி மாடியில் இருந்து குதிக்கும் வீடியோவும் வெளியாகியுள்ளது.
மேடவாக்கத்தில் கல்லூரி மாணவிக்கு கத்திக் குத்து. ஒரு தலை காதலால் வாலிபர் விபரீதம்

சென்னை மேடவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வண்டலூரில் உள்ள கல்லூரிக்கு செல்வதற்காக கனிஷ்கா(16), என்ற மாணவி காத்திருந்த போது ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த வசந்த என்பவர் கத்தியால் மாணவியை சரமாறியாக குத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார். இதில் டிப்ளமோ படிக்கும் கல்லூரி மாணவிக்கு தலை, தொடை, கைவிரல், முகத்தின் தாடை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் […]
“சென்னை திருவொற்றியூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், போதைப் பாக்கு போட்டதை கண்டித்த ஆசிரியரை மாணவன் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது;

ஆசிரியர்கள் கொண்டாடப்பட வேண்டிய ஆசிரியர் நாளில் இப்படி ஒரு நிகழ்வு நடந்ததை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை; தமிழக அரசு நினைத்தால் ஒரே ஆணையில் அனைத்து மதுக்கடைகளையும் மூட முடியும், சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் அனைத்து போதைப் பொருட்களையும் ஒரே நாளில் கட்டுப்படுத்த முடியும்; இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சமுதாயத்தையும் காக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு இருப்பதால், அனைத்து வகையான போதைப் பொருட்களையும் முற்றிலுமான ஒழித்து தமிழ்நாட்டை போதையில்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க […]
இஸ்லாமிய மாணவர்களை தாக்கிய விவகாரம்!

பள்ளியை நிரந்தரமாக மூட உத்தரபிரதேச முதல்வர் யோகி உத்தரவு.
ராமநாதபுரம் மாவட்டம் பாப்பனம் என்ற ஊரை சேர்ந்த மாணவன், சுதந்திர தின விழா நான் கண்டு ரசிக்கணும் என கடிதம் எழுதி இருந்தான்

அந்த சிறுவனுக்கு சிறப்பு அனுமதியுடன் இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள கொத்தலத்தில் கொடியேற்றும் நிகழ்வை காண வந்த காட்சி.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: மூத்த அதிகாரி சஸ்பெண்ட்

தெலங்கானா, ஐதராபாத் அருகே உள்ள ஹக்கிம்பேட் நகரில் உள்ள மாநில விளையாட்டு பள்ளியில் மூத்த அதிகாரி ஒருவர், மாணவிகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், அந்த அதிகாரியை பணியிடை நீக்கம் செய்வதாக அம்மாநில விளையாட்டுதுறை அமைச்சர் அறிவித்தார். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.