ராமேஸ்வரம் மீனவர்கள் திடீர் வேலைநிறுத்தம்

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று (ஆகஸ்ட் 28) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். துறைமுகத்தில் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது. படகு மூழ்கி மாயமான மீனவர்களை மீட்டு தரவும் வலியுறுத்தியுள்ளனர். மீனவர்கள் வேலைநிறுத்தத்தால் நாளொன்றுக்கு ரூ.10 கோடிக்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு சென்ற மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.

சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் திடீர் ஸ்ட்ரைக்…பல்கலைக்கழக பணிகள் முடக்கம்..

3 மாத சம்பளம் வழங்கவில்லை என்று கூறி பேராசிரியர்களே சாலையில் இறங்கி போராடுவது உயர் கல்வித் துறையின் சீர்கேட்டை பறை சாற்றுவதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

வரி உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்; தமிழகம் முழுவதும் இன்று லாரிகள் ஓடாது

லாரிகள் உட்பட அனைத்து வாகனங்களுக்கும் வரி உயர்த்தப்பட்டுள்ளதைக் கண்டித்து, லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் லாரிகள், அந்தந்த மாநில எல்லைகளில் நிறுத்தி வைப்பு.

3-வது நாளாக நீடிக்கும் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம்: ராமேசுவரத்தில் 25 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிப்பு

ராமேசுவரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 14-ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற போது 5 விசைப்படகுகளுடன் 27 மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கூறி சிறைபிடித்து சென்றனர். இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களுக்கு இரண்டு முறை காவல் நீட்டிக்கப்பட்டது.இதேபோன்று கடந்த வாரம் மீன்பிடிக்க சென்ற போது 5 விசைப்படகுகளுடன் 37 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். 64 மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதே போன்று […]